செவ்வாய், பிப்ரவரி 14, 2017

காதல் வெண்பாக்கள் 56


போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது 
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில் 
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.

ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத 
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம். 

சிவகுமாரன் 

11 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
சுகமான கவிதை நண்பரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி சரி...!

Yarlpavanan சொன்னது…

ஆதலினால் காதல் சுகம்
அருமையான பாக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம்! ஆதலினால் காதல் சுகமே! வரிகளிலும் அந்தக் காதலின் சுகம்!!!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

சேதியைக் கண்டேன், சிற்சில நீர்க்குமிழி!
தேதியைக் கண்டே தெரிந்துகொண்டேன் - பாதிக்குப்
பாதியைத் தாண்டும் பயணத்தில் எல்லார்க்கும்
ஆதியைத் தாண்டும் அகம்!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

மன்னிக்கவும், “சிற்சில” என்பதை “சிலச்சில” என்று திருத்தி, தளைப்பிழையிலிருந்து காக்க வேண்டுகிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

ஆதலினால் காதல் செய்வீர்

நிலாமகள் சொன்னது…

ரொம்ப சரி, தீராத போதைதான்...

ஊமைக்கனவுகள் சொன்னது…

வணக்கம் அண்ணா!

நலந்தானே?

உங்கள் கவிதைகளுக்கு கரு ஆதலினால் காதல் சுகம்தான்.
தொடர்கிறேன்.

நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

காதல் என்றதுமே கவிஞர்களுக்கு கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. காதலைப் போலவே தங்கள் கவிதையும் சுகம் சுகம் சுகம்

R. Ramesh சொன்னது…

காதல் என்றதுமே கவிஞர்களுக்கு கற்பனை சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. காதலைப் போலவே தங்கள் கவிதையும் சுகம் சுகம் சுகம்