செவ்வாய், ஜனவரி 11, 2011

ஹைக்கூ முத்தங்கள் 40



கூட்டுக்கு இரை கொணர்ந்த
குருவியின் அலகு
தந்தையின் முத்தம்.





                              
                              
                              
                                   வறண்ட நிலவெடிப்பில்
                                   வானின் மழைத்துளி
                                   தாயின் முத்தம்.












விரிந்த பூவிதழில் 
விழுந்த பனித்துளி
மழலையின் முத்தம்.









              வெண்ணெய் தடவிய
              வெண்ணிலாக் கீற்று 
              காதலி முத்தம் 






சூரியக் கதிரில்
சொட்டும் தேன்துளி
மனைவியின்  முத்தம்

48 கருத்துகள்:

ராஜவம்சம் சொன்னது…

சொன்னமாதிரியே ரொம்ப கூலாதான் கவிதை எழுதியிறுக்கீங்க சூப்பர்.

Chitra சொன்னது…

Very nice..... பாராட்டுக்கள்!

வினோ சொன்னது…

நல்ல ஹைகூ கள்...

பத்மநாபன் சொன்னது…

எந்த முத்தத்தை மறுக்க மூடியும்..எல்லாம் முத்துக்கள்...

வைரத்தில் பதித்த முத்து..

விரிந்த பூவிதழில்
விழுந்த பனித்துளி...

ஸ்ரீராம். சொன்னது…

சில்லுனு இருக்கு....
மழலையின் முத்தம் கவர்கிறது..
காதலி முத்தம் வழவழக்கிறதோ...
அருமை...சூடான கவிதைகளுக்குப் பிறகு சுகமான கவிதைகள்.

ஹேமா சொன்னது…

வகைப்படுத்திய முத்தங்கள் சத்தமாய் இதமாய் !

பெயரில்லா சொன்னது…

மொத்த முத்தமும் இனிமை சிவா! :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

முற்றமெங்கும் தெளிக்கப்பட்டது தமிழின் முத்தம்.

எல்லா முத்தங்களும் சத்தமில்லாத ரகசிய முத்தத்தின் மென்மையோடு.

சபாஷ் சிவா.

THOPPITHOPPI சொன்னது…

மூன்றாவது படத்தை பார்த்தவுடன் ஹாலிவுட் பாலா நினைவுக்கு வந்துவிட்டார்

test சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...
மூன்றாவது படத்தை பார்த்தவுடன் ஹாலிவுட் பாலா நினைவுக்கு வந்துவிட்டார்//
எனக்கும் அப்படித்தான் பாஸ்!

அருமை! :-)

Unknown சொன்னது…

ஹைகூ கவிதை
தமிழ் தாய் முத்தம்?

ஆனந்தி.. சொன்னது…

அட்டகாசம் சகோ.சிவா..

Nagasubramanian சொன்னது…

Nice!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஹைகூ முத்தங்கள் அனைத்தும் ஒவ்வொரு சுவை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

G.M Balasubramaniam சொன்னது…

பாராட்டு மழையில்
குளிப்பிக்கும் உனை
ஜீஎம்பீ முத்தம்

ஆயிஷா சொன்னது…

nice....வாழ்த்துக்கள்.

வசந்தா நடேசன் சொன்னது…

முத்தத்தில் இத்தனையா, சுத்தம்! மிக அருமை, வாழ்த்துக்கள்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

முத்தம் ஒவ்வொன்றும் முத்துக்கள். கலக்குறீங்க !

Thanglish Payan சொன்னது…

Superb Kiss.

Kisses the heart deeply.

அப்பாதுரை சொன்னது…

மனுசங்க கிச் பத்தி நச்.
இதையும் கொஞ்சம் விவரமாக.. ம்ஹூம்.. சுருக்கமாக வெளக்கிப் போடுங்க:
- இயற்கையின் முத்தம்
- இசையின் முத்தம்
- அறிவின் முத்தம்
- ஒளியின் முத்தம்
- சாவின் முத்தம்

தமிழின் முத்தம் சேர்க்க நினைத்தேன்; சுந்தர்ஜி சொன்னது நல்ல இருக்கு.

சிவகுமாரன் சொன்னது…

சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
இயற்கையின் முத்தம்.

காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.

தெளிவின் கதவை
திறக்கும் சாவி
அறிவின் முத்தம்.

இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.

இருப்பின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவின் முத்தம்.

முத்தத் தீயில்
ஊற்றிய எண்ணெய்
அப்பாத்துரை முத்தம்.

அப்பாதுரை சொன்னது…

பிடியுங்கள் பொற்கிழி!

அப்பாதுரை சொன்னது…

சாவின் முத்தம் அபாரம்!

சென்னை பித்தன் சொன்னது…

பதிவில் வந்த ஹைக்கூ அருமை!பின்னூட்ட ஹைக்கூ அதனிலும் அருமை.

ரிஷபன் சொன்னது…

முத்த மழை!

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

எழுதுவதற்கும் சலிக்காத ஒன்று முத்தம்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சப்தமில்லாமல்
முத்தம் பற்றின
ஐந்து ஹைகூக்கள்
எழுதின தங்கள்
ஐந்து விரல்களுக்கும்,
கவிதையை ரஸித்த
எங்களின் முத்தங்கள்.

ஆர்வா சொன்னது…

//விரிந்த பூவிதழில்
விழுந்த பனித்துளி
மழலையின் முத்தம்//


இந்தக்கவிதையும் அதற்கான படமும் மிக அருமை..

sivamani சொன்னது…

ஒரே ஒரு முத்தம் விட்டு போச்சு.
பேரனுக்கு பாட்டியின் முத்தம் .

சிவகுமாரன் சொன்னது…

அணையில் தேக்கிய
ஆற்று வெள்ளம்
தாத்தாவின் முத்தம் .

கோடையில் திறந்த
கனஅடி காவிரி
பாட்டியின் முத்தம்.

kashyapan சொன்னது…

அப்பாதுரையும்,சிவமணியும் காலணா செலவில்லாமல் கொடுத்த அறிவியல் கலந்த அன்பு முத்தத்தை சொல்லும்!---காஸ்யபன்.

sivamani சொன்னது…

தாத்தாவின் முத்தம் .என் மகனுக்கு என் அப்பா கொடுத்த முத்தம் நினைவுக்கு வருகிறது

தாராபுரத்தான் சொன்னது…

எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..வாழ்த்துங்கோ.

தமிழ் சொன்னது…

புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

தமிழ் சொன்னது…

முத்தமழை நனைந்து விட்டேன்

ஜீவி சொன்னது…

கூட்டுக்கு இரை கொணர்ந்த குருவியின் அலகு!
வரண்ட நிலவெடிப்பில் வானின் மழைத்துளி!
விரிந்த பூவிதழில் விழுந்த பனித்துளி!
வெண்ணெய் தடவிய வெண்ணிலாக் கீற்று!
சூரிய கதிரில் சொட்டும் தேன்துளி!

என்னன்ன பதச்சேர்க்கைகள்!
அற்புதமாய் அமைந்துவிட்டன!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள், சிவகுமாரன்!

ஜீவி சொன்னது…

இப்போத்தான் பார்த்தேன்
இவை மட்டும் என்னவாம்?

எல்லாம் அருமை என்றாலும்
இவை இரண்டும்
அருமையிலும் அருமை!

காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.

இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.

Prabu Krishna சொன்னது…

முத்தம் அத்தனையும்
முத்தமிட்ட உணர்வாய்
ஹைக்கூ முத்தங்கள்♥♥♥

சிவகுமாரன் சொன்னது…

ஸ்ரீராம் சொன்னது,

\\\\\காதலி முத்தம் வழவழக்கிறதோ...////

அது அப்படித்தான்,
எடுத்தாலும், கொடுத்தாலும்
வீசிக் கொண்டேயிருக்கும் வாசம்,
வெண்ணெய் தொட்ட
விரல்கள் மாதிரி.

RVS சொன்னது…

முத்த ஹைக்கூக்கள் ரொம்ப சத்தானவை.. ;-)

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

சிவகுமாரன் சொன்னது…

முத்தங்கள் வைரஸ் மாதிரி.
ஒட்டிக்கொள்ள இடம் கொடுத்தால்
குட்டி போட்டு விடுகின்றன.
நான் இட்டது ஐந்து முத்தங்கள் தான்.
பல்கிப் பெருகின பலவாய்.

அப்பாத்துரையின் தூண்டிலில்
சிக்கின ஐந்து.

அண்ணன் சிவமணி கேட்டதும்
தாத்தாவும் பாட்டியும்
அனுப்பி வைத்தனர்
அனுபவ முத்தங்கள்.

சுந்தர்ஜியின்
முற்றத்தில் தெளிக்கப்பட்டது
தமிழின் முத்தம்.

இளமுருகனுக்கு
தமிழ்த்தாய் இட்டாள்
ஹைகூ முத்தம்.

GMP யின் பாராட்டு முத்தம்,
வை.கோ.வின் ஆசி முத்தம்,
காஷ்யபன் அய்யாவின்
காலணா முத்தம்,
ஜீவியின் வாழ்த்து முத்தம்,
ரிஷபன் சொன்ன மாதிரி
முத்த மழை தான்.

அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்தோடு
என் நன்றி கலந்த
கவிதை முத்தங்கள்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ராஜவம்சம், சித்ரா, வினோ, பிலாசபி பிரபா, பத்மநாபன், ஹேமா, பாலாஜி, சுந்தர்ஜி, தொப்பிதொப்பி, ஜீ, ஜெ.ஜெ. ஆனந்தி, நாகா, வெங்கட், ஆயிஷா, வசந்தா, கனா, தங்க்லீஷ்,சென்னைப்பித்தன், ரிஷபன், கவிதைகாதலன், திரு.பழனிசாமி, காஷ்யபன், தாரபுரத்தான், திகழ், பலே பிரபு & RVS

தக்குடு சொன்னது…

முத்த ஆராய்ச்சியே நடக்குது போலருக்கு!!..:)

கோநா சொன்னது…

"வெண்ணெய் தடவிய
வெண்ணிலாக் கீற்று"
-பின்றீங்க சிவா, வார்த்தைகள் எதாவது தேவையென்றால் தங்களின் வலைப்பூவுக்கு வந்தால் போதும் போலிருக்கே... யாரங்கே... இதோ இங்கே எங்கள் சங்கப் புலவன் சிவா

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நன்றி நன்றி கோநா

மதி சொன்னது…

நல்ல கவிதை .. நல்ல உவமைகள் .. வாழ்த்துகள் நண்பரே .. கடைசி இரண்டு முத்தங்கள் கொஞ்சம் அதிகமாகவே இனிக்கின்றன ! நேரம் கிடைக்கையில் என் கவிதைகளை வாசித்துப் பாருங்கள் .. http://sunshinesignatures.blogspot.com/

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

இன்று தான் பார்த்தேன் சூப்பர். நன்றி

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை பாராட்டுக்கள் ரசித்தேன்