புதன், செப்டம்பர் 14, 2016

கபீரும் நானும் 15


माया मरी ना मन मरा, मर-मर गये शरीर,
आशा, तृष्णा ना मरी, कह गये दस कबीर.

Maya mari na mann mara, mar-mar gaye sharir,
Aasha, trishna na mari, keh gaye das kabir.

“Nor your wishes ends and niether your heart filled, but your body ends
. Hope and desire not ended as said by kabir”

ஆசை அழியா , அகமும் நிறையா 
   ஆனால் உடம்பு அழியுமடா 
ஈசனைத் தேடும் இளகா உறுதி 
    அழியா இதுவென் மொழியுமடா .
------------------------------------------------------------------------------------------------------------------11.

ज्यों तिल मांही तेल है, ज्यों चकमक में आग ।
तेरा साईं तुझमे है, तू जाग सके तो जाग ॥


Jyon Til Mein Tel Hai, Jyon Chakmak Mein Aag
Tera Sayeen Tujh Mein Hai, Tu Jaag Sake To Jaag

Just as seed contains the oil, fire's in flint stone
Your god seats within you, realize if you can

எள்ளில் இருக்கும் எண்ணெய் - கற்கள்
   இடையில் உறங்கும் நெருப்பு.
உள்ளே உறைவான் கடவுள் -தேடி
  உணர்வாய் அதுவுன் பொறுப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------12.

बैद मुआ रोगी मुआ , मुआ सकल संसार |
एक कबीरा ना मुआ , जेहि के राम आधार ||

Baidh muvaa rogi muvaa, muvaa safal sansaar
ek kabira na muvaa jeyhi ke ram adhaar

A physician has to die, a patient has to die. Kabir won’t die 
as he has offered himself to Ram who is the all pervading consciousness.

நோயாளி சாவான் நோய்க்கு மருந்திடும்
   நிபுணனும் சாவான் புவியில்.
ஓயாது இறையடி உருகித் தொழுதே(ன்)
   உயிருடன் வாழ்வேன் கவியில்.
-----------------------------------------------------------------------------------------------------------------13.

अति का भला न बोलना, अति की भली न चूप,
अति का भला न बरसना, अति की भली न धूप।

Ati ka bhala na bolana, ati ke bhali na chup 
Ati ka bhala na barasa na, ati ke bhali na dhope 

It is neither good to speak a lot nor it is good to keep ultimate silence.
Neither very heavy rain is good, nor extreme sun shine. 

அடாத மழையும் அடிக்கும் வெயிலும்
  அதிகம் ஆனால் வாட்டும்.
விடாத பேச்சும் விளங்கா அமைதியும்
  உறவைத் துரத்தி ஓட்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------14.

दोस पराए देखि करि, चला हसन्त हसन्त,
अपने याद न आवई, जिनका आदि न अं

Dosh paraya dekh kar, chala hasant hasant,
Apaney yad na aovae, jiska adi na ant

After seeing the evil of others, we move with laugh.
Never try to see own evil, which has neither start or end

மற்றவர் துர்குணம் கண்டு நகர்வாய்
  மனதுள் இகழ்ந்து நகைத்து.
உற்றுநீ ஒருகணம் உன்னுள் பார்த்தால்
   உறைந்தே போவாய் திகைத்து.
-----------------------------------------------------------------------------------------------------------------15.

தொடர்வோம்  ......

சிவகுமாரன் 

22 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

விளையாட்டாக ஆரம்பித்தது. கபீரின் தோஹே என்னும் கனிகளை ருசித்தேன், பகிர்ந்தேன். அவ்வளவே. "ருசித்த கனிகளின் விதைகளை ஊன்றி வையுங்களேன் நம் தோட்டத்தில்" என்றார் முத்துநிலவன் அய்யா. இதோ ... கபீரை கொஞ்சம் கொஞ்சமாக தமிழுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறேன்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்று கனவுகண்ட பாட்டன் பாரதிக்கு எனது இந்த சிறு முயற்சியைக் காணிக்கையாக்குகிறேன்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக மிக இயல்பாகவும்அற்புதமாகவும்
உருக்கொண்டு வருகிறது
கபீரின் தோஹே
தொடர நல்வாழ்த்துக்கள்

sury siva சொன்னது…

ஈசனைத் தேடும் இளகா உறுதி
அழியா இதுவென் மொழியுமடா .





ஈசனைக் காண நின் ஏக்கமும் தாகமும்
இறவா ! இதுவென் மொழியுமடா !!

இப்படி இருக்கலாமோ ?
சுப்பு தாத்தா.

sury siva சொன்னது…

tera saayee thuj mein jo puhupan mein baas
kasturi mirga ka jyo phir phir doondai ghas..

