வியாழன், டிசம்பர் 22, 2016

"தீ"ர்தல்



ஐந்தாண்டுக்கு ஒருமுறை 
தரப்படுகிறது 
ஆளுக்கொரு தீக்குச்சி .
எரிக்க வேண்டியதும் 
ஏற்ற வேண்டியதும் 
எவ்வளவோ இருக்க  
பற்றவைக்கப்படுகிறது
இலவசமாய்த் தரப்படும் 
ஒரு சிகரெட் 
அல்லது 
ஒரு மத்தாப்பு. 


சிவகுமாரன்

 

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் வீண் தான்...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனியாவது பயனுள்ளதாய் மாற்றுவோம் தீக்குச்சியை
அருமை நண்பரே

G.M Balasubramaniam சொன்னது…

இலவசத்தில் குளிர்காய்கிறவர்கள் என்ன சொல்கிறார்களோ

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இலவசங்கள் தானே நாட்டினைச் சீரழித்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கவிடாமல் தடுக்கின்றன.

ஏகாந்தன் ! சொன்னது…

சிகரெட்டும் மத்தாப்பும் தரும் சிற்றின்பங்களில் ஆசுவாசம் பெறும் பொதுமனம்...

Aathira mullai சொன்னது…

ம்ம் இனிப்பை நாடும் சிற்றெறும்புகள் மனிதர்கள்.

https://tamizhnodigal.blogspot.in/2016/12/blog-post_26.html

Unknown சொன்னது…

உங்கள் கவிதைகள் மிக அருமை.