போதை தலைக்கேறும்,
போடா,போ- காதல்
தொடங்கிற்றா ? போயிற்றா
தூக்கம் ? இனிமேல்
அடங்கப்பா நீயும்
அடங்கு .
ஆப்பு
அம்மா உனக்கினி
அந்நியம் ஆகிடுவாள்
சும்மா வரும்கோபம்
சுர்ரென்று - தம்மால்
முடிந்தவரை பொய்சொல்வாய்,
மோகம் தொடங்கிற்றா
அடித்தாய் உனக்கேநீ
ஆப்பு.
26 கருத்துகள்:
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
ஒரு பயிலரங்கத்திற்காக வெளியூர்ப்பயணம் , மேலும் கணினிக் கோளாறு காரணமாக வலைப்பக்கம் வர முடியாமல் போனது. நண்பர்களின் பதிவுகள் எதையும் படிக்க முடியாமல் போனது. முடிந்தவரை எல்லாவற்றையும் படித்துவிட ஆசை.
அழகி மென்பொருள் பயன்படுத்துகிறேன்.-
நன்றி ஆர்,பி.ஜே.கேதரன்.
அக்கறையுடன் ஆலோசனை அளித்த அனைவருக்கும் நன்றி.
அழகிய கவிதை.... வெகு நாட்களுக்கு பிறகு வாசிக்கிறேன்.. அருமை
மாப்பு//
காதல் வந்து விட்டால் நிகழும் மாற்றங்களை சிறிது எள்ளலுடன் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
ஆப்பு
அம்மா உனக்கினி
அந்நியம் ஆகிடுவாள்.//
ஹா...ஹா..இங்கே அம்மா சிலேடையாகி வந்துள்ளா.
காலத்திற்கேற்ற வகையில் நடை முறை அரசியலையும் நையாண்டி செய்துள்ளீங்க.
நண்பரே .. இதில் அரசியல் எங்கே வந்துச்சு ?
ஹ்ஹி.. முறுவலாய் ரெண்டு வெண்பா.
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி என்பேன். நீங்களுமா?
மாப்பும் ஆப்பும் சூப்பரோ சூப்பர்
காதல் வெண்பாக்கள் நூறு படைத்து
சாதனை படைக்க வாழ்த்துக்கள்
அழகாய் இரண்டு கவிதைகளை
கருத்தை பகிர்ந்த விதம் அருமை
அம்மா அன்னியம்மாகிப் போவாள்
மிகம ரசித்த வரிகள் நண்பரே
வெண்பாவில் கவி எழுதி-தமிழ்
விளையாட சிவ குமர
ஒண்பாவும் விருத்த தில்-நிகர்
ஒப்பின்றி சிவ குமர
நண்பா நீர் எழுதிடவும்-அதை
நான் கண்டு மகிழ்ந்திடவும்
'பண்'பா தமிழ் பண்பா-நாளும்
பதிவிடவே வாழ்த்துகிறேன் அன்பா
புலவர் சா இராமாநுசம்
அருமையான கவிதைகள்!
வெண்பான்னு சொன்னதும் பயந்து வந்தேன். பட் ரொம்ப அழகான நகைச்சுவை கலந்த கவிதையாக கண்ணில் மின்னுகிறது
//
அம்மா உனக்கினி
அந்நியம் ஆகிடுவாள்
சும்மா வரும்கோபம்
சுர்ரென்று - தம்மால்
முடிந்தவரை பொய்சொல்வாய்,
மோகம் தொடங்கிற்றா
அடித்தாய் உனக்கேநீ
ஆப்பு.
//
haaa.....haaa.....haaa.....haaa.....haaa.....haaa.....haaa.....haaa.....
மாப்பா...மப்பா..? வெறும் ஈர்ப்பைக் காதல் என்போருக்கு வேண்டுமானால்
இதில் கூறியது பொருந்தலாம். எங்களைப் போன்ற அமர காதலர்களுக்கு இது பொருந்துமா ,சொல் சிவகுமாரா.!
இரண்டு வெண்பாகளிலும் ஆரம்பம்
அருமை
வெண்பாக்களில் வெளுத்து கட்டுகிறீர்கள்... நல்லாயிருக்கு.
இரண்டுமே நன்றாக இருக்கிறது நண்பரே...
அப்பு சிவகுமாரா.....ஆப்பு சூப்பரோ சூப்பர் !
இரண்டும் நன்று நண்பரே
///மோகம் தொடங்கிற்றா
அடித்தாய் உனக்கேநீ
ஆப்பு.////
ஆகா மிரட்டுறாய்ங்களெ..
வரி அருமைங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
மாப்போ ..... ஆப்போ .....
அதெல்லாம் ஒன்றும் எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் எங்கள் காதலுக்கு கண்கள் இல்லை.
அவை முட்டிமோதி எங்களுக்குப் புலப்பட வெகு நாட்கள் ஆகும்.
நல்ல கவிதைகள். பாராட்டுக்கள்.
'தம்மால் முடிந்தவரை பொய்சொல்வாய்'.மற்ற வரிகள் சில நேரங்களில் படித்தவை.இந்த வரிகள்? எழிலன்
மாற்றங்களை சிறிது எள்ளலுடன் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
மனவலிக்கோர் மருந்து கேட்பதேன் சகோதரி.?
வலி நீக்கும் மருந்து உங்களிடமே இருக்க , உங்கள் கவிதைகளாய் ?
நன்றி சகோதரரே நான் தேடிய வலிமருந்து எனது பாடல்களில்
நான் அன்றைய நாள் எழுதிய "என் தாய்த்திரு நாட்டுக்கு சமர்ப்பணம்"
என்ற இந்தப் பாடலை அன்று நீங்கள் வாசிக்கவில்லையே.வாசித்திருந்தால்
புரிந்திருக்கும் இந்த மருந்து எனக்குமட்டும் அல்ல உங்களுக்கும்
சேர்த்துதான் என்பது.பறுவாயில்லை இனியாவது நேரம் கிடைக்கும்போது
இதை ஒருகணம் பாருங்கள் சகோதரரே..... நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.
ஆகா ஆப்புக் கவிதை அருமை சகோதரரே வாழ்த்துக்கள். இனியும் கவிதைகளை வாரி வாரி இறையுங்கள் நெஞ்சில் என்றும் வற்றாத பேரூற்றாக இன்பக் கவிதைவரிகள் பொங்கட்டும்...
இரண்டு கவிதைகளும் அருமை..
''..அம்மா உனக்கினி
அந்நியம் ஆகிடுவாள்
சும்மா வரும்கோபம்..''
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
கருத்துரையிடுக