மதுரையில் மீனாட்சி- சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில் ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு. ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா
தன்னானே தானே தன தானா
மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.
செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .
வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.
பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.
பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .
பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?
உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?
வேடிக்கையா கேட்டுப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.
சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா
குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.
ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.
உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
-சிவகுமாரன்
இதய பலகீனமுள்ளவர்கள் கீழே உள்ள குரல் பதிவை கேட்க வேண்டாம்.
பின்குறிப்பு:
இந்தக் கவிதை காஷ்யபன் அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
-சிவகுமாரன்
இதய பலகீனமுள்ளவர்கள் கீழே உள்ள குரல் பதிவை கேட்க வேண்டாம்.
பின்குறிப்பு:
இந்தக் கவிதை காஷ்யபன் அய்யா அவர்களுக்கு சமர்ப்பணம்.
78 கருத்துகள்:
//தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு தேர்தலிலே கோபத்தைநீ காமி//
Nice! :-)
பதிவு சூப்பருங்கோ அப்படியே உங்க குரல் என் இதயத்தை வலிமையடைய வைத்து விட்டது (same பீலிங்!)
சிவா,
சத்தியமா என்னால பாராட்ட முடியாம.. சத்தமே இல்லாம உங்க இந்தக் கவிதையைத் திருடிகிட்டு ஓடிட்டேன். வேறு தளத்தில் பதிய..
மன்னிச்சுடுங்க...
Nice..
பாமரனுக்கான கல்யாணக் கவி அருமை... .. எசப்பாட்டாக அமைத்தது சிறப்பாக இருந்தது.
அதை பாடிய குரலும் அருமை.
முழுப் பாட்டையும் பாடியிருக்கலாம் சிவா..
//சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா//
superb!
ஆதிரா மேடம்,
எங்க ஊர்ப்பக்கம் சில ஆச்சிமார்கள் தங்கள் வீட்டுல திருட்டு போனதை பெருமையா சொல்லிக்குவாக. (அவ்வளவு பணக்காரராம் செட்டியாரு) நான் அந்த டைப்பு.
நீங்கள் ரசித்தீர்கள் என்பதே எனக்கு பெருமை.
நன்றி ஜி, விக்கி.பாபு, ரசிகமணி & நாகா.
விக்கி & ரசிகமணி சார் , அந்தக் குரல் என்னோடதுன்னு நான் சொன்னேனா ?
உசிரே போகுது உசிரே போகு உங்க கவிதைய படிக்கையிலே.. அத்தனை ரசிச்சு படிச்சேனாக்கும்..! நன்றி நன்றி நன்றி! தொடருங்கள்.. நண்பரே..! அதுவும் காஷ்யபன் அவர்களுக்கு அர்ப்பணம் என்று எழுதிய வரிகள் உச்சம்..!
இந்த கல்யாண கவிதையில், காதலை மட்டுமின்றி சமூகம் சார்ந்த விசயங்களும் (வரதட்சணை,குடி,அரசியல்)புகுத்தியிருப்பது அருமை. (இன்னும் குரல் பதிவை கேட்கவில்லை)
திரு.காஷ்யப்பன் விமர்சனத்துக்காக நானும் காத்திருக்கிறேன்.
காஸ்யபனுக்கு காணிக்கை - கண்ணியம்.
எளிமையும், காதலும், கரிசனமும் (தூசு விழ), நன்நெறியும் (சீர்வரிசை, சாராயம்), உழைப்பும் எல்லாம் கலந்து விட்டு அடிச்சிருக்கீங்க.. கடைசியில தேர்தல் அறிவுரை போல முடிச்சிருக்க வேணாமோ முருகா?
(நான் சுட்டுகினு போவலாம்னு நெனச்சேன், அந்தம்மா முந்திக்கிச்சே?)
ரொம்ப நல்லாருக்கு..
சிறப்பான நடை.
சுந்தரபாரதி நினைவுக்கு
வருகிறார்.
வாழ்த்துக்கள்
நல்ல வரிகள் ... நல்ல எழுது நடையும் கூட .....
