(பல்லவி)
மேலிருந்து ஆட்டுகிறான்
பொம்மை நாமடா
அந்த நூலறுந்து
போனபின்பு
வாழ்க்கை ஏதடா
வாழ்க்கை ஏதடா .
(சரணம்)
வண்டுகளை எதிர்பார்த்து
மலர் தேனை சுரப்பதில்லை
தென்றல் வர வில்லையெனில்
குயில் கூவ மறுப்பதில்லை
கொக்கரிக்கும் சேவல் கூவி
விடிவதில்லை பொழுது
புற்களுக்கு நீர்பாய்ச்சி
விதைப்பதில்லை உழுது.
அட
வேரிழந்து போனபின்பும்
தாங்கி நிற்கும் விழுது.
தாங்கி நிற்கும் விழுது.
......... (மேலிருந்து )
என்னுடைய உடம்பு கூட
நான் கொண்டு வந்ததில்லை
என்னைவிட்டு நான் போகும்
நாள் எனக்குத் தெரிவதில்லை
வந்தவுடன் உடம்பில் ஒரு
கோவணமும் இல்லை
வெந்து விழும்போது
இந்த உடம்பு கூட தொல்லை
இதில்
எனதென்றும் உனதென்றும்
ஏதுமில்லை போடா
ஏதுமில்லை போடா
. ........( மேலிருந்து )
27 கருத்துகள்:
கல்லூரிப் பருவத்தில் எழுதி , கல்லூரியின்
மெல்லிசை குழு நண்பர்களால் இசையமைத்து பாடப்பெற்றது. .
அருமை! சினிமாவில பயன்படுத்தலாம் போல இருக்கே! :-)
எழுத்துக்கள் அழகாக வந்துள்ளன.
ஆனால் எண்ணங்கள் விரக்தியின் வெளிப்பாடோ என்று ஐயம் தோன்றுகிறது. இந்த வயதில் அது வேண்டாமே.
தமிழ் மணத்தில் உங்கள் பதிவைப் பார்த்து நான் எழுதும் பின்னூட்டம் இது. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். கடலில் கலந்ததா உங்கள் ஓடை.? செய்தது நன்றே.வாழ்த்துக்கள்
கவி அருமை!
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நண்பா !
ரெம்ப நல்லா இருக்குங்க...
இதுக்கு ஒரு மெட்டு போட்டுற வேண்டியது தான். அருமையா இருக்குங்க.
நன்றி GMB சார். தமிழ்மணத்தில்
என் பதிவா? தெரியவில்லையே . இரண்டொரு முறை முயற்சி செய்து பிறகு விட்டுவிட்டேன். தகவலுக்கு
நன்றி.
நன்றி ஜி, கனாக்காதலன். கல்பனா & தங்கமணி . .
நன்றிஅப்பாத்துரை சார்.
பாட்டுக்கென்ற புனைந்த கவி..
பல்லவி ..சரணம் சரி எந்த ராகம்னு கேட்கலாம் என வந்தேன் அதற்க்குள் அப்பாத்துரை அவர்கள் மெட்டு போடுவதாக சொல்லிவிட்டார்...
நூலால் பிடிக்கப்பட்ட பொம்மைகள் தான் நாம்
எனக்கு ராகம் எல்லாம் தெரியாது பத்மநாபன் சார். நண்பர்கள் இரண்டு விதமாக மெட்டு போட்டிருந்தார்கள். ஒன்று T .M .S குரலில், இன்னொன்று ஜேசுதாஸ் குரலில்.எதுவும் ரெகார்ட் செய்யாததால் நினைவில்லை. நான் " இரவும் வரும் பகலும் வரும் " என்ற பாடல் போல பாடுவேன்.
அருமை
//வந்தவுடன் உடம்பில் ஒரு
கோவணமும் இல்லை
வெந்து விழும்போது
இந்த உடம்பு கூட தொல்லை
இதில்
எனதென்றும் உனதென்றும்
ஏதுமில்லை போடா
ஏதுமில்லை போடா//
’சிவகுமாரன் சித்தர்’ என்று பெயர் சூட்டலாம்!
நன்று.
சித்தனென்று அழைத்த
பித்தரே நன்றி.
எனக்கும் ராகம் எல்லாம் பிடிபடாத விஷயம்...சரணம் , பல்லவியை பார்த்து அடித்து விட்டேன் ..
இரவும் வரும் பகலும் வரும் பொருத்தமாக இருக்கிறது...
சிவா! தாமதமாய் வந்து விட்டேன்.. இசைக்கு இயையும் வரிகள்..
அப்பாதுரை இசையமைக்க,ஜேசுதாஸ் பாட ..பத்மநாபன் இயக்க ..
எனக்கு கதாநாயகனாய் வாயசைக்க வழி செய்வீரா? படம்
சில்வர்ஜூப்ளியில்ல போகும்?!
வாங்க மோகன் அண்ணா. பயணம் நல்லபடியே இருந்ததா. ஓகே . ஹீரோ வந்தாச்சு. லைட்ஸ் ஆ.......ன்.
fentastic shiva:))
"...எனதென்றும் உனதென்றும்
ஏதுமில்லை போடா.."
சந்தம் நிறைந்த வரிகள், நல்ல விடயம்.
இது புரிந்தால் சண்டையும் சச்சரவும் ஏதடா? என்று சொல்லாமா?
பொம்மலாட்டச் சித்தர்.. நல்ல பாடல். அருமை..
உங்கள் கவிதைகளுக்கு ரசிகையாகிவிட்டேன். நிறைய முறை இந்த கவிதையை படித்து ரசித்தேன். எளிமையான நடையில் சலிப்பு, கோவம் (எட்டி உதை கவிதை) என்று ஒவ்வொரு கவிதையையும் உண்ர்வுபூர்வமாக எழுதுகிறீர்கள்.
உங்களின் தமிழ் ஆற்றல்....அருமை !
மோகன்ஜி சொன்னது…
சிவா! தாமதமாய் வந்து விட்டேன்.. இசைக்கு இயையும் வரிகள்..
அப்பாதுரை இசையமைக்க,ஜேசுதாஸ் பாட ..பத்மநாபன் இயக்க ..
எனக்கு கதாநாயகனாய் வாயசைக்க வழி செய்வீரா? படம்
சில்வர்ஜூப்ளியில்ல போகும்?!
//
எங்கானும் - ஐஸ்வர்யா ராய் பெயர் காணுமே ??
பாடல் அருமை ............பாராட்டுக்கள்.
கவிதை அருமை திரு சிவகுமாரன் அவர்களே!
திரு சென்னைபித்தன் கூறியதை வழிமொழிகின்றேன்.
அருமைங்க ..
கருத்துரையிடுக