வெங்கனலில் நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
பொங்குதடி உன்காதல் பூமழையாய்-அங்கிருந்து
ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்
ஆதலினால் காதல் சுகம்.
காட்டுக்குப் போனாலும் காவலென ஓடிவரும்
கூட்டுக்கு மீண்டுமுனைக் கூட்டிவரும் - வாட்டுகிற
கூதலுக்குத் தீயாகும் கோடைக்கு நீராகும்
ஆதலினால் காதல் சுகம்.
சிவகுமாரன்
(ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு நன்றி.)
6 கருத்துகள்:
ஈற்றடி தந்த நண்பருக்கும் அழகாக அமைத்த தங்களுக்கும் நன்றி.
அருமை ஐயா...
காதல் சுகமோ இல்லையோ இதுபோலும் வெண்பாக்கள் சுகம்:)
வணக்கம்
ஐயா
இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்!
அருங்காதல் வெண்பா அமுதென்பேன்! நெஞ்சுள்
பெருங்காதல் இன்பைப் பிணைக்கும்! - உருகுகிறேன்
வண்ணத் தமிழின் வளர்நடையைக் கண்டுநான்!
உண்ண மறந்தேன் உணவு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
ஆஹா அருமையான பா
வாழ்த்துக்கள்,
கருத்துரையிடுக