செவ்வாய், நவம்பர் 01, 2016

கபீரும் நானும் 25



पीछे लागा जाई था,  लोक वेद के साथी ।
आगैं थैं सतगुरु मिल्या, दीपक दिया साथि ॥

Peeche laagaa jaayi thaa, lok vedh ke saathi

Aage dhey sadguru milya, dheepak dhiya saathi

I was wandering helplessly in the narrow streets of vedhas .

On the way the Guru met me and handed me the lamp .

வேதம் காட்டும் வழியில் சென்றேன்

   விடியா இருளாய் இலக்கு.
பாதையில் வந்தென் குருவே தந்தார்
    பயணத் துணையாய் விளக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------21.

माटी का एक नाग बनके पूजे लोग लगाया ...
ज़िंदा नाग जब घर में निकले ले लाठी धमकाया ...

Maati ka ek naag banake puje log lugaya... 
Zinda naag jab ghar mein nikale le laathi dhamkaya...

People used to make idol of snake and do worship on it.
But when it enters alive into home ,they look for stick to kill it.

பஞ்ச உலோகப் பாம்பினைச் செய்து
    பணிந்து வணங்குவார் நயந்து.
நஞ்சிலாப் பாம்பு வீட்டில் நுழைந்தால்
   நையப் புடைப்பார் பயந்து.
------------------------------------------------------------------------------------------------------------------22.

जिन्दा बाप कोई न पूजे मरे बाढ़ पुजवाया 
मुट्टी भर चावल लेके कौवे को बाप बनाया 

Jintha baap koi na pooje mare baadh pujvaayaa

mutti bhar chaaval leke kauve ko baap banaaya 

People do not take care of their father when he is alive.
After his death , feeding crow with a bowl of rice,

இருக்கும் போதினில் தந்தையை மதியார்

    இறந்தபின் கொள்வார் சோகம்.
உருண்டைச் சோறு உருட்டி எடுத்து
   உரக்க அழைப்பார் காகம்.
--------------------------------------------------------------------------------------------------------------------23.

तेरा साई तहज में  जो  पुहुपां  में बॉस 
कस्तूरी मिर्गा का ज्यो फिर फिर डूंडै घास..

tera saayee thuj mein jo puhupan mein baas
kasturi mirga ka jyo phir phir doondai ghas.
..
Your God is within you but you are searching outside.
Just as the kasturi deer searches for the smell and odour
 without knowing that they come only from inside its body.

தன்னுள் இருக்கும் சுகந்தம் அறியா.
  தேடும் புல்லில் கஸ்தூரி.
உன்னுள் உறைவான் உந்தன் கடவுள்.
  உன்னை நீயே கண்டுஅறி.
-------------------------------------------------------------------------------------------------------------------24.

गोता मारा सिंधु में, मॊती लाये पैठि 
वह क्या मोती पायेंगे, रहे किनारे पैठि 

Gothaa maara sindhu mein mothi laye baiti
vah kya mothi paayenge rahe kinare baiti 

Those who dare to go into deep sea will bring pearl.
How will they get it if they remain in seashore .

ஆழக் கடலில் குதித்தால் தானே
   அள்ளி வரலாம் முத்து.
கோழை போலக் கரையில் நின்றால்
    கிளிஞ்சல் தானுன் சொத்து.
----------------------------------------------------------------------------------------------------------------------25.

...தொடர்வோம்.. .
சிவகுமாரன் 



11 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உன்னுள் உறைவான் உந்தன் கடவுள்.
உன்னை நீயே கண்டுஅறி.

அருமை நண்பரே
நன்றி

KILLERGEE Devakottai சொன்னது…

இருக்கும் போதினில் தந்தையை மதியார்
இறந்தபின் கொள்வார் சோகம்.
உருண்டைச் சோறு உருட்டி எடுத்து
உரக்க அழைப்பார் காகம்.

மிகவும் இரசித்தேன் கவிஞரே உண்மை... உண்மை...
த.ம.1

G.M Balasubramaniam சொன்னது…

நான் கபீரைப் படித்ததில்லை ஆனால் இங்கு வெளியாகி இருக்கும் பல விஷயங்களை நானும் எழுதி இருக்கிறேன் எனக்குப் புகழோ பேரோ இல்லாததால் அவை ரசிக்கப் படுவதில்லை.

கீதமஞ்சரி சொன்னது…

வார்த்தைகள் அருவியென அழகாக வந்து வீழ்கின்றன..பாராட்டுகள் சிவகுமாரன். இத்தனைநாளும் எப்படி உங்கள் பதிவுகளையெல்லாம் தவறவிட்டேன் என்று தெரியவில்லை.. இனி தொடர்வேன். கபீரை இந்தித்தேர்வுக்காகப் படித்த காலம் ஒன்று. இப்போது மீண்டும் நினைவுக்கு வந்து மலரச் செய்வது நன்று. :)))

பெயரில்லா சொன்னது…

4 மொழிகள் மிக சிறப்பாக உள்ளன.
நன்று..நன்று சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.. டென்மார்க்
வேதாவின் வலை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பொருள் பொதிந்த கவிதை.கபீர் தாசரின் கவிதை நயத்தை உங்கள் அற்புதக் தமிழாக்கம் மூலம் அறிய முடிகிறது. பொருத்தமான வாரத்தைகள் கொண்டு சந்த நயத்தாழ் எங்களை மயக்கி விட்டீர்கள்.

தனிமரம் சொன்னது…

கபீர்பற்றி அறிந்ததில்லை உங்கள் மூலம் தெரிந்துகொள்கின்றேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையாக தொகுத்துத் தருகிறீர்கள்...

Nagendra Bharathi சொன்னது…

அருமை

கோமதி அரசு சொன்னது…

இருக்கும் போதினில் தந்தையை மதியார்
இறந்தபின் கொள்வார் சோகம்.
உருண்டைச் சோறு உருட்டி எடுத்து
உரக்க அழைப்பார் காகம்.//
அருமை.
கபீரன்பன் அவர்கள் தளத்தில் கபீரைப்பற்றி படிப்பேன்.
இனி உங்கள் தளுமும் படிக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எப்படி இப்படி எழுதுகிறீர்கள் சிவகுமாரன்! மிகவும் ரசிக்கின்றோம்....கபீரெல்லாம் வாசித்ததில்லை ஆனால் தங்கள் பாக்களிலிருந்து அறியமுடிகிறது அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று..