காதல் வெண்பாக்கள் 20
கதி
பேசிச் சிரித்து
பெருங்காதல் தூண்டிலிட்டு
ஆசை மனதை
அபகரித்தாய் - வீசிச்
சுழற்றும் விழியில்
சுடர்காட்டி உள்ளம்
கழற்றினாய் நீயே
கதி.
விதி
ஆருயிரே நீயின்றி.
பாவி எனைக்கொஞ்சம்
பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக்
கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய்
நீ.
42 கருத்துகள்:
// தாவிக்
குதித்துத் திரிந்தவனைக்
கூப்பிட்டுக் காதல் //
அதானே , ஜாலியா ஊரை சுத்திக்கிட்டு இருந்தவரை ஒரே இடத்தில சுத்த வெச்சிட்டாங்காலே, இது என்ன நியாயம்
நீங்களும் ஓட்டுப் பட்டைகள் வைப்பதில்லையா ??
வணக்கம் சிவகுமாரன்..
கதியும் + விதியும் காதலில் வந்துவிட்டது..
மதி - யைக் காணோமே ?
அது இருந்தால் அந்தப் பாவியை ஏன் காதலிக்கப் போகிறார்கள் என்கிறீர்களா ?
அருமையான ஆக்கம்..
வாழ்த்துக்கள்..
நன்றி.,
காதல் மேல் கொண்ட காதலால் ஊற்றெடுத்து வரும் உங்கள் வெண்பாக்கள் அருமை சிவா ..
//சுழற்றும் விழியில்
சுடர்காட்டி//
//தாவிக் குதித்துத் திரிந்தவனைக்
கூப்பிட்டுக் காதல்//
கதியும் விதியும் சேர்ந்த காதல் கவிதை அருமை. பாராட்டுக்கள்.
உங்களுடை கதி-விதி காதல் வெண்பாக்கள் அருமை......
என்ன சிவா? உங்க ஊர்லயும் நல்ல மழையா?
இன்னா நாற்பது
இனியவை நாற்பது மாதிரி
காதல் இருவதா
அருமை அருமை
அடுத்த பதினெட்டு
பருவச் சிட்டுகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து...
அருமையான வரிகள்
//
ஆவி துடிக்குதடி
ஆருயிரே நீயின்றி.
பாவி எனைக்கொஞ்சம்
பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக்
கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய்
நீ. ///
கலக்கல்
காதல் வலையில் வீழ்ந்து விட்டால் எந்த எத்தனும் பித்தனாவதுதான் விதி.கால்கட்டு போட்டபின் மனையாளே
கதி. நீங்கள் இரண்டாம் ரகமல்லவா சிவகுமாரா.? அடுத்து வரும் பதினெட்டுகளில் எப்படி இருப்பீரோ... பார்க்கத்தானே பொகிறோம். நம் தடம் பக்கம் காண வில்லையே..
///தாவிக்
குதித்துத் திரிந்தவனைக்
கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய்
நீ. /// உருகி உருகி காதலிச்ச இப்படி தான் பாஸ் கண்டுக்கவே மாட்டார்கள்..))
வரிகள் அழகு ...
காதலின் சதி காதலின் விதி.
கதியும் விதியும்தானே சதிபதியாக்கியிருக்கும் !
இரண்டும் இரண்டு காதல் ரசம் பொழியும் கவி கனிகள் ...
காதல் விதி கலக்கல்
அட்டகாசம். 'தாவிக் குதித்து..' வரிகள் நினைவு மீன்களுக்கான வசீகரத் தூண்டில்.
சிவா! அப்படிஇப்படி நான் நகர்ந்தா, உடனே காதலிக்க ஆரம்பிச்சுடுவீங்களே?! காதல் வந்துட்டா வெண்பாவாவது நண்பாவாவது... பேசுறதுதெல்லாம் கவிதை தானே? நினைக்கிறதேல்லாம் காவியம் தானே?
அழகு...
vithiyaal sathiyaai kaathail... arumai.. vaalththukkal
ஆதலினால் காதல் செய்வீர்!
காதல் மயக்கத்தில் எழுதிய வரிகள் அருமை!
//கதியும் விதியும்தானே சதிபதியாக்கியிருக்கும் //
அதானே! சிவகுமரன்!
எல்.கே. சொன்னது
.
\\அதானே , ஜாலியா ஊரை சுத்திக்கிட்டு இருந்தவரை ஒரே இடத்தில சுத்த வெச்சிட்டாங்காலே, இது என்ன நியாயம்//
அடடா.. உங்க நெனைப்பை கிளறி விட்டேனா ?
\\நீங்களும் ஓட்டுப் பட்டைகள் வைப்பதில்லையா ??//
எனக்கு அதெல்லாம் எப்படி இணைக்கிரதுன்னு தெரியல ?அதோடு எனக்கு ஓட்டுன்னாலே அலர்ஜி.
சிவ.ஜானகிராமன் சொன்னது.
\\கதியும் + விதியும் காதலில் வந்துவிட்டது..
மதி - யைக் காணோமே ?
அது இருந்தால் அந்தப் பாவியை ஏன் காதலிக்கப் போகிறார்கள் என்கிறீர்களா ?//
சரியாச் சொன்னீங்க. அது இருந்தால் அவன் காதல் வெண்பாவை விட்டுவிட்டு
அப்பாஜி மாதிரி நசிகேத வெண்பா எழுதப் போயிருக்க மாட்டானா ?
நன்றி ரசிகமணி, வை.கோ.சார், & வெங்கட் நாகராஜ்
சுந்தர் ஜி சொன்னது
\\என்ன சிவா? உங்க ஊர்லயும் நல்ல மழையா?//
இந்தக் குசும்பு தானே வேண்டாங்கறது ?
ரமணி சொன்னது
\\இன்னா நாற்பது
இனியவை நாற்பது மாதிரி
காதல் இருவதா
அருமை அருமை
அடுத்த பதினெட்டு
பருவச் சிட்டுகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து...//
நன்றி ரமணி சார். ஏற்கெனவே 18 காதல் வெண்பாக்கள் வந்தாச்சு. இது தான் 20ஆவது.
இனியதா , இன்னாததா என்று படித்துப் பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்
GMB சொன்னது.
\\\காதல் வலையில் வீழ்ந்து விட்டால் எந்த எத்தனும் பித்தனாவதுதான் விதி.கால்கட்டு போட்டபின் மனையாளே
கதி. நீங்கள் இரண்டாம் ரகமல்லவா சிவகுமாரா.? அடுத்து வரும் பதினெட்டுகளில் எப்படி இருப்பீரோ... பார்க்கத்தானே பொகிறோம். நம் தடம் பக்கம் காண வில்லையே.///
நான் அந்த ரகம் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள் ? என் முகத்தில் ஏதும் எழுதி இருக்கிறதா ?
அப்புறம் நீங்களும் என் பழைய காதல் வெண்பாக்களை(18 ) படிக்கவில்லையா?
வலைப்பக்கம் நீண்ட நாட்களாக வர முடியவில்லை. வேறொன்றும் காரணமில்லை.இனி வலைமேயும் போதெல்லாம் உங்கள் வயலுக்கும் வருகிறேன்.
நன்றி ராஜபாட்டை ராஜா, கந்தசாமி, ஸ்ரீராம், ஹேமா, & அரசன்
அப்பாத்துரை சொன்னது
//அட்டகாசம். 'தாவிக் குதித்து..' வரிகள் நினைவு மீன்களுக்கான வசீகரத் தூண்டில்.//
நன்றி அப்பாஜி.
நினைவு மீன்களுக்கான வசீகரத் தூண்டில் - ரசித்தேன்.
மோகன் ஜி சொன்னது
\\\சிவா! அப்படிஇப்படி நான் நகர்ந்தா, உடனே காதலிக்க ஆரம்பிச்சுடுவீங்களே?! காதல் வந்துட்டா வெண்பாவாவது நண்பாவாவது... பேசுறதுதெல்லாம் கவிதை தானே? நினைக்கிறதேல்லாம் காவியம் தானே?
அழகு...//
அண்ணன் அப்படி இப்படி நகர்ந்தாதானே தம்பி லவ்சு பண்ண முடியும். இல்லன்னா போட்டிக்கு வந்துட மாட்டீகளா ?
நன்றி மதுரை சரவணன், தென்றல்சரவணன் & சத்ரியன்
நன்றி
அழகான காதல் பா.
'கதி', 'விதி' தலைப்புகள் மட்டும் இடம் மாறி இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று.
அண்ணாச்சி, தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
ஆணி கொஞ்சம் அதிகம் சகோ.
கதி//
கன்னியின் கடைக் கண் பார்வையில் தொலைந்து போன ஓர் இளைஞனின் உணர்வினை நையாண்டியுடன் வெளிப்படுத்தி நிற்கிறது,
//விதி //
ஒரு இளைஞனின் சுதந்திரம்/ இறக்கைகள் எப்போது துண்டிக்கப்படுகின்றன என்பதனை இங்கே அழாகக எடுத்தியம்பியுள்ளீங்க.
வெண்பாக்கள் இரண்டுமே நச்.
மீனாட்சி சொன்னது
\\அழகான காதல் பா.
'கதி', 'விதி' தலைப்புகள் மட்டும் இடம் மாறி இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று.//
ஆமாம் மேடம் தலைப்பை மாற்றினாலும் சரியாய்த் தான் வரும்.
அவளே கதியாய்க் கிடந்தது இவன் விதி.
இவன் இந்தக் கதிக்கு ஆளானதும் இவன் விதி.
நன்றி நிரூபன்.
உங்கள் இறக்கைகள் இன்னும் வெட்டப்படவில்லையே ?
அருமை.
காதல் வெண்பாக்கள்.......20 ???
கவிஞரே, ஒரு சந்தேகம்.
காதலைச் சொல்ல வெண்பாதான் சரியான வடிவமா? அந்த வடிவத்தையே அதிகமாக தேர்ந்த்தெடுப்பது ஏன்?
காதலைச் சொல்ல கவிதை தான் சரியான வடிவம். மோகன்ஜி சொல்றது போல ""காதல் வந்துட்டா வெண்பாவாவது நண்பாவாவது... பேசுறதுதெல்லாம் கவிதை தானே? நினைக்கிறதேல்லாம் காவியம் தானே?"'
வெண்பா எனக்கு பிடித்த வடிவம். வெண்பா எழுதிப் பழகியதே காதலை வைத்துத்தான். ஒரே மூச்சில் 40 வெண்பாக்கள் எழுதினேன்.
இப்போது வெளியிடும் போது ஒன்று பழசும் இன்னொன்று புதுசுமாய் இடுகையிடுகிறேன்.
100ஆவது வெண்பாவுக்கு ரசிகர்கள் விழா எடுக்கப் போவதாக கேள்விப்பட்டேன்.
வீசிச்
சுழற்றும் விழியில்
சுடர்காட்டி உள்ளம்
கழற்றினாய் நீயே
கதி....mmmm...kathal 20...arumai....vaalthukal...
http://www.kovaikkavi.wordpress.com
Vetha.Elangathilakam.
எனக்கும் அழைப்புண்டுதானே அண்ணா?
ரசிகர்கள் அல்லவா அழைப்பு விடுக்க வேண்டும்?
கருத்துரையிடுக