காதல் வெண்பாக்கள் 54
எனக்குள்ளே நீயும் இருப்பதினால், மோகம்
தனக்குள்ளே பேசித் தணியும் - உனக்குள்ளும்
நானிருக்க என்றும் நலியாது நம்காதல்
வானிருக்கும் காலம் வரை.
வரைந்தேன் இதயத்தில், வண்ணமாய் நானே
கரைந்தேன் அதனுள் கலந்து - திறந்தே
அடிக்கடி பார்த்துநான் ஆறுதல் சொல்வேன்
துடிக்கும் இதயத்தைத் தொட்டு
சிவகுமாரன்
19 கருத்துகள்:
மிக மிக அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமை
அருமை
அருமை அருமை சிவகுமாரன்!! வாழ்த்துகள்!
ஆஹா... கவிதை அழகு... அற்புதம்...
காதல் பாடல்கள் எழுதும்போது யாரை முன்னிலைப் படுத்தி எழுதுவீர்கள் சிவகுமாரா
இதென்ன கேள்வி அய்யா? பாரதிக்கு மட்டும் தான் செல்லம்மா இருக்கிறாளா என்ன?😍
நன்றி குமார்
நன்றி அய்யா
நன்றி அய்யா
நன்றி அய்யா
நன்றாக வந்திருக்கின்றன; தொடருங்கள்.
நன்றி
நன்றி
அடுத்த கவிதையை எதிர்பார்த்து
பதிவு வந்துத் திரும்புகிறேன்
இந்தியாவுக்கு வந்து விட்டீர்களா ?
அடுத்த கவிதையை எதிர்பார்த்து
பதிவு வந்துத் திரும்புகிறேன்
இந்தியாவுக்கு வந்து விட்டீர்களா ?
அடுத்த பதிவு தயார் .
ஆப்பிரிக்காவில் தான் இன்னும்
வெண்பாவின் கவர்ச்சியே அதன் ஈற்றடியில்தான். அது அற்புதமாய் அமைந்துள்ளது.ஈற்றடியை முதலில் எழுதி விட்டீர்கள் என நினைக்கறேன்.
ஆகா சூட்சுமத்தை கண்டுபிடிச்சிட்டீங்களே முரளி
மிகவும் நுட்பமான கருத்துக்களை எளிய முறையிலே பாமர மக்களிடம் எடுத்துச் சென்றவர் கபீர்.
கபீர் கிரந்தங்களை 1957 முதல் படிக்கத்துவங்கியது முதல் இன்று வரை படித்து, அதை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சொல்லியும் கொடுத்தும் கபீரின் மேல் எனக்குள்ள பற்று அதிகரித்துக்கொண்டே சென்றது.
சில ஆண்டுகட்கு முன்பு கபீரன்பன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பெங்களூரு சேர்ந்த ஒரு வலைப்பதிவாளர் கபீரின் தத்துவங்களை பற்றி தொடர்ந்து எழுதி வந்தா ர் ஒரு ஐந்து வருடங்களுக்கு. அவரது பதிவுகளிலும் கபீரின் பெருமை, புலமை, பற்றி பெரிதும் எழுத, பின்னூட்டங்களின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.
சிவகுமாரன் அவர்கள் தமது எழுத்திலே கபீரின் எண்ணங்களுக்கு ஒரு புத்துயிர் தந்து இருக்கிறார்.
கிட்டத்தட்ட 15000 செய்யுட்களுக்கு மேலே கபீர் கிரந்தம் இருக்கிறது.
அவற்றை பிழிந்து ரசம் தந்திட வேண்டுகிறேன்.
தமிழ் இலக்கிய உலகிற்கு நீங்கள் செய்யும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
கருத்துரையிடுக