வியாழன், ஜனவரி 04, 2024

பிராப்தம்



கடவுளுக்கு நன்றியை
கடனேயென்று சொல்கிறேன்.
பஞ்சத்துக்கு வாராது
பயிர் மூழ்க வந்த
பருவம் தவறிய மழையாய்
காலங்கடந்த அருள்.

குருவிக்குஞ்சாய் 
கூட்டில் தவிக்கையில்
முளைக்காத சிறகுகள்,
கரையானாய்
புற்றில் இருக்கையில்
முளைத்துத் தொலைக்கிறது.

வாழ்வதற்கு கேட்ட வரங்கள்
வந்து சேர்கிறது
சாவதற்கு முன்.
                                            சிவகுமாரன்.

கருத்துகள் இல்லை: