இன்றிரவு உறக்கத்தில் எங்கிருப்பேன் நான் ?
நன்றாக உறங்கியபின் "நான்" இருப்பேனா ?
தொன்றுதொட்டு வருவது தான் தூக்கம் எனினும்
ஒன்று மட்டும் விளங்கவில்லை, உறக்கம் என்ன ? ஏன்?
உறங்கியபின் வருகின்ற உலகம் எதுவோ ?
இறங்கிவரும் விண்ணுலகம் என்ப ததுவோ ?
கிறங்க வைக்கும் மது கொடுக்கும் மயக்கமதுவும்
நிறங்களற்ற உறக்கமதின் நிலைமையும் ஒன்றோ ?
விழித்திருக்கும் போதிருக்கும் வேதனை எல்லாம்
ஒழிந்திடுமோ ஒளிந்திடுமோ உறக்கம் வந்ததும் ?
கழிப்பதுவும் வகுப்பதுமாய் காலம் இருக்க
செழிப்புடனே நித்திரையில் சிரித்திருப்பதேன் ?
இச்சை எல்லாம் உறக்கத்தில் தீர்ந்து விடுவதேன் ?
மிச்சமெனில் மறுநாளில் சேர்ந்து வருவதேன் ?
அச்சமூட்டும் கனவு வந்தால் அதிர்ந்து எழுவதேன் ?
நிச்சயமாய் இன்பமெனில் நீண்டு விடுவதேன் ?
சுகமான உறக்கமதே சொர்க்க மென்பேன் நான் .
பகலெல்லாம் உழைத்த பலன் படுக்கையிலே தான்.
சக மனித தொந்தரவு , சஞ்சலம் எல்லாம்
புக முடியா தனியுலகம் கனவுலகம் தான்.
நாட்டை ஆளும் மன்னனாக நாமிருக்கலாம்
கோட்டை கட்டி படை நடத்தி கொடியை நாட்டலாம்
வீட்டை விட்டு சுதந்திரமாய் வெளியில் சுற்றலாம்
காட்டினுள்ளே தவமியற்றி கடவுள் தேடலாம் .
எழச்சொல்லி கவிஎழுதி என்ன கண்டேன் நான் ?
அழச்செய்யும் அவலங்கள் நாட்டில் இருக்க ?
விழச்சொல்ல வில்லை நான். எல்லாம் காலச்
சுழற்சியிலே மாறிவிடும் , அதனால் நன்றாய்
உறங்கிடுவீர் உறங்கிடுவீர் உலகத்தீரே
இறங்கிடுவீர் இன்பமெனும் சுரங்கத்துள்ளே
அரங்கனவன் உறக்கத்தை அறிதுயில் என்பார்.
வரங்கொடுக்கும் அவனைமுதல் விழிக்கச் சொல்வோம் .
( அப்பாத்துரையின் நசிகேத வெண்பாவில் . அஜாதசத்ரு-பாலயோகியின் உறக்கம் பற்றிய உரையாடலைப் படித்த போது தோன்றிய கவிதை இது . அப்பாஜி எழுதியது தத்துவம் . நான் எழுதுவது வெத்துவம்)
-சிவகுமாரன்

என் கவிதைகளின் ரசிகர் , என் பெரும்பேறு , சுப்புத் தாத்தாவின் குரலில் , கேட்டு மகிழுங்கள்.