சனி, செப்டம்பர் 03, 2011

மீண்டு(ம்) வருவேன்

பணிச்சுமை தாங்காது பாரம் ஒடிந்தது
கணினிக் கவியெனும் கட்டை வண்டி.
அழுத்தும்  சுமையால் அடிமாடாகி
இழுத்துச் செல்ல இயலாது தவித்து
நகருமென் வாழ்வின் நரக வலியை
பகரவென் னிடத்தில் வார்த்தைகள் இல்லை.

கவிதைஎன் மூச்சுதான்.ஆனால் உங்கள்
செவியில் விழாதென் மூச்சுக் காற்று.

ஆதர வளித்த அத்தனை பேர்க்கும்
காதலால் உருகி கரங்கள் குவித்து
நன்றிகள் சொன்னேன். இப்போ தைக்கு
சென்று வருகிறேன். சிறகுக ளோடு
மீண்டும் வருவேன் , மீண்டு வருவேன்.
ஆண்டவன் அருளால் அதுவும் நடக்கும்.

       

33 கருத்துகள்:

 1. விடை பெறுதலை கூட கவிதையாய் சொல்லியிருக்கிறீர்கள்... உங்கள் வாழ்க்கை வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்... கூடிய விரைவில் மீண்டு வர மறுபடியும் வாழ்த்துக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. அகவல் நடையில் வலையினை விட்டுப் பிரிய மனமின்றி பிரிந்து செல்லும் உங்களின் உணர்வுகளை, மீண்டும் எம்மைச் சந்திக்க வருவேன் எனும் ஆறுதலோடு கூறிச் செல்கின்றீர்கள்.

  நீங்கள் ஆறுதலாக வாங்க அண்ணா.

  பதிலளிநீக்கு
 3. அகவல் நடையில் வலையினை விட்டுப் பிரிய மனமின்றி பிரிந்து செல்லும் உங்களின் உணர்வுகளை, மீண்டும் எம்மைச் சந்திக்க வருவேன் எனும் ஆறுதலோடு கூறிச் செல்கின்றீர்கள்.

  நீங்கள் ஆறுதலாக வாங்க அண்ணா.

  பதிலளிநீக்கு
 4. கிட்டத்தட்ட நானும் இதே நிலையில் தானிருக்கிறேன். உங்களின் நெடுநாள் ஆசையான கவிதையாய் ஒரு காவியம் இயற்றும் கனலை அணையை விடாதீர்கள். மீண்டும் சந்திப்போம் கவிதைப் பூக்களோடு...வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. எல்லோருக்கும் ஒரு இடைவெளி தேவைப்படும்தான். மீண்டும் வாருங்கள். இந்த ஐடைவெளியில் நிறைய கவிதை எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. வலைத்தொடர்பு என்பது எழுதுவது , பின் தொடர்வது என்பது தாண்டி , வசதியான நட்பு ....பழகுபவர்க்கும் பழகுபடுபவர்க்கும் அலைச்சல் இல்லாத நட்பு ... பணிச்சுமை குறைத்து விரைவில் வந்திட வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. விரைவில் கவிதை கட்டுகளோடு எதிர்பார்க்கிறோம்!அதிக இடைவெளியின்றி வருகை புரிய வாழ்த்துக்களுடன் காத்திருப்போம்...

  பதிலளிநீக்கு
 8. அன்பின் சிவகுமாரன்,

  உங்கள் படைப்புகள் கொஞ்ச நாட்களாவே காணமுடியவில்லையே என்னாச்சுன்னு நினைச்சேன்....

  இப்போது தான் விவரங்கள் அறிய முடிந்தது உங்கள் கவிதை வடிவில்....

  மன அழுத்தம், மனக்கவலை, வீட்டில் என்னவோ பிரச்சனை, ஆபிசில் என்னவோ மெண்டல் ஸ்ட்ரெஸ், இதெல்லாம் கண்டிப்பா மனதை அழுத்தும் விஷயங்கள்...இதில் இருந்து விடுபட நினைக்காமல் இதை தீர்க்க முயன்றுவிட்டால் கண்டிப்பா நரகம் கூட சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கு....

  கண்டிப்பா எல்லாம் சரியாகும் சிவகுமாரன்....

  இதுவும் கடந்து போகும்பா.... எதிர் நின்று பேசுவது சுலபம்.... ஆனால் அந்த அவஸ்தையில் உழலுவோர் படும் சிரமங்கள் அறிய இயல்வதில்லை... அது போல உங்க சிரமங்கள் அறியாமல் நான் பாட்டுக்கு சொல்லிவிட்டேன்...

  எல்லாம் சரியாகி நீங்க நல்லபடி வந்து படைப்புகள் தர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்பா...

  பதிலளிநீக்கு
 9. சீக்கிரம் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்

  பதிலளிநீக்கு
 10. //சென்று வருகிறேன். சிறகுக ளோடு//

  எந்த உலக மகாக் கவிஞரும் இதுவரை உபயோகித்திரா வரிகள்.. இது தான் உங்களிடம் தனித்துவமாய் தங்கிப்போன சிறப்பு, சிவகுமாரன்!