தொடரட்டும் உங்கள் கவிபயணம்
நெஞ்சைப் பிசைகிறது தோழா! உன் பாடல் வர்கள் மட்டுமல்ல.!தமிழைத் தனதாக்கிக் கொண்டு சவால் விட்டு வெற்றி பெற்ற உனக்கு. இந்த ஏழைக் கிழத்தந்தையால் என்ன தரமுடியும்?
ஆயிரம்,ஆயிரம், ஆயிரம் வாழ்த்துக்கள்!
உன்னப் பார்க்க வருவேன் விரைவில்!
சம்மதமா? ----காஸ்யபன்
என் உள்ளம் கொள்ளைகொண்ட செல்வா சிவகுமாரா,பார்வதிக்கு பரமசிவன் பாதி தேகம் தந்தார். ஆனால் நானோ என் உள்ளம் முழுவதும் தந்துவிட்டேன். புகழ் பெற்று வாழ்க வளமுடன்.
//கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி //
அருமை சிவகுமாரன்.
சியாமளன்(காஸ்யபன்) பாராட்டியதற்கு மேல் வேறென்ன வேண்டும்!
செம தூள் பாஸ்:))
சிவகுமார்,சூப்பர்..அந்த கால கொத்தமங்கல சுப்பு கவிதை போல இருந்தது. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல்யாணத்திற்கு அத்தனை பேர் போனால் என்ன? நான் இருக்கிறேன்..அந்த பாமரனின் கல்யாணத்திற்கு ஆசி கூற..
இன்னும் ஒன்று..அந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் அவர்களும் அங்கே தான் வரப் போகிறார்களாம்.
//கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .//
பன்ச்
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
சரியாச் சொன்னீங்க..
//அந்தக் குரல் என்னோடதுன்னு நான் நான் சொன்னேனா ?// வெக்கப்படாம பாடுங்க சிவா.. நெசமா நல்லாத்தான் இருந்துச்சு ...வீசி பாடீடுங்க...
சங்கித மணியை வேணாம் கேட்போம்..சொல்லுங்க ஆர்.வி.எஸ்
தன்னானே தானேதன்னே....
நல்லா இருக்கு நண்பா...சமூக அக்கறையோடு எழுதுகிறீர்கள் கவிதை கரம் கோர்ப்போம் எழுதுகோல் வாளெடுப்போம் சமூக இழிவுகள் தொடரும் வரை.. பகிர்விற்கு நன்றி!
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் இல்லை :(
மிகவும் அருமை!
சிவா.. சிவா.. எங்க பக்கத்து வீட்டு மாமியை விடப் ரொம்ப பரவாயில்லை... வாயைத் தொறந்து சங்கோஜப் படாம பாடுங்க... தந்தன தந்தன தாளம் வரும்.. சுப ராகம் வரும்.. ;-)
நாம எடுத்தவுடனே புஷ்பவனம் குப்புசாமி ஆகமுடியுமா... ரொம்ப நல்லா இருக்கு சிவா குமாரன்... ;-)
சமூகமும் தமிழும் சொல்ல வந்ததைத் தெளிவாய்ச் சொன்னதுக்கும் ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ் சிவா.
காஸ்யபன் சாரோட பாராட்டு பெருமையாயிருக்கு சிவா.
எளிமையான நடையில் கருத்துச் செறிவுடனான பாடல். வரதட்சிணை, கல்யாணக் கூட்டம், டாஸ்மாக் எல்லாம் தொட்டு கடைசியில் அரசியலையும் தொட்டு முடித்தது அழகு.
சிவகுமாரன் இப்போதுதான் வந்தேன். உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. உங்கள் கவிதை எனக்குப் பொறாமையைத் தருகிறது. அபாரம் சகோதரனே..ஒவ்வொரு சரணமும் மனதில் குறுகுறுவென்று முயல்கள் ஓடுவதைப்போல மகிழ்ச்சியோடுகிறது. அபாரம்.அபாரம். வாழ்த்துக்கள்.
தெம்மாங்குப் பாட்டு போல அருமை... கடைசி பாரா ரொம்ப ரசித்தேன். குரல் உள்ளே ஒலிக்கிறதே...
என்ன சொல்ல சிவா. கல்யாணப் பாடல் அருமை. வீட்டிற்க்கு சென்று கேட்கிறேன். எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க. அதுவும் நம்ம வித்துவான் சொல்லிட்டார்னா நோ அப்பீல்
Very nice.. Enjoyed a lot :)
நல்லா இருக்கு சிவா! பெரியப் பெரிய ஆட்கள் வாயால ஆசிர்வாதம் வந்தாச்சு! அப்புறம் என்ன வேணும் நமக்கு!..:)
Superb ah irukku siva..
