திங்கள், ஜூலை 23, 2012

காதல் வெண்பாக்கள் 34

     

     

          வலை 

தலைகால் புரியாமல் 
  தள்ளாடிக் காதல்
வலையில் விழுந்தேன் 
  வகையாய் - மலைமேல்
விளக்காய் இருந்தயென் 
  வாழ்க்கையில் ஏதும்
இலக்கின்றி போனதடி 
  இன்று.



         


                      நிலை 


இன்றைக்கோ நாளைக்கோ
   என்றைக்கு  தீருமடி
கொன்று புதைக்குமுன்
   கோபங்கள்? - நன்றாய்
வதைக்கின்றாய் என்னைநீ, 
  வாட்டும் பிரிவில்
பதைக்கின்ற என்னிலையைப் 
  பார்த்து.



6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள் நண்பரே !
'வலை' யில் விழுந்ததால் இந்த 'நிலை' யோ ?
நன்றி.
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

செய்தாலி சொன்னது…

ம்ம்ம்....
அருமை கவிஞரே

அம்பாளடியாள் சொன்னது…

இரண்டு நிலைகளும் மனத்தைக் கவர்ந்தன தொடர வாழ்த்துக்கள் .

அப்பாதுரை சொன்னது…

வலையில் விழுந்தால் எழுவது கடினம் தான். வலையென்று தெரியாதிருப்பதும் காரணம்?
வெண்பா இரண்டுமே நயம்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு வலையிற்பட்டு ஆசைக் கடிமைப் பட்டு வாழா வாழ்வென்ன வாழ்வோ?!
சுகமான வெண்பாக்கள் சிவா.

அருணா செல்வம் சொன்னது…

வலையும் நிலையும் அருமையாக உள்ளது.