புதன், டிசம்பர் 01, 2010

ஆலைக் "குரல்" 15




பாதுகாப்புப் பயிற்சி பயிலாதான் உயிருக்கு
ஏது காப்பு இயம்பு.                                                                          1.

ஆலைக்குள் பாதுகாப்பு அவசியம்- இல்லையேல்
வேலைகள் எல்லாமே வீண்.                                                    2.

காலணி தலைக்கவசம் கண்ணாடி இம்முன்றும்
ஆளைக் காக்கும் அரண்.                                                             3 .

காரமும் அமிலமும் கையாளும் இடத்தில்
வீரத்தைக் காட்டாதே வீணாய்.                                                4 .

உயரத்தில் பணியா? உறுதிசெய் பாதுகாப்பை.
துயரின்றி தொழிலை துவக்கு.                                                  5 .


கருகும் வாசனை  நுகர்ந்தால் கவனி.
அருகே எங்கோ ஆபத்து.                                                              6.

ஈரத்தில் மின்கசிவு இருந்தால் நிச்சயம்
தூரத்தில் இல்லை துயர்.                                                               7 .

குப்பையும் கூளமும் குடிகொண்ட ஆலைக்குள்
எப்படி விலகும் இருள்?                                                                  8 
.
வழுக்கும் தரையும் ஒழுகும் குழாயும்
இழுக்கு ஆலைக்கு  என்றும்.                                                         9

தூசியும் கழிவும் துளிகூட  தேங்காத
மாசில்லா ஆலையாய் மாற்று.                                                  10 
.
தரத்தின் விதிகளைத் தளர்த்தாதே - அதுநம் 
வரத்தைக் கெடுக்கும் வழி.                                                            11     
 (வரம்- Boon)  (வரத்து - Income)


ஒன்றாய்க் கூடி உழைத்தே இலக்கை 
வென்று காட்டுவோம் வா.                                                             12   


கூட்டு உழைப்பே திறவுகோல் - அதுவரை 
பூட்டிக் கிடக்கும் புகழ்.                                                                      13.

சொற்புத்தி சுயபுத்தி இல்லாதான் பணியாலே
உற்பத்தி பெருகுமோ உரை.                                                           14  

அலட்சியம் சோம்பல் அறியாமை இம்மூன்றும் 
இலட்சியப் பாதைக்கு இடர்                                                             15 .




(Slogan என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் தெரிந்தால் யாரேனும் சொல்லுங்களேன். )    

34 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

நான் பணிபுரியும் நிறுவனத்தின் பொதுமேலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆலையில் பாதுகாப்பு, சுகாதாரம், உற்பத்தித் திறன் போன்ற விழிப்புணர்வுக்காக, நான் எழுதிய குறள் வடிவிலான ( குறள் வெண்பா அல்ல ) வாசகங்கள்( slogans ) இவை. இதுநாள் வரை தனக்கும் என் பணிக்கும் ஒட்டுதல் இல்லாமலிருந்த என் தமிழ் முதன்முதலாய் என் பணியோடு இயைந்தது. இன்று எங்கள் ஆலையின் எல்லாத் திசைகளிலும் எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள் என் தமிழுக்குக் கிடைத்த பெருமை. இணையத்தில் வெளியிடச் சொன்ன இளமுருகனுக்கு நன்றி.

THOPPITHOPPI சொன்னது…

கடினமான ஒன்று(4-3 வரிகள்) வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அருமை...அருமை...அருமை

sivamani சொன்னது…

without your permission i have also used some of
these slogans in our factory.

sivamani சொன்னது…

without your permission i have also used some of
these slogans in our factory.

சிவகுமாரன் சொன்னது…

It's pleasure for me.

Chitra சொன்னது…

கூட்டு உழைப்பே திறவுகோல் - அதுவரை
பூட்டிக் கிடக்கும் புகழ்.


..... WOW! Rightly said!

பாராட்டுக்கள்!

Unknown சொன்னது…

பூட்டியே கிடக்கிறது உனக்கு சேரவேண்டிய புகழும். சாவியும் உன் கையிலே.

"சிறுத்தையே வெளியே வா"

அப்பாதுரை சொன்னது…

அட்டகாசம்; இந்த அதிகாரத்தை அரசு தொழில் நிறுவனம் labor department அனுப்புங்களேன்.. அவசியம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டிய செய்திக்குறள்.

(11ல் 'ள'கரம் வரவேண்டுமோ?)

பத்மநாபன் சொன்னது…

அருமை சிவா...பாதுகாப்பு மொழிகளை இவ்வளவு சிறப்பாக யாரும் குறள் வடித்ததில்லை...படிப்பவருக்கு மனதில் பதியவும் செய்யும் அதன்படி நடக்கவும் தோணும் ..உங்களுக்கும் ஊக்கப்படுத்திய உங்கள் பொது மேலாளருக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளது....

சிவகுமாரன் சொன்னது…

நன்றி துரை சார்.
கவனக்குறைவில் வந்த பிழை.
திருத்தி விட்டேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

அற்புதம் சிவகுமார்.தமிழும் கற்பனையும் ஒன்று கூடும்போது இதுபோன்ற சாகசங்கள் நிகழ்கின்றன.ஒரு குறும்படமோ விளம்பரமோ நிகழ்த்தும் அதிசயத்தை இக்குறள்களும் நிகழ்த்துகின்றன.

ஹேமா சொன்னது…

உங்கள் கவிதைகளுக்கு முன் உங்கள் பெயருக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம்.ஈழத்தின் ஆரம்பகால ஒரு தலைசிறந்த போராளியின் பெயர்.

கவிதைகள் வாசித்தேன்.ஆழமான தமிழ் உணர்வு.சமூக அக்கறை.
காரமான உரமான கவிதைகள்.
சில வரிகள் மனதில் படிகின்றன்.

எழுதுவதால் மனதிலுள்ள ஆதங்கங்கள்,வேதனைகள் குறைகிறது.உண்மையான கவிஞர்கள் பொய்யான கவிஞர்கள் என்று சொல்ல என்ன இருக்கிறது !

மோகன்ஜி சொன்னது…

சிவகுமாரன் ! அற்புதமான மொழிகள்! விழிப்புணர்வும் விவேகமும் பொதிந்த வரிகள். வாழ்த்துக்கள் சிவா!

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

மிகவும் அருமை !

தாராபுரத்தான் சொன்னது…

வணக்கமுங்க தம்பி..நம்ம விட்டுக்கு வந்தமைக்கு நன்றிங்க.உங்கள் அருமையான..எளிமையான கவிதைகளைப்படித்தேன்..அருமை....
அடிக்கடி வருவேன்ங்க.

G.M Balasubramaniam சொன்னது…

என் கவிதைக்கு பாராட்டு எழுதியது யார் என அறிந்து கொள்ள செய்த முயற்சி ஒரு சிறந்த பாட்டாளியை அறிமுகப்படுத்துகிறது. மனம் திறந்த வாழ்த்துக்கள். God bless you.

சத்ரியன் சொன்னது…

//இதுநாள் வரை தனக்கும் என் பணிக்கும் ஒட்டுதல் இல்லாமலிருந்த என் தமிழ் முதன்முதலாய் என் பணியோடு இயைந்தது. இன்று எங்கள் ஆலையின் எல்லாத் திசைகளிலும் எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள் என் தமிழுக்குக் கிடைத்த பெருமை. இணையத்தில் வெளியிடச் சொன்ன இளமுருகனுக்கு நன்றி.//

வாழ்த்துகள் சிவகுமரன். மிகுந்த வியப்பு! ரசாயனத்துறையில் தமிழ்!

உங்கள் துறைச் சார்ந்த தகவல்களைக் கொஞ்சம் கவிதைகளாக்கித் தமிழுக்குத் தாருங்கள்.

சத்ரியன் சொன்னது…

ஊர்க்குருவி.... செமசூடுங்க!(உயர...உயர கவிதையைச் சொன்னேன்.)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

உங்கள் வாசகங்கள் அனைத்தும் அருமையா இருக்குங்க..

அதை உங்கள் ஆலையில் எல்லா இடத்திலும்.......காண்பதில் மகிழ்ச்சி..

உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மற்றும் பாராட்டுக்கள்..!

hariharan சொன்னது…

பாதுகாப்பு ,சுற்றுச்சூழல் பற்றிய புதிய திருக்குறள் அருமை..

வாழ்த்துக்கள்.

Thoduvanam சொன்னது…

சிவகுமாரன்.மிக அருமையாக புனைந்துள்ளிர்கள்.மிகத் தேவையான அருமையான குறள்கள்..இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

ரிஷபன் சொன்னது…

வாழ்த்துகள் சிவா..

Thanglish Payan சொன்னது…

Thirukkural mathiri.
its good.

Break the copy. your poet should not be copy of previous.
even it is style(4-3 words). This is my suggestion. :)

சிவகுமாரன் சொன்னது…

I am not getting you Mr.Thanglish Payan. Am I copying and whom ?

arrs சொன்னது…

alangudi thiruvalluvarae vaazhtthukkal

vimalanperali சொன்னது…

பாதுகாப்பு உயிர் கவசம்,,,/

சிவகுமாரன் சொன்னது…

நன்றி

Krishnan சொன்னது…

அருமையான கவிதைகள்...

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி

S MEENAKSHI SUNDARAM சொன்னது…

அருமை..வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

மிகவும் அற்புதம் ஐயா... வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

Slogan என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ப்பதம் முழக்கம்

Kmoorthy சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.