I am die hard follower of you ..
வேலைப்பளுவின் காரணமாய் விருந்தினர்களுக்கு உடனுக்குடன் நன்றி தெரிவிக்க இயலாமல் போய்விட்டது.மன்னிக்கவும்.
நன்றி தங்கம்பழனி, அமைதிச்சாரல் ,ஆனந்தி, தொப்பிதொப்பி,கவிதைகள், யோவ், philoshophy பிரபாகரன் , பார்வையாளன், சுந்தர்ஜி, கீதா சந்தானம் மேடம், ஸ்ரீராம், LK , கனா, தக்குடுபாண்டி,& தங்க்லீஷ் பையன்
அனைவருக்கும் மாரிமுத்து, செல்வராணி சார்பாக ,மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு பெண்வீட்டார் மீனாட்சி மேடம் & மாடசாமி
மாப்பிள்ளை வீட்டார் காஷ்யபன் அய்யா & சிவகுமாரன்
@ சிவமணி அண்ணா
எனக்கும் கூட சித்தப்பா சுந்தரபாரதியின் தாக்கம் இந்தக் கவிதையில் இருப்பதாகத் தோன்றியது. இயற்கை தானோ.
@ அப்பாத்துரை.
-முழுப்பாட்டையும் பாடி இருக்கலாம்தான். ஆனால் , மாரிமுத்து, தெகிரியமா பாடிப்புட்டாரு , செல்வராணி வெட்கப்பட்டுக்கிட்டு பாட மாட்டேன்னுடுச்சே.
நன்றி GMB சார், உங்கள் உள்ளம் கொள்ளை போனதுக்கும் எனக்கு அள்ளித் தந்ததுக்கும்,
Philosophy prabakaran கூறியது...
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் இல்லை :(
என்னங்க உங்க Philosophy ஐ விட புரியாத அளவுக்கா இருக்கு கவிதை? மகாஜனங்களே நீங்களே சொல்லுங்க, இதைவிட புரியும் படியா நான் எப்படி எழுதுறது?
@மீனாட்சி
நன்றி மீனாட்சி மேடம்,
இந்தக் கவிதை எழுதியதற்கு நீங்களும் ஒரு தூண்டுதல்.(முந்தைய கவிதையின் உங்கள் பின்னூட்டம்)
என்ன பெயர் ஒற்றுமை.
@ ஹரணி,
உங்கள் பின்னூட்டம் எனக்கும் சந்தோசத்தை தந்தது.
நன்றி எல்.கே. சார்.
நீங்கள் ரசித்ததோடு வீட்டாரையும் ரசிக்க வைத்ததற்கு
இறுதியாய் காஷ்யபன்.
எனது முதல் நன்றி இந்தக் கவிதையை என்னை எழுதத் தூண்டியதற்காக. இது போல் இன்னும் சில கவிகள் உள்ளன.
என் தந்தையும் , சித்தப்பா சுந்தர பாரதியும் வாழ்த்தியதைப் போல் உணர்ந்தேன் உங்கள் வாழ்த்தொலி கேட்டபோது.
உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் அய்யா . .
அது என் பாக்கியம்.
என்னைக் கண்டுக்கலையே.. :-(
அய்யய்யோ தனியா சொல்லலாம்னு இருந்தேன்.செக் லிஸ்டில பார்த்தேன் உங்க பேரு டிக் பண்ணல. சரி போட்டுரலாம்னு நெனைக்கிறதுக்குள்ள திடும்னு வந்துட்டீக. .உங்க கர்நாடிக் காதுல தான் ஏழு ஸ்வரங்கள்ள மூழ்கிட்டிருந்தேன்.
புஷ்பவனம் நல்ல தேர்வு இந்த பாடலுக்கு.
நன்றி RVS... ரசிகமணி ரேஞ்சுக்கு ரசிச்சதுக்கு.
என்னை வச்சு யாரும் காமெடி கீமெடி பண்ணலையே.
அருமை அருமை அற்புதம் சிவகுமாரன்.