  சிறகுகள் இருக்கையில் கவலையேன்?
  விரைவில் உன்னதங்களுடன் வருவீர்கள். வழி மேல் விழிகள் பதிந்து பார்த்துக் காத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. ஆண்டவன் நிச்சயம் அருள் புரிவான் ..
  வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 12. பணிச்சுமை நம் எல்லோருக்கும் அவ்வப்போது அதிகரித்து விடும் நிலை இருக்கத்தான் செய்கிறது சிவகுமாரன்... சற்று நேரம் இருப்பின் அவ்வப்போது வாருங்கள்... காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 13. விபரங்கள் அறிந்தோம்.மீண்டும் வரவை எதிர்பார்த்து காத்திருப்போம்.ஓய்வு நேரம் கிடைக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. ஆதர வளித்த அத்தனை பேர்க்கும்
  காதலால் உருகி கரங்கள் குவித்து
  நன்றிகள் சொன்னேன். இப்போ தைக்கு
  சென்று வருகிறேன். சிறகுக ளோடு...//எல்லோருக்கும் ஒரு இடைவெளி தேவைப்படும்தான்.

  பதிலளிநீக்கு
 15. சீக்கிரம் மீண்டு வர வாழ்த்துக்கள். எழுத்தினாலும் வாழும் பேறு எழுதுபவரின் வரம் இல்லையா? மதுரைப் பதிவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள, இனிமேல் ஒரு இதழில் வரவிருக்கிற, ஒரு கட்டுரையில் உங்கள் ப்ளாக் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. எல்லாம் விரைவில் நலமாக வாழ்த்துக்கள். நிச்சயம் மீண்டு மீண்டும் வருவீர்கள். அதுவரை காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 17. சென்று வ‌ருக‌... வென்று வ‌ருக‌! காத்திருப்போம் நாங்க‌ள்... உங்க‌ள் க‌வின்மிகு க‌ணினிக் க‌விதைக‌ளுக்காக‌!

  பதிலளிநீக்கு
 18. நான் உங்கள் வலைப்பூவில் உறுப்பினராய் இணைந்த வேளை, உங்களிடமிருந்து இப்படியொரு அறிவிப்பு கண்டு மனம் சோர்ந்தேன். சிறு இடைவேளைக்குப் பின் புத்துணர்வுடன் களமிறங்க என் வாழ்த்துகள். என்றும் நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 19. விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. புதிய புத்தகம் பேசுது,செப்டம்பர் 2011 இதழைப் பார்க்கவும். உங்கள் வலைப்பதிவு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது

  பதிலளிநீக்கு
 21. நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்.உங்களின் தமிழை வாசிக்க என்றுமே விழி மேல் வழி வைத்துக் காத்திருக்கிறேன்

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 22. சிவா! நானென்ன சொல்லிவிட்டா மட்டம் போடுகிறேன் வலைக்கு.. நண்பர்களுக்கு நாம் கஷ்டம் தெரியும்.. முடியும் பொது மும்முரமாய் எழுது..
  காத்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 23. சிவா

  இது எப்போ நடந்த கூத்து. உங்களின் அலைபேசி நம்பரை இங்கே சென்னையில் எல்லோரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன். மெயிலில் அனுப்புங்கள் சாய்.கோபாலன் @ ஜிமெயில்.காம்

  நேற்று தான் "எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்" வீட்டில் பேசிக்கொண்டு இருந்தபோது உங்களின் "முட்கள் முளைத்ததடா" கவிதை மற்றும் அதன் வார்த்தை ஜாலத்தை மற்றும் கருத்து செறிவின் ஆக்ரோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.

  மோகன்ஜி சொன்னது போல் அந்தக்கால மூன்று மாசத்திற்கு ஒன்று என்று போடுங்கள்.

  எழுத தெரியாத நானே பந்தா பண்ணி லீவு, வேலை சுமை (அப்படி என்றால் !! இந்த இலஞ்சி / கூர்க் தாக்கம் வந்தபிறகு வேலை என்றால் இப்படி தான் கேட்க தோன்றுகின்றது !), கை வலி அது இது என்று பொங்கு செய்யும்போது நீங்க என்ன பாஸ்.

  அடுத்த பாரதி நீங்கள்.

  சென்னையின் / தமிழ்நாட்டின் அவலத்தை நினைக்கும்போது மறுபடியும் உங்கள் கவிதை கொண்டு அறப்போர் செய்யலாம் என்று இருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 24. தலைப்பிலேயே ஒரு எழுத்தை ஒதுக்கிச்
  சொல்வதன் மூலமாகவே இரு விஷயங்களைச்
  சொல்லிச் செல்லும் உங்கள் கவித்திறன்
  மிகவும் ரசித்தேன்
  ஆயினும் தங்கள் கவியின் பொருளை ரசிக்கவில்லை
  தயவு செய்து மறு பரிசீலனை செய்யவும்
  பதிவுலகின் நடைமுறையிலிருந்து
  பின்னூட்ட்மிடல், பின்னூட்டத்திற்கு நன்றி சொல்லுதல்
  முதலான விஷயங்களிருந்