வியாழன், மார்ச் 03, 2011

அருட்கவிஇறையைத் தேடும் என்பய ணத்தில்
நிறையும் குறையும் நிரம்பி வழிய 
கவிதை பலவும் கணக்கின் றெழுதிக் 
குவித்தேன் தொழுதேன் குமபிட் டழுதேன்.
இரங்கா மனதுள் இறங்கின கவிகள்.
வரங்களைக் கேட்டேன் திறந்தன செவிகள்.
புவனம் காப்போன் பெயரைச் சொல்லி 
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி 
அருட்கவி என்னும் பெயரில் அதனை
தருகிறேன் உமக்கு தனியே வலையில்.
அன்பர் அனைவரும் ஆதர வளித்து
இன்பத் தமிழின் இனிமை சுவைக்க 
இருகரம் கூப்பி இதயம் கனிந்து 
வருக வருகென வரவேற் றழைத்தேன்

.

 
   சிவகுமாரன் 
 www.arutkavi.blogspot.com 

16 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் கலியுகக் கவிஞரே !!,

  பதிலளிநீக்கு
 2. தமிழ் சுவைக்க வந்துவிட்டோம்....வாழ்த்துகள் சிவகுமாரன் !

  பதிலளிநீக்கு
 3. மரபில் கவி வழங்கி, நடு
  இரவில் எமை மயக்கும்
  இறையின் அருளைச் சொல்லும்
  நிறைவாய் கவிதை தந்த
  உறவே, எங்கள் பிறப்பே
  திறமாய் கவி தந்து வாழி!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரம், பதிவர்களின் பதிவுகளை உலகெங்கும் காவிச் செல்லும் காவிகாளாகத் திரட்டிகள் விளங்குகின்றன. நீன்கல் தமிழ் மணம், தமிழிஷ் இல் உங்கள் பதிவுகளை இணைத்தால் இன்னும் அதிக வாசகர்கள் தங்களின் கவிதைகளைக் காதலிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறேன்.

  http://tamilmanam.net/user_blog_submission.php

  http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள்! வந்து விட்டோம் உங்கள் தமிழை சுவைக்க.

  பதிலளிநீக்கு
 6. ஆகா! இதை விட வேறென்ன வேண்டும்?வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. புதியமுயற்சிக்கு உமையொருபாகன் துணையிருப்பான்.. வாழ்த்துக்கள் சிவா!

  பதிலளிநீக்கு
 8. அவனரு ளாலே அவன்தாள் வணங்கி
  தங்கள் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 9. ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள். தேடியது கிட்டியதா?
  உங்கள் கவிதைகள் ., நல்ல துள்ளலோடு ....பாட வசதியாய் இருக்கிறது.
  குழந்தைகளுக்காய் .....பொருள் பொதிந்த, கதை சொல்லும் பாடல்களை நீங்கள் உருவாக்கலாம் என எனக்கு தோன்றிற்று.
  இளமையிலேயே ....தேடலை துவங்கும் கவிதைகளை .......படைக்க இயலுமா? ஆர்வமுண்டா?
  santhinidevi@gmail.com
  --

  பதிலளிநீக்கு