மெட்டுப்போட்டுப் பாடிவிட்டுக் கேக்காதேங்கோ.கேட்டா பயந்திடுவிங்கள் எண்டா என்ன ?இன்னும் தொடர்ந்து பாடியிருக்கலாம்.கூச்சம் வேணாம்.எனக்கு உண்மையில் தெரியவில்லை.கூத்து...என்று சொல்வார்களோ இந்த மெட்டை !
காதலும் அரசியலும் கலந்த வரிகள்.ஏதோ ஒரு வரி எடுத்து சூப்பர் வரி சொல்ல நினைச்சு தெரியாம முழிக்கிறேனே.கருத்தான காதலுக்கு செருக்கான கவியில் வாழ்த்துச் சொன்ன சிவகுமாரா வாழ்க நீரும் மாடசாமி தம்பதியினரும் !
கல்யாணம்ல்ல...கூப்பிட்டுத்தான் வரவேண்டியிருக்கு.நன்றி நண்பரே !
நல்லாருக்கு.
நன்றி ஜெஸ்வந்தி
நன்றி ஹேமா,
பாமர நடையில் எழுதினாலும் மரபுக்கவிதைதான் இது. எசப்பாட்டு, கூத்து என்றும் சொல்லலாம் ஹேமா.
@ அப்பாத்துரை & இளமுருகன்
முதலில் நான் இறுதிவரியை இப்படித்தான் எழுதி இருந்தேன்.
"கவருமெண்டு காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நீ
தவறு ஏதும் செயாம, தண்ணிகிண்ணி போடாம தலைநிமிர்ந்து வாழ்ந்திருந்து காமி."
ஆனால் ஏனோ பின்னர் வரிகளை மாற்றிவிட்டேன்.இறுதிவரி எழுதியதும் ஒரு குரூர திருப்தி. இது கவிக்கூற்று தான். செல்வராணியின் மூலமாக நான் பேசிவிட்டேன், பாரதி எரிதழல் கொண்டுவரச் சொன்ன மாதிரி.
நன்றி ஆரண்யவிலாஸ் .R .R . கொத்தமங்கலம் சுப்பு கவிதைகளை சிறு வயதில் படித்திருக்கிறேன். நினைவில் இல்லை.என் அப்பாவின் அலமாரியில் தேடிப்பார்க்க வேண்டும், உங்களிடம் இருந்தால் ஒரு பதிவு போடுங்களேன்.
உங்கள் வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்துவிட்டேன். நன்றி.
காஷ்யபன் அவர்கள் காதல் புனிதமானது அல்ல என்று சொல்லி உங்களை சமூகம் சார்ந்த கவிதைகளை எழுதச் சொன்னால் நீங்கள் இங்கேயும் காதலிலேயே நிற்கிறீர்களே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
கொத்தமங்கலம் சுப்பு - சட்டென்று பெயர் நினைவுக்கு வரவில்லை. நன்றி ராமமூர்த்தி.
தொடர்ந்து எழுதுங்கள் சிவகுமாரன்.
//எங்க ஊர்ப்பக்கம் சில ஆச்சிமார்கள் தங்கள் வீட்டுல திருட்டு போனதை பெருமையா சொல்லிக்குவாக//
நான் திருடிட்டு போன ஒம்ம கவிச்சொத்த ஒளிச்சு வச்சிருக்கற இடம் சொல்லட்டுமா.. அத எடுத்துட்டு வந்திட மாட்டியலே.. சிவா ஐயா..
எங்கே தப்பா நெனச்சிகிடுவீங்களோனு பயந்துகிட்டே இருந்தேன்..நல்ல வேளைக்கு..அந்த மீனாச்சி என்னக் காப்பாத்திப்புட்டா..
அப்பாதுரை கூறியது...
(நான் சுட்டுகினு போவலாம்னு நெனச்சேன், அந்தம்மா முந்திக்கிச்சே?)
இதப்பார்ரா... கொள்ளை அடிக்க வந்த கூட்டத்த... அப்படியெல்லாம் நாங்க விட்டுடுவோமா? ஆராச்சும் கொத்துக்கிட்டு போயிடுவாகன்னு தெரிஞ்சுத்தேன் நாங்க முந்திட்டோம்ல..
அன்புள்ள சிவா,
மூன்று முறை வந்தும் இந்த முறைதான் உங்கள் குரலைக் கேட்டென்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் ரொம்ப மோசமான நெஞ்சு வெடிக்கற மாதிரி இருக்கற படப்பதிவுகளைப் போட்டிருப்பார்கள் அந்தத் தலைப்பைப் பார்த்திட்டு நான் அந்த மாதிரி ஏதாவது இருக்குமோன்னு பார்க்காம போயிட்டேன். ஏன்னா என்னால அப்படியெல்லாம் பார்க்க முடியாது என்பதால்.
நல்ல வேளை.. இப்ப நல்லா படித்து படித்தேன். அதனால் கேட்டும் பார்த்தேன்.
நாட்டுப்புற இசை நல்லாத்தான் கை கொடுத்து இருக்குது உங்களுக்கு. இன்னும் கொஞ்சம் சுதியை அதிகப்படுத்தி பாடினா கம்பீரமா இருக்கும்.. வாழ்த்துக்கள்..
சூப்பர் . இரு ஜோடியும் சந்தோசமாக இருக்கலாம் . ஆனால் சுவாமி கல்யாணத்தை பார்க்க முவுலகமே வந்தது. மாரிமுத்துவும் அவன் மனைவியும் தனியாதானே சென்றார்கள் . எப்படி லிங்க் ஆச்சு?
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
\\\\நான் திருடிட்டு போன ஒம்ம கவிச்சொத்த ஒளிச்சு வச்சிருக்கற இடம் சொல்லட்டுமா.///
...சொல்லுங்களேன் ஆதிரா மேடம் , தூரமா நின்னு பாத்துட்டு வந்துடறேன்,
\\\\நாட்டுப்புற இசை நல்லாத்தான் கை கொடுத்து இருக்குது உங்களுக்கு. இன்னும் கொஞ்சம் சுதியை அதிகப்படுத்தி பாடினா கம்பீரமா இருக்கும்.. வாழ்த்துக்கள்..////
.....
எனக்கு என்னமோ என்னை வச்சு எல்லாரும் காமடி பண்ற மாதிரி தான் தெரியுது. வேண்டாம்.
"நமக்குத் தொழில் கவிதை நல்லோர் செவிகளை
இம்சைப் படுத்தா திருத்தல்- உமைப்போன்றோர்
காட்டும் கனிவால் கவிகள் கணக்கின்றி
ஈட்டுதல் போதும் எமக்கு.
Vivek Said
\\\சுவாமி கல்யாணத்தை பார்க்க முவுலகமே வந்தது. மாரிமுத்துவும் அவன் மனைவியும் தனியாதானே சென்றார்கள் . எப்படி லிங்க் ஆச்சு?///
என் செல்ல மவனே.... நீங்களா ?
கவிதையை நல்லா படிச்சு பாருங்க.
"வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு."
எல்லாமே மனசுலதான் இருக்கு. நாம கோயிலுக்கு போறோம்.சுவாமியும் அம்பாளும் தான் நம்ம கண்ணுக்குத் தெரியுறாங்க. கோயில்ல சூட்சுமமா ( பொருள் புரியுதா ) தேவர்களும் சித்தர்களும் ஆயிரக் கணக்கில இருக்காங்க, அவங்கல்லாம் அங்க வந்திருக்கிறதா மாரிமுத்து நமபுகிறான்.("நம்பிக்கை - அதானே எல்லாம்" விளம்பரம் போல இருக்கா.?)
- அப்பாவோட கவிதைகள் மட்டும் இல்லாம நிறைய படிக்கணும் நீங்க.
வாழ்த்துக்கள்.
( அடுத்த பதிவுல ஒரு ஆச்சர்யம் காத்திருக்கு உங்களுக்கு.)
புதுவருட வாழ்த்துக்கள் நண்பரே..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும் நண்பரே
//கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .//
அழகு,ஆழம்.வாழ்த்துக்கள்.
பாடல் வடிவ கவிதை அருமை. குரல் வடிவமும் நன்றாக இருக்கிறது. அனைத்து வரிகளையும் பாடியிருக்கலாம். உங்கள் முயற்சிக்கள் இனியும் தொடரும் என்று ஆவலாய் எதிர்ப்பார்க்கிறோம்.
காஷ்யபன் அய்யா அவர்களுக்கு எங்கள் வந்தனங்கள்.
சிவகுமாரன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒரு மார்க்கமாக இரந்தாலும் அருமையாக இருக்குதுங்கோ...
வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
//பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா //
நல்ல வரிகள்.
Rathesh Said
\\\\காஷ்யபன் அவர்கள் காதல் புனிதமானது அல்ல என்று சொல்லி உங்களை சமூகம் சார்ந்த கவிதைகளை எழுதச் சொன்னால் நீங்கள் இங்கேயும் காதலிலேயே நிற்கிறீர்களே.////
இந்தக் கேள்விக்கு காஷ்யபன் அய்யா தான் பதில் சொல்ல வேண்டும் ராதேஷ்.
சமூகம் சார்ந்த எனும் போது அடித்தட்டுமக்களின் வறுமை,இயலாமை இல்லாமை அகியபற்றை சொலவது இருக்கட்டும்.ஆண்ட காஸ்ய்ன் செகோவின் கதை நினைவுக்கு வருகிறது கணவன் தினக்கூலி மனைவிக்கு ஒரு நல்ல செருப்புவாங்க விரும்புகிறான்.. பலநாள் கஷ்டப்பட்டு பணம் செர்க்கிறான். பலசெருப்புகளைப் பார்க்கிறான். அவன் கையிருப்புக்கு சுமாரானதித்தான் வாங்கமுடிகிறது."சைஸ்"சின்னாது.பெரிசு வாங்க பணம் பத்தாது. மனைவியிடம் கொடுக்கிறான்.அவளுக்கு அந்த "சைஸ்" சரியில்லை என்று தெரிகிறது.மிகவும் சிரமப்பட்டு போட்டுக்கொள்கிறாள்.வலிக்கிறது.கணவன் கேட்கிறான்."சரியாகைருக்கிறதா?" "கரக்ட் "சைஸில்" ல் என்று புன்னகைக்கிறாள்.
வருமைக்கும்,இயலாமைக்கும் இல்லாமைக்கும் இடையிலும் மகிழ்ச்சி,அன்பு, பாசம் தளும்புவதை பதிவு செய்யவேண்டும்.காதலை எழுத கொடிக்கணக்கில்,இருக்கிறார்கள்.சிவகுமரன் ஸ்பெஷலாக இருக்கவேண்டும் காஸ்யபன்
//கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .//
Super Mr. sivakumaran.
Wish You a VERY HAPPY NEW YEAR.
மிக அருமையாக ரசிக்கும்படியாக உள்ளது உங்கள் கவிதை
உழைக்கும் வர்க்கத்திற்கு கல்யாணமாலை வாசித்ததோடு அதனூடே மானுடனின் சிந்தனையையும் (வரதட்சிணை, டாஸ்மார்க்) அதோடின்றி அரசியலையும் கோர்த்தது தான் மிகவும் சிறப்பு. தங்கள் கவிதைகளிலுள்ள தமிழ் பிரவாகம் கண்டு நனைந்தேன் மகிழ்ந்தேன். - நெல்லி. மூர்த்தி
எத்தனை முறை படித்தாலும் இந்தக் கவிதை மட்டும் அலுக்கவேயில்லை. புதுப்புது படிமங்களைக் கற்பனை செய்ய முடிகிறது. காலத்தை வெல்லும் கவிதை சிவகுமாரன்.
என்ன ஆச்சர்யம் அப்பாஜி. நேற்றுதான் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. இன்று மீனாட்சி அம்மன் ஆலயம் சென்றேன். மனதில் இந்தக் கவிதை ஓடியது இன்று முழுக்க. தனிமையில் சத்தம் போட்டு பாடியும் பார்த்தேன்.
இங்கு வந்தால் ... தங்களுக்கும் இந்த நினைவு.
மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.
அன்பின் சிவகுமரன் - மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரப் பெருமான் திருக்கலயாணம் நடக்கையிலேயே - வெளியே மாடசாமி - செல்வராணி திருமணமும் நடை பெற்றது நன்று. மணமக்கள் சீரும் சிறப்புடனும் நீடூழி வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஒரு வருடம் கழித்து வந்து இந்த கவிதையை ரசித்த நண்பரே நன்றி.
மதுரைக்காரங்க - மதுரைக்காரங்க தான்.
கருத்துரையிடுக