திங்கள், நவம்பர் 15, 2010

காதல் வெண்பாக்கள் 10

                   மனசு 

கன்னல் மொழிபேசி காதலித்துக் கைவிட்டாய்.
உன்னைப் பிரிந்தாலும் உண்மையில் - என்னிடம்
கள்ளத் தனமில்லை, காதலும் பொய்யில்லை,
பிள்ளைக்கு வைப்பேன்உன் பேர்.

              திண்மை

தாலிகட்டிப் போனபின்பும் தாடி வளர்த்திட்டு
வேலிதாண்ட எண்ணும் வெறும்பயலே - கூலிக்கு
மாரடிக்க கட்டவில்லை மாங்கல்யம்-என்வாழ்வை
நாறடிக்க வேண்டாம் நகர்.

                                            -சிவகுமாரன்

23 கருத்துகள்:

 1. பொய்யிலாத காதல். பிள்ளைக்கு வைப்பேன் உன் பெயர்........அழியாத அன்பு காதல்.
  கவிதை நன்றாக் வந்துள்ளது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 2. /////கூலிக்கு
  மாரடிக்க கட்டவில்லை மாங்கல்யம்-/////
  அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
  தங்கள் ஹைகூ கவிதைகளும் அருமையாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. காதல் வெண்பா நல்லாருக்கு தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. காதலை மலரவிடும் எண்ணங்கள் புதிதாய்,புதிதாய்,புதிதாய் தோன்ற நான்,நாம் ,அவர்கள் பந்தி வைத்து பகிர்ந்து கொள்கிற எண்ணங்கள் என்றும் அழிவதில்லை என்றும்./

  பதிலளிநீக்கு
 5. நன்றி. நிலாமதி, மதி சுதா, தினேஷ் & விமலன்,

  பதிலளிநீக்கு
 6. ஹைகூக்குகளை கோர்த்து அழகிய வெண்பாக்களாய் படைத்துள்ளீர்கள் ..உங்களுக்கும் ,உங்களின் அழகு தமிழுக்கும் வாழ்த்துக்கள் ..தொடருங்கள் ....

  பதிலளிநீக்கு
 7. \\பிள்ளைக்கு வைப்பேன்உன் பேர்.\\

  Romba azhagunga..

  பதிலளிநீக்கு
 8. உங்கள் கவிதைகள் எல்லாம் அருமை அருமை அருமை.
  வித்தியாசமான எண்ணங்களுக்கு நல்ல தமிழ் வடிவம் தந்திருக்கிறீர்கள்.
  (நீங்கள் பின்னூட்டமிட்டதால் எனக்குக் கிடைத்த பரிசு உங்கள் பதிவுகள். நன்றி)

  பதிலளிநீக்கு
 9. தாலிகட்டிப் போனபின்பும் தாடி வளர்த்திட்டு
  வேலிதாண்ட எண்ணும் @@@@வெறும்பயலே@@@

  //

  இது என்ன சொன்னதில்லையே.. சத்தியமா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க...

  பதிலளிநீக்கு
 10. இப்பொழுது தான் தங்களின் தளத்தைக் காண்கிறேன்.
  வெண்பாகள் அனைத்தும் அருமை

  நேரம் கிடைக்கும் பொழுது இங்கும்(http://venbaaeluthalaamvaanga.blogspot.com/) வந்து பாக்களை எழுதுங்கள்.

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 11. சிவகுமாரன்! உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி! உங்கள் வெண்பாக்களை ரசித்தேன். தளைதட்டாத பாக்கள்.
  வித்தியாசமான வெண்பாக்கள் புனையுங்கள். கைத்தட்ட காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 12. சத்தியமா உங்களை சொல்லலை நண்பரே. (வில்லங்கமா பேரை வச்சுகிட்டா நான் என்ன பண்றது?) அது சரி, கல்யாணம் ஆகலையா, அப்பா வெறும்பய தான்,

  மோகன்ஜி சார் , நூற்றுக்கணக்கில இருக்கு சரக்கு, ஒண்ணொன்னா வெளியிடறேன்

  பதிலளிநீக்கு
 13. பள்ளியில் படித்ததோடு சரி மறந்து போனவை

  தொடர்ந்து படிக்கிறேன் விளக்கங்களோடு எழுத வாழ்த்துக்கள்

  நன்றி

  பதிலளிநீக்கு
 14. மிக அருமை நண்பரே ...
  வார்த்தைகளால் சிலம்பம் சுற்றி இருக்கிறீர்கள் ...

  வாழ்த்துகள் ...

  (அப்படியே எங்களுக்கும் அறிவுரைகள் தாருங்கள் :)

  பதிலளிநீக்கு
 15. வெண்பாக்கள் அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. வெண்பால வெளுத்து வாங்குறீங்க ! .. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. வெண்ணையாய் வழுக்கி உள் சென்ற பூரிப்பு,

  பண்ணை செதுக்கிய பாடல்களில் கண்டேன்,

  தொன்னையிலே ரசம் ஊற்றி உறிஞ்சுகின்ற சுகம்

  என்னை எங்கோ கொண்டு சென்றதே சிவம்!

  பதிலளிநீக்கு
 18. வெண்பாக்கள் மிக அருமை ரசித்தேன் வெகுவாக நன்றி அறிமுகத்திற்கு.! இனி தொடர்கிறேன்....
  வாழ்க வளமுடன் ...!

  பதிலளிநீக்கு