விருந்து
உந்தன் விழியிரண்டும்
ஒர்கோடி பண்சொல்ல
சிந்தும் கவிதை
சிறப்பாகும் - எந்தன்
புலமைப் பெரும்பசிக்கு
பேய்த்தீனி போடும்
நிலவுக்கு நீயே
நிகர்.
உன்நினைவை நெஞ்சுக்குள்
ஒட்டவைத்துக் கொண்டதனால்
என்நினைவு கூட
எனக்கில்லை - என்னஇவன்
பைத்தியமா என்றுதான்
பார்த்தவர்கள் கேட்டார்கள்
வைத்தியமாய் நீயிங்கே
வா.
20 கருத்துகள்:
காதல் வெண்பா ரசிக்க வைத்து நண்பா
எந்தன்
புலமைப் பெரும்பசிக்கு
பேய்த்தீனி போடும்
நிலவுக்கு நீயே நிகர்.
இது மிகவும் ரசித்தேன்
//உன்நினைவை நெஞ்சுக்குள்
ஒட்டவைத்துக் கொண்டதனால்
என்நினைவு கூட
எனக்கில்லை
//
அருமையான வரிகள்
//உன்நினைவை நெஞ்சுக்குள்
ஒட்டவைத்துக் கொண்டதனால்
என்நினைவு கூட
எனக்கில்லை //
nice
இரண்டுமே அருமை.
ஆமா.. நிலவைப் பத்தி அப்படியொண்ணும் பெரிசா பாடக் காணோமே புலவர்?
கவிதை இரண்டும் அருமை. வாழ்த்துக்கள்.
சிவகுமாரனின் வெண்பாக்கள் எப்போதுமே தேனில் விழுந்து புரண்டவை.இப்போதும் அப்படித்தான்.
காதல் வெண்பா படித்து ரசித்தேன் நண்பரே....
விருந்தும் மருந்தும் காதல் ரசம் !
அருமை
சிவக்குமரன்,
காதல் வெண்பாக்களை எழுதத் தூண்டும் அந்த பெண்-பா எதுவோ?
அருமை.
நன்றி சரவணன், ராஜபாட்டை ராஜா, ஆமினா, GMB , வெங்கட் ஹேமா & சிநேகிதி.
அப்பாஜி, நிலவுப்பாட்டு எல்லாம் காதல் வெண்பாக்களுக்கு முன்பு எழுதியவை. ( இயற்கை மட்டுமே அழகாய்த் தெரிந்த காலம் அது)
சுந்தர்ஜி தங்களின் வருகையில் மனம் மகிழ்ந்தேன். வெகு நாளாயிற்று அல்லவா.
சத்ரியன்,
அந்த பெண்-பா , என்-பா தான்,
உங்களது படைப்புகளை தொடர்ந்து படித்து வந்தாலே
நல்ல கவிஞர் ஆகிவிடலாம் என்பது திண்ணம்
நான் படித்துக் கொண்டிருக்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்
இரண்டு இனிய கவிதைகள்.
வெண்பா இரண்டுமே அழகு.
அதுவும் இரு ஈற்றடிகளும் ஜோர்.
தங்கள் தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி ரமணி சார்.தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள் தான் , பல்வேறு இடைஞ்சல்களிக்கிடையிலும் என்னை வலையிலிருந்து ஓரயடியாக விலகாமல் வைத்திருக்கிறது.
நன்றி சென்னைப்பித்தன் சார்.
ரிஷபன் சார், தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி
இரண்டு வெண்பாக்களையும் அருமையாக முடித்திருக்கிறீர்கள் ..
விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்பர்.
உங்களதோ என்றும்.
மயக்கத்தின்
மருந்து
மனதை
மகிழ்விக்கிறது
நன்றி மதி, திகழ் & வாசன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்
விருந்தும் மருந்தும் அருமை!
கருத்துரையிடுக