There is one more powerful couplet .

Just as the kasturi deer searches for the smell and odour without knowing that they come only from inside its body, God is in you.

subbu thatha.

sury siva சொன்னது…

tera sayee thuj mein jo phupan mein baas
kasturi mirg ga jyon phir phir doondai ghaas.

As the Kasturi deer is in perennial search of the smell and odour sans knowing that it springs from its flesh only, God resides in you and you are searching it outside.

This is another couplet which is the focal point of Kabir Sidhdhantha.

subbu thatha.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ரமணி சார்.எல்லாம் கபீரின் ஆசிர்வாதம்

சிவகுமாரன் சொன்னது…

ஆகா...
அருமை.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அய்யா

சிவகுமாரன் சொன்னது…

தன்னுள் இருக்கும் சுகந்தம் அறியா.
தேடும் புல்லில் கஸ்தூரி.
உன்னுள் உறைவான் உந்தன் கடவுள்.
உன்னை நீயே கண்டுஅறி.

G.M Balasubramaniam சொன்னது…

கூகிளின் ஆங்கில மொழியாக்கம்சரியாக வருகிறதா. கபீரின் தோஹே தமிழில் உங்கள்மொழியில் அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கபீர் உங்களுக்குள் எப்படி அழகிய தமிழாய் வெளிப்படுகிறார். அருமை சிவகுமாரன்! அருமை...அசாத்தியப் புலமை!! வாழ்த்துகள்! பாராட்டுகள்! வாசித்து ரசித்தோம்...

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் !

மொழிகள் பலதிலும் முத்தெனக் கோர்த்தாய்
அழியாத் தமிழின் அழகு !

உன்னாற்றல் எல்லாம் உயிரின் கனமறியும்
பொன்னாற்றல் என்பேன் புகழ்ந்து !

அன்புச் சகோதரனே ஆற்றல் மிகுந்தவனே
பொன்பூச் சொரியும்'இப் பூவுலகில் - உன்னினிய
சின்னக் கவிகளிலும் செந்தேனின் வாசமடா
இன்னும் தருவாய் இனித்து !

அழகு அருமை தொடர வாழ்த்துகள்
தம +1

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

எனக்குச் சற்றும் பிடிக்காத கருவை, எனக்கு மிகவும் பிடித்த உருவில் தருகிறீர்கள்... உங்களை என்ன செய்வது சிவா?

சிவகுமாரன் சொன்னது…

இல்லை அய்யா. இணையத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரிடத்திலிருந்து கபீரின் ஈரடிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.கிடைக்கும் மொழிபெயர்ப்பை அப்படியே தருகிறேன்.இந்தியில் இருப்பதை உள்வாங்கிக் கொண்டு என் பாணியில் கவிதையாக்குகிறேன். நூலாக்கும் சமயத்தில் வல்லுனர்களிடம் ஆலோசித்து சரி செய்யலாம் என்றிருக்கிறேன்.நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நன்றி சீராளன்.
தங்களின் அழகு தமிழ் வாழ்த்தில் அகங்குளிர்ந்து போகின்றேன்.

சிவகுமாரன் சொன்னது…

ஆகா . அய்யா. ஒரு பதிவோடு போக இருந்தவனை , நூலாக்குங்கள் என்று உசுப்பேத்தி விட்டதே நீங்கள் தானே. பத்து ஈரடிகளை எப்படி நூலாக்குவது. ? அதன் பிறகு தான் நான் "தொடர்வோம்" என்று பதிவின் இறுதியில் சேர்த்தேன்.

\\\உங்களை என்ன செய்வது சிவா?///

கபீரும் நானும் நூலுக்கு மதிப்புரை நீங்கள் தானே எழுதப் போகிறீர்கள் , அப்போது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி நன்றி சீராளன்.
தங்களின் அழகு தமிழ் வாழ்த்தில் அகங்குளிர்ந்து போகின்றேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் அருமை...

மனோ சாமிநாதன் சொன்னது…

//மற்றவர் துர்க்குணம் கண்டு நகர்வாய்
மனதுள் இகழ்ந்து நகைத்து.

உற்றுநீ ஒருகணம் உன்னுள் பார்த்தால்
உறைந்தே போவாய் திகைத்து.//

மிக அழகான மொழிபெயர்ப்பு! நீங்கள் கூறியுள்ளது போல பாரதிக்கு ஒரு அருமையான சமர்ப்பணம்!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி குமார்

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி மேடம். தங்களின் தொடரும் பேராதரவுக்கு