சனி, அக்டோபர் 29, 2011

பரிபாலனம்











மாமன்னர் 
மாடு கொடுத்தார்.
மந்திரி கறந்து
தளபதி குடிச்சு
சேவகன் விரட்டி
கடைசியில்
குடிமகனுக்கு 
குறைவின்றி 
கிடைத்தது
........
கோமியம். 



26 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Kalakkal kavithai

அப்பாதுரை சொன்னது…

அப்படி போடுங்க..!

thendralsaravanan சொன்னது…

ஹ ஹ ஹா.... நல்லாயிருக்கு....இன்றைய மக்களின் நிலை!!!

SURYAJEEVA சொன்னது…

நீங்க டாஸ்மாக்கை சொல்லல தான

திகழ் சொன்னது…

நச்

G.M Balasubramaniam சொன்னது…

அரசுடைய நலத்திட்டங்கள் எல்லாம் இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்லும் அழகு கவிதை.பரிபாலனத்தின் உண்மைநிலை இத்தனை சிறிய கவிதையில் எவ்வளவு பளிச்சென்று தெரிவிக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் சொன்னது…

இதுதானே இப்ப நடக்குது!
அருமை!

r.v.saravanan சொன்னது…

இன்றைய வாழ்வின் யதார்த்தம் கவிதையில்

கலக்கல் நண்பா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நடப்பதை கவிதையாய் வடித்த உங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே...

மதி சொன்னது…

good one.. laughing out loud

ADMIN சொன்னது…

ஆஹா.. நல்ல கவிதை..!!

நன்றாக உறைக்கிற மாதிரி உரைத்தீர்கள்..!!

பகிர்ந்தமைக்கு நன்றி..!!

ஹேமா சொன்னது…

அன்றும் இன்றும் இதுதான் இயல்போ!

Rathesh சொன்னது…

பரிபாலனத்தின் லட்சணத்தை நச்சென்று சிறிய கவிதையில் வெகு அழகாக சொல்லி விட்டீர்கள்.
கவிதையின் எல்லா பரிமாணமும் உங்களுக்கு கை வருகிறது.
வித்தைக்காரர் தான் நீங்கள்.

Chitra சொன்னது…

அப்படி போடு அருவாளை! :-)))

சத்ரியன் சொன்னது…

சுழலும் சொற்சாட்டை.

Aathira mullai சொன்னது…

பரிபாலகர்கள் அதையாவது விட்டு வைப்பார்களா?

சுருக்..நறுக்..கருத்து..

நலமா சிவா? தங்கள் நிலைமையில் மாற்றம் உண்டா?

geetha santhanam சொன்னது…

நல்லா நச்சுன்னு நாலுவரியில் சொன்னீங்க.கோமியத்தையாவது விட்டாங்களே; கத்தி சொன்னா அதையும் பிடுங்கிடப் போறாங்க.

சுந்தரா சொன்னது…

நெத்தியடி :)

சொல்லவந்ததை அழுத்தமா சொல்லியிருக்கீங்க சிவகுமாரன்.

கீதமஞ்சரி சொன்னது…

ஆட்சிகள் மாறினாலும் அரசுப் பரிபாலனத்தின் காட்சிகள் மட்டும் என்றுமே மாறுவதில்லை. அவலத்தை அநாயாசமாய் உரைத்தக் கவிதை. பாராட்டுகள் சிவகுமாரன்.

மாலதி சொன்னது…

இன்றைய சூழலை அழகாக படம் பிடித்து உள்ளீர் பாராட்டுகள் .

kashyapan சொன்னது…

கவிதை மட்டுமல்ல சிவகுமரா! புகைப்படமும் அருமை! ---காஸ்யபன்

பெயரில்லா சொன்னது…

தொன்றுதொட்டு வரும் அரசு பரிபாலனத்தின் லட்சணம் இது தான் என்பதை , இதை விட நறுக்கென்று யாரும் சொல்ல முடியாது.
அற்புதம் சிவகுமாரன்

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

கோமியமாவது கிடைத்ததே என்ற மனோ நிலையில்தான் இன்றைய மக்கள் இருக்கின்றனர்?!.

நல்ல கவிதை நச்சென்று!!!

ஹ ர ணி சொன்னது…

சிவகுமரன்...

என்னால் எழுத்தில் எழுதமுடியாத மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. என்ன ரசனையான கவிதையிது? நகைச்சுவை என்பது எத்தனை நேர்த்தியான வடிவமைக்கப்பட்ட ஆரோக்கியமுடன் வெளிப்பட்டிருக்கிறது. உங்கள் பதிவுகள் என்னை நிரம்பவும் கட்டிப்போட்டிருக்கின்றன.


///////////////////////////

மனம் கவர் வலைப்பூ விருது

//////////////////////////////////

ananthu சொன்னது…

குடிமக்களுக்கு கடைசியில் கோமியம் தான் மிஞ்சும் என்று சொல்லும் நையாண்டி கவிதை நன்று ...

சிவகுமாரன் சொன்னது…

கருத்துரைத்த அத்தனை குடிமகன்களுக்கும் நன்றி .