போகட்டும் விடு
அடுத்த பஸ்ஸில் ஏறலாம்
கூட்டமேயில்லை .
பூக்கள் வேண்டாம்
பூஜைக்குப் பறித்துக் கொள்
அவளுக்கு லீவு
டக்கர் பிகரு
சைட் அடிக்க முடியாமல் ...
லேடி கான்ஸ்டபிள் .
அவளின் ரிங்டோன்
இடைஞ்சலாய்
அப்பாவின் குறட்டை.
பைக் இல்லை செல் இல்லை
பழக ஒரு பிகர் இல்லை
பாழாய்ப் போக,,, கல்லூரி.
46 கருத்துகள்:
ஐந்து ஹைக்கூ க்களிலும் சுவை அதிகம் பழநிப்பஞ்சாமிருதம் போல.
வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
கல்லூரி மாணவனாக மாறிவிட்டீர்கள்.விடுமுறையில் ...கண்களுக்கு ஓய்வு வேண்டும் அல்லவா?...ஆதங்கம் புரிகிறது!
ஐந்தும் அருமை
அதிலும் கூட்டமில்லாத பஸ்
லேடி கான்ஸ்டெபில்
அனுபவித்து சிரித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
கலக்கல் சிவகுமாரன்
//டக்கர் பிகரு
சைட் அடிக்க முடியாமல் ...
லேடி கான்ஸ்டபிள் .//
அப்படி போதா சேதி ... சரி சரி
கடைசி ஹைக்கூ உங்கள் அனுபவமா? ;-))
ஐந்தருவியாய் கொட்டுகிறது.. ;-))
நல்ல கற்பனை. நாலாவது கவிதை நெருடுகிறது.
சிவகுமரன் அவர்களே! இந்தக் கவிதைகளைப் பாராட்டி ஓய்வு பெற்ற அதிகாரிகள் பின்னுட்டம் எழுதுவது அவர்கள் எதை எதை இழந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்கிறது. அதுசரி! இந்த RVS க்கு என்ன வந்தது ! அவர் எதற்கு இந்த கிழடுகளொடு சேர்கிறார்---காஸ்யபன்
லேடி கான்ஸ்டபிள், அட்டகாசம் சிவா! :)
//பூக்கள் வேண்டாம்
பூஜைக்குப் பறித்துக் கொள்
அவளுக்கு லீவு//
ஆகா .. காதலியே தெய்வமா ?
அனைத்தும் அருமை..
தொடர்க..
லேடி கான்ஸ்டபிள் ஹைக்கூ அருமை. அம்மாவின் இருமலை மாற்றி எழுதலாமே.
நகைச்சுவையுடன் ஹைக்கூ கவிதைகள் அசத்தல்..
வாழ்த்துக்கள்..
கலக்கல் ஹைகூக்கள்.
நீண்ட கருநிற கூந்தல் உடைய இத்தனை பெண்களை ஒரே நேரத்தில் ஒன்றாக பார்த்து எத்தனை நாளாச்சு.கல்லூரி பெண்கள் நிறைந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்குங்க :-))
அடுத்த பஸ்ஸில் தொற்றிக்கொள்ளலாம் என்றிருக்க வேண்டுமோ.?லேடி கான்ஸ்டபில் ஹைக்கூ படித்தவுடன் வடிவேலு நடித்த ஒரு படக்காட்சி நினைவுக்கு வந்தது. நம்மால் கவிதைகளை ரசிக்க மட்டுமே முடியும். ஹூம்...!
:) ... went back to college once again... very well done!
இரண்டாவது முதல்.
நல்ல கற்பனை நண்பரே…. ஒவ்வொன்றும் அருமை.
சிவா எல்லாமே கலக்கல்ஸ். இரண்டும் நான்கும் டாப்ஸ்.
காலப்போக்கில், சிறுவயதில் அப்பாவின் கையை பிடித்த நடந்த அனுபவம் போய் அவரே வில்லனை பார்ப்பது போல் !! நீங்கள் சொல்வது போல் - என்னுடைய ப்ளோகில் நான் போட்டுள்ள சிறு படத்தை பாருங்கள்.
டெல்லி கணேஷை அவரின் அமெரிக்க மகன் கட்டிபிடிப்பதில் காட்டும் அவமரியாதை மனதை ஏதோ செய்தது
ஜாலியாய் ரசிக்க முடிந்தது.
கல்லூரி மொழி வழியே
கவி மொழி பேசிடும்
நகைச்சுவை
சுவை கவிதை
அமர்க்களம்
ஆஹா... நீங்க இப்படி கூட எழுதரதுண்டா... :))))
'அப்பாவின் குறட்டை' நெருடலில்லாமல் கவிதையுடன் அழகாகப் பொருந்துகிறது.
தயவு செய்து இந்த மாதிரி ஹைக்கூ எழுதுவதை நிறுத்துங்கள்
எப்படி இருக்கீங்க சிவகுமாரன்?
நல்லா இருக்கேன் சமுத்ரா.
\\\தயவு செய்து இந்த மாதிரி ஹைக்கூ எழுதுவதை நிறுத்துங்கள்//
இப்படி சொல்லி விட்டால் எப்படி சமுத்ரா?
கவிதை என் மொழி. சிரிக்கவும் அழவும் தொழவும் கவிதை தான் என் இணைபிரியாத் துணை. நகைச்சுவை உணர்வு இல்லையென்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்றாராம் காந்திஜி. அப்படித்தான் எனக்கு கவிதையும் .
எப்போதும் சீரியஸாக கவிதை எழுதி கொண்டிருந்தால் போரடிக்காதா?
... இது போன்ற கல்லூரியும் , மாணவர்களும் உங்கள் பெங்களூரில் இல்லாமலிருக்கலாம். எங்கள் ஊர் கல்லூரி இப்படித்தான்.
கேர்ள் ஃபிரண்ட்ஸோடு சுத்துறாங்க
கெட்ட பசங்க
பொறாமை !
எப்போதுமே நமக்குள் mis -understanding தான் :)
உங்கள் கவிதைகளை மிகவும் ரசிப்பதால் தான் இப்படி சொல்கிறேன் சிவ குமாரன்
"கடன்வாங்கிக் கழிக்கின்ற கணிதங்கள் இனிவாழ்வில்
காணாமல் போகட்டுமே "என்றெல்லாம் எழுதிய நீங்கள்
டக்கர் பிகரு என்றெல்லாம் எழுதுவது உங்கள்
ஸ்டாண்டர்ட்-க்கு கொஞ்சம் கீழே என்று நினைத்ததால் தான் சொன்னேன்..
தவறென்றால் மன்னிக்கவும்
அடடா . மன்னிப்பெல்லாம் ரொம்ப ஓவர் சமுத்ரா. mis -understanding எல்லாம் இல்லை. எனக்கே இந்த மாதிரி கவிதைகள் எல்லாம் அவ்வளவாக பிடிப்பதில்லை .இந்த வலைத்தளத்தில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் என் கல்லூரிப்பருவத்தில் எழுதியவை. அருட்கவி தளத்தில் உள்ளவை தான் நான் தற்போது எழுதுபவை. எனக்கு என்று standard எல்லாம் ஒன்றுமில்லை . என் கவிதைகளை எல்லாத் தரப்பினரும் ரசிக்க வேண்டும் என்று நினைப்பதால் வந்த வினை இந்தக் கவிதை .
இந்தக் கவிதையில் இருந்து இரண்டு பாடங்கள் எனக்கு.
1)அம்மாவின் இருமல் - என்ற வரி நெருடலாய் பட்டது கீதா மேடத்துக்கு. இன்றைய தலைமுறையினரின் மன ஓட்டத்தை குறிப்பிட்ட வரி அது என்றாலும் , அந்த ஹைக்கூவில் உண்மை இருந்த போதும், தாய்மையை போற்ற வேண்டும் என்பதால் " அப்பாவின் குறட்டை " என்று மாற்றி விட்டேன்.
நன்றி கீதா மேடம்.
2 ) அருட்கவி எழுதும் கையால் டக்கர் பிகரு என்றெல்லாம் எழுதாதீர்கள் என்றார் சமுத்ரா. எனக்கென்று ஒரு ஸ்டாண்டர்ட் இருப்பாதாக அவர் நினைப்பதால் , இனிமேல் இது போல் எழுத வேண்டாம் என்றுநினைக்கிறேன். RVS என்ன சொல்றீங்க?
நான் கொஞ்சம் லேட்டாய் வந்தேனோ பிழைத்தாயோ சிவா! நான் சமுத்ரா கட்சி.
சிவாவின் கவிதைகளுக்கென்று ஒரு உயர்நிலை இருக்கிறது.. அங்கேயே இருக்கவும் என் அன்பு சிவா!
இடையிடை இந்த ஹைக்கூ கொறுக்கல் அவசியம்.. நிச்சயம் இது கல்லூரி காலங்களில் உங்களுக்கு தோன்றியதாகத்தான் இருக்கும்...
சாதாரண ஆட்களையே கவிஞர்கள் ஆக்கிவிடும் பருவம் அது.. கவிஞர் சிவாவை சும்மாவா விட்டிருக்கும்.....
முதுகை குனிந்து காட்டுகிறேன் , நல்லா மொத்துங்க அண்ணா.( அந்த சட்டுவம் கையில இல்லியே !!??)
- அருட்கவியில இன்னொரு பதிவு போட்டு பாவம் கழிக்கணும்...
நான் கூட அதே கவிதையைப் பற்றித்தான் நெருடலாக இருப்பதாகச் சொன்னேன் சிவகுமார்.. நம்மளை விட்டுட்டீங்களே....!! அப்பாவின் குறட்டை...? வேறு வார்த்த்தை எதுமே சிக்கவில்லையா...!
ஆகா . மறந்துட்டேன் சாரி ஸ்ரீராம்.
நன்றி.
ஏன்.. அப்பாவின் குறட்டைக்கு என்னாச்சு?
மோகன்ஜி மற்றும் பத்மநாபன் ஆகியோரின் பின்னூட்டங்கள் காணாமல் போய்விட்டன. மோகன் அண்ணாவுக்கு நான் அளித்த பதில் பின்னூட்டமும் மாயமாகி விட்டது. எப்படி என்று தெரியவில்லை. மோகன் அண்ணா / ரசிகமணி சார் நீங்கள் உங்கள் பின்னூட்டங்களை நீக்கினீர்களா? அப்படியானால் என் பின்னூட்டத்தை எனக்குத் தெரியாமல் யார் நீக்க முடியும் ? குழப்பமாக இருக்கிறது.
அம்மாவின் இருமல் சிலருக்கு நெருடல் அப்பாவின் குறட்டை சிலருக்கு நெருடல்
அம்மாவின் குறட்டை என்று மாற்றிப் பாருங்களேன்?
கலக்கல் பாஸ்! :-)
பிளாக்கர் பரவலாக அனைவரின் பின்னூட்டங்களையும் சாப்பிட்டுள்ளது சிவா... எனது பழைய பின்னூட்டத்தின் சாரம்....
கல்லூரிக் காலத்தில் சாதாரணமாக மொழி அறிந்தவர்களுக்கே கவிதை ஊற்றெடுக்கும்...கவிஞர்களுக்கு சொல்லவா வேண்டும்.. அந்தந்த காலத்தில் அந்தந்த உணர்வுகளை அழகாக படம் பிடித்துவைத்துள்ளது...
எல்லாம் கலக்கல் ராகம். அந்த அப்பாவின் குறட்டை நெருடலாக இப்பொழுது தெரிந்தாலும், டீன் ஏஜில் நெருடல் இல்லை
அப்பாத்துரையின் காம்பினேஷனை ட்ரை பண்ணிப் பாருங்கள். குறட்டையும் இருமலும் கவிதையை என்ன பாடுபடுத்திவிட்டன சிவா?
சந்தடி சாக்குல கவிதைகள் எல்லாமே இளமை முறுக்கோடு இருந்ததைச் சொல்ல விட்டுட்டேனே!
சமுத்ரா சொன்னது மொழி உபயோகம்(டாப் டக்கர்-ஃபிகர்-) பற்றி மட்டுமே என எண்ணுகிறேன்.
//டக்கர் பிகரு
சைட் அடிக்க முடியாமல் ...
லேடி கான்ஸ்டபிள் .//வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
சிவா என் பின்னூட்டம் எனக்கு மறந்து விட்டது. நிராய பின்னூட்டங்கள் காக்கா ஒச்! ஆகிவிட்டன என் பதிவிலும்.
காலயாணியைக் கடித்திருக்கிறேன். வந்து பாரும் பிள்ளாய்
நன்றி. வைகோ. தென்றல், ரமணி, எல்.கே. RVS , ஸ்ரீராம். காஷ்யபன் அய்யா, பாலாஜி, சிவா.ஜானகிராம், கீதாமேடம், சௌந்தர், , திருமதி ஸ்ரீதர், GMB சார், மாதங்கி, அப்பாஜி, வெங்கட் நாகராஜ், சாய், ரிஷபன், ARR , அப்பாவி தங்கமணி, சமுத்ரா, ஜீ, ரசிகமணி, சுந்தர்ஜி, போளூர் தயாநிதி,& மோகன்ஜி
நன்றிகள் அனைவருக்கும்
ரசித்து சிரிக்க வைத்த வரிகள்... ஹாஹா....
இந்த காலத்து பிள்ளைகளுக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அருமையாய் இட்ட வரிகள்...
அன்பு வாழ்த்துக்கள் சிவகுமாரன்..
கருத்துரையிடுக