வெள்ளி, டிசம்பர் 05, 2014

கொள்வோர் கொள்க


பண்டாரம் என்றே பரிகசித்துக் கைகொட்டி
கொண்டாடும் அன்பர் குரைக்கட்டும் - திண்டாடிப்
போவதில்லை எந்தன் புலமைப் பெரும்பயணம்
ஆவதில்லை ஒன்றும் அதற்கு.
சிவகுமாரன் 
04.12.2014

13 கருத்துகள்:

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!

போற்றினும் தூற்றினும் போகட்டும் விட்டுவிடு
ஆற்றும் செயலை அறி!

பொறி பறக்கும் வெண்பாப் பொழிவு.!..?
ஓயாதீர்கள் சகோ! தொடருங்கள்.!
வாழ்த்துகிறேன்!

G.M Balasubramaniam சொன்னது…

யாராவது ஏதாவது சொன்னால் பாதிப்பு ஏற்படுகிறதா சிவகுமாரா. தொடரட்டும் உந்தன் கவிதைப் பயணம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கொள்வோர் கொள்கை என்றிருந்தாலும் கூட பொருத்தமே. நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்... சொல்வார் சொல் நமக்கெதற்கு... விட்டுவிடுங்கள்.. உங்கள் வழிப்பயணம் சீராக நடக்கட்டும்...

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி சகோதரி. நீங்கள் எல்லாம் இருக்க எனக்கென்ன மனக்கவலை?

சிவகுமாரன் சொன்னது…

இல்லை அய்யா. ஆனாலும் "உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது " என்றுதான் கண்ணதாசன் சொன்னாரே அன்றி "உள்ளம் தொடாது" என்று சொல்லவிலலையே

சிவகுமாரன் சொன்னது…

பொருத்தம் தான். ஆனாலும் கண்ணதாசனின் வரிகள் அல்லவா அவை.

நன்றி அய்யா

சிவகுமாரன் சொன்னது…

நன்றி குமார் தங்களின் ஆதரவிற்கு.

Hareesh சொன்னது…

உந்தன் என்பது தவறு உறவே! உன்றன் என்பதே மரபுக் கவிதையில் வர வேண்டும்

Hareesh சொன்னது…

உங்கள் வயது என்ன நண்பரே என்ன படித்தீர்கள் எப்போது மரபைக் கற்றுக் கொண்டீர்

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஹரிஷ்
என் வயது 55.
படித்ததும் வேலை பார்ப்பதும் வேதியியல் துறையில்.
மரபு முறைப்படி கற்றவன் அல்ல. சிறு வயது முதல் கவிதையின் மேல் கொண்ட காதலால், நிறையப் படித்து, நானும் எழுதத் தொடங்கினேன்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி