ஞாயிறு, டிசம்பர் 19, 2010

ஹைகூ கோலங்கள் 35




நீளம் தாண்டிப் பழகணும்
கோலம் போட்டிருக்காக
குமரிப் பொண்ணுக






தெருவடைத்த கோலம்
அழிக்க மனமில்லாமல்
அடுத்த நாள் காலை.



                    பூக்கோலம் நடுவே
                    பூத்திருக்கு நிசமாய்
                    பூசணிப் பூ




                                    கோலமிடும் அழகை
                                    கூட்டிக் காட்டுது
                                    கூந்தல் சொட்டு நீர்




               பேகன் வந்தானோ...?
                மார்கழிக் குளிரில்
                மப்ளர் கட்டிய மயில்.









37 கருத்துகள்:

  1. //தெருவடைத்த கோலம்
    அழிக்க மனமில்லாமல்
    அடுத்த நாள் காலை//
    SUPERRRR!!!!! :-)

    பதிலளிநீக்கு
  2. என்ன பாஸ்! சீசன் கவிதைகளா? :-)

    பதிலளிநீக்கு
  3. //மப்ளர் கட்டிய மயில்.//

    அருமை..

    பதிலளிநீக்கு
  4. ஆமாங்க ஜி தெனம் காலையில இந்த ஒரு மாசம் தானே கண்ணுக்கு குளிர்ச்சி .
    போன பதிவுக்கு ஏன் நீங்க வரலை ?

    பதிலளிநீக்கு
  5. ஹைக்கூக்கள் ஹை போட வைக்கின்றன... கோலங்களின் கோலாகலமாக இருந்தது...

    பதிலளிநீக்கு
  6. மண்ணில் தெறித்த வானவில் துண்டுகளை மப்ளர் குயிலுடன் சேர்த்துக் கொடுத்திருக்கீங்க.. பலே!
    (மண்ணில் விழுந்த வானவில் துண்டு - உபயம் சீவக சிந்தாமணி)

    பதிலளிநீக்கு
  7. அன்பு சிவகுமாரா, உன் வரிகளைப் படிக்கும்போது என் உள்ள்ம் உவகையால் பெருமிதம் கொள்கிறது. என்றும் நீ நலமுடன் வாழ்க.

    பதிலளிநீக்கு
  8. படக் கோலங்களும் வார்த்தைக் கோலங்களும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  9. புகைப்படங்களும் ஹைக்கூ கவிதைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. அழகான ஹைக்கூ கோலங்கள். சீசனுக்கேற்ற சிந்தனை.ஒரு கவிஞனின் பார்வையில் கோலங்களும் கோலம் போடும் பெண்களும் இன்னும் அழகாகி விடுகின்றன(ர்).

    பதிலளிநீக்கு
  11. புகைப்படங்களும் கவிதைகளும் சூப்பர்..

    பதிலளிநீக்கு
  12. மார்கழிக் குளிர் - மஃப்ளர் கட்டிய மயில்.....அழகு.

    பதிலளிநீக்கு
  13. "நீளம் தாண்டிப் பழகணும்
    கோலம் போட்டிருக்காக
    குமரிப் பொண்ணுக"
    நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  14. சீசன் கவிதைகளும் படங்களும் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  15. மப்ளர் கட்டிய மயில்..
    ம்....எப்படியெல்லாம் எழுதறீங்கப்பா....

    பதிலளிநீக்கு
  16. அடடே.... நான் இதுவரை உங்கள் தளத்தை பின்தொடராமல் இருந்தது ஆச்சர்யம் அளிக்கிறது... தாமதமான இணைப்பிற்கு மன்னிக்கவும்...

    பதிலளிநீக்கு
  17. சூப்பர் தலைவா :)

    பதிலளிநீக்கு
  18. அருமை. எப்படி பாராட்டுவது என்று இரண்டு நாட்களாக யோசித்தேன். வார்த்தை கிடைக்கவில்லை.
    சுருங்கச்சொன்னால், "கவிதையாய் இருக்கிறது ஒவ்வொரு கவிதையும்"

    பதிலளிநீக்கு
  19. "மப்ளர் கட்டிய மயில்"
    புதுசா இருக்கு.
    ரசித்தேன் கோலங்களை !

    பதிலளிநீக்கு
  20. //தெருவடைத்த கோலம்
    அழிக்க மனமில்லாமல்
    அடுத்த நாள் காலை.//

    Nice

    பதிலளிநீக்கு
  21. ஒவ்வொரு கவிஞனுக்கும் அவன் படைப்பில் சில வார்த்தகள் தெரித்துவிழும்.இதில் "மஃப்ளர் கட்டிய மயில்" அப்படித்தெரித்து விழுந்த ஒன்று.வைதீக தமிழ்க்கவிஞர்கள் ஏற்காமல் போகலாம். நாங்கள் எற்கிறோம் கவிஞரே!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  22. Fantastic comment Mr. Kashyapan. Very True. I was searching for these words only.

    பதிலளிநீக்கு
  23. கவிதை எழுத வேண்டாம் என்று நான் உங்களை சொல்லவில்லை...இன்னும் நிறைய எழுதுங்கள் சிவகுமார்..

    பதிலளிநீக்கு
  24. நன்றாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  25. //நீளம் தாண்டிப் பழகணும்
    கோலம் போட்டிருக்காக
    குமரிப் பொண்ணுக//
    முதல் கவிதையிலேயே தொட்டுட்டிங்க.

    பதிலளிநீக்கு
  26. அனைத்தும் அருமை.படத்திற்காக கவிதையா?கவிதைக்கான படங்களானு யோசித்தேன்.கோலங்களையும் கோலம் போடும் பெண்களையும் நல்லா ரசிச்சிருக்கீங்கனும் புரியுது.

    பதிலளிநீக்கு
  27. நன்றி திருமதி ஸ்ரீதர் மேடம்

    பதிலளிநீக்கு
  28. ரம்மியமான கவிதை கோலங்கள் சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  29. அந்த குமரனும் ரசிப்பான் உங்களின் சிவந்த வரிகளை

    பதிலளிநீக்கு
  30. அந்த குமரனும் ரசிப்பான் உங்களின் சிவந்த வரிகளை

    பதிலளிநீக்கு