செவ்வாய், மார்ச் 08, 2016

என்ன எண்ண ?


என்ன என்ன  என்று
எண்ண எண்ண
எண்ணிக்கையற்றுப்
போகிறது
இன்னும் இன்னும்
எண்ண எண்ண !

கூட்டலில் பெருக்கலில்
குறைந்து போகிறது
வகுத்தலில் கழித்தலில்
வளர்ந்து வருகிறது .

எண்ண எண்ண
எண்ண முடியவில்லை
எத்தனை என்று

எண்ண எண்ண
எண்ண முடியவில்லை
எது சரி என்று 

எண்ணிலடங்கா
எண்ணங்கள்
நிலைகொள்வது என்னவோ
சூன்யத்தில் தான்.

எண்ணில் அடங்கினாலும்
என்னில் அடங்காதவை .
என்னில் அடங்கினாலும்
எண்ண அடங்காதவை .

ஒருநாள் வரும்,
எண்ணக் குப்பைகளை
எரித்த சாம்பலில்
உயிர்த்தெழுவேன்
எண்ணங்களற்று.
சிவகுமாரன்



21 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

இந்த எண்ணங்களே எனக்குப் பதிவு எழுதத் துணை. வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்அற்புதம்
மிகக் குறிப்பாக முத்தாய்ப்பு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படிச் சொல்லுங்க...~

ஏகாந்தன் ! சொன்னது…

திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டத்தில் உங்களைக் கண்டுபிடிக்க நேர்ந்தது. கவித்தையில் ஒரு கூர்மை தெரிகிறது. By chance, ஜே.கிருஷ்ணமூர்த்தியைப்பற்றிக் கேள்வியுற்றதுண்டா? அல்லது படித்ததுண்டா? Thoughtless state பற்றியும், இன்னபிறவும் என அவர் சொன்னவைகளை என் 20-ஆவது வயதில் படிக்க நேர்ந்தது.`உயிர்த்தெழுவேன் எண்ணங்களற்று என்று நீங்கள் சொன்னது என்னை அங்கே கொண்டு சென்றது..

சிவகுமாரன் சொன்னது…

நன்றி GMB சார்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ரமணி சார்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி DD சார்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஏகாந்தன். என் சிறுவயதில் என் உறவுக்காரத் தாத்தா புலவர் சண்முகம் ஜே.கே. தத்துவங்களை என் சித்தப்பாகளிடம் பேசும் பொழுது கேட்டிருக்கிறேன். பின்னாளில் என் 23 வது வயதில் என் நண்பன் இராமநாதன் J.K.இன் Freedom from the known புத்தகததைப் பரிசளித்தான். பலமுறை படித்திருக்கிறேன். புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். அவரின் Education and sinificance of life படித்துவிட்டு என் பிள்ளையை J.K foundation நடத்தும் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன்.JK யைப் படிக்க படிக்க சராசரி மனிதர்களிடமிருந்து நாம் வேறுபட்டு விடுவோமோ என்றும் பயந்திருக்கிறேன்.😃
ஆனால் இந்தக் கவிதையை எழுதும் போது உண்மையில் J.k. நினைவில் வரவில்லை. ஆழ்மனதில் பதிந்ததின் விளைவாய்க் கூட இருக்கலாம்.

மீரா செல்வக்குமார் சொன்னது…

இன்று புதிதாய் வந்தேன்..உங்கள் பின்னூட்டத்தின் வழி..

நல்ல நடை...
ரசிக்கிறேன்..வாழ்த்துக்கள்

மீரா செல்வக்குமார் சொன்னது…

இன்று புதிதாய் வந்தேன்..உங்கள் பின்னூட்டத்தின் வழி..

நல்ல நடை...
ரசிக்கிறேன்..வாழ்த்துக்கள்

ஏகாந்தன் ! சொன்னது…

ஜே.கிருஷ்ணமூர்த்தி படித்த தமிழர் ஒருவரை முதல் முறையாக அறிகிறேன். மகிழ்ச்சி.

பொதுவாக நான் நண்பர்களுடன் அளவளாவ நேரிடுகையில் ஜே.கே. போன்ற விஷயங்கள்பற்றி எல்லாம் ப்ரஸ்தாபிப்பதில்லை. ஏனெனில், கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். கேள்விப்பட்டிருந்தாலும் அவர்கள் தலைக்குமேலே சென்றுவிடக்கூடிய விஷயமாக அது அவர்களுக்கு இருக்கும். Generally people are conformist or conservative. Some are pseudo-intellectuals ! JK and UG are just too much for them!
ஜேகே-யின் புது டெல்லி ப்ரசங்கத்திற்கு இருமுறை சென்ற அனுபவம் உண்டு.

சிவகுமாரன் சொன்னது…

த்ங்களை வணங்குகிறேன். J.kஐ படிக்கத் தொடங்கியது 94இல். அவர் மறைந்து பல வருடங்களுக்குப் பிறகு தான். அதுவும் நுனிப்புல் தான். UG உப்பலூர் கோபால்கிருஸ்ணமூர்த்தி, JKஐப் போன்றே ஒரு பிலாசப்ர் . அவ்வளவே தெரியும். தங்களைப் போன்ற படிப்பாளி அல்லன் நான். தங்களின் வலைத்தளம் எது. jkஉடனான அனுபவங்களைப் பகிருங்கள் நன்றி.

ஏகாந்தன் ! சொன்னது…

பெரிய வார்த்தைகளைப் போட்டுவிட்டீர்கள்! அதற்குத் தகுதியுடையவனா நான் என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு படித்தவன் அல்ல நான். குறைவாக, ஆனால் மிக முக்கியமான புத்தகங்களைப் படிக்க நேர்ந்தவன். அவற்றில் தத்துவம், கவிதை போன்றவை பிரதானமானவை. அவ்வளவுதான்.

எனது வலைப்பக்கம் `ஏகாந்தன்` என்கிற பெயரிலேயே 2 வருடமாக ஓடிக்கொண்டிருக்கிறது (aekaanthan.wordpress.com). மென்கவிதைகள் என ஆரம்பித்து, சில கட்டுரைகள் (சமூகம், ஆன்மிகம் போன்றவை) என அவ்வப்போது எழுதுகிறேன். ஒரு கிரிக்கெட் பைத்தியமாகவும் இருப்பதால் அது சம்பந்தமான கட்டுரைகள் ஆங்காங்கே திடீரென முளைக்கும்.

எனது கவிதைகள் அளவில் சிறியவை. உரைநடையோ அனுமார் வாலென நீளும் தன்மைகொண்டவை. ஜேகே பற்றி ஒரு சிறிய அறிமுகத்தோடு ஆரம்பிக்கலாம். அவருடைய தத்துவமொழி,வெளிப்பாடு மரபு சார்ந்ததல்ல என்பதால், மொழியாக்கம் சிக்கலானது. எப்படியும், இரண்டு மூன்று பகுதிகளுக்கு கட்டுரை நீளக்கூடும். பார்க்கலாம். கருத்துக்கு நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி மீரா

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஏகாந்தன். தங்கள் வலை வந்தேன். அழகிய நறுக்கென்ற கவிதைகள். பின்னூட்டமிட்டேன் . வெளிவரவில்லை.

ஏகாந்தன் ! சொன்னது…

உங்கள் பின்னூட்டங்கள் இப்போது வெளிவந்துவிட்டது!
நேற்று பூராவும் நான் மற்றவர் தளங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், என் பக்கத்தில் பின்னூட்டங்கள் அனுமதிக்காகக் காத்திருப்பதை கவனிக்கவில்லை. இன்று காலைதான் பார்க்க நேர்ந்தது. நன்றி.

ஏகாந்தன் ! சொன்னது…

நீங்கள் லௌகீக தளத்திலிருந்து பார்த்து எழுதியிருக்கிறீர்கள். அதுவும் சரியே. ஆயினும், லௌகீகம் தாண்டிய ஒரு பரிமாணம் உண்டு. அங்கிருந்து இதனைப் படித்துப் பார்த்தால்...

அப்பாதுரை சொன்னது…

என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப்பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன் சொன்ன கதை புரியவில்லை...


இது தான் எனக்குப் புரிகிறது.

அப்பாதுரை சொன்னது…

ஏகாந்தனின் கருத்துக்கள் கவர்கின்றன.

பெயரில்லா சொன்னது…

Awesome

சிவகுமாரன் சொன்னது…

Thanks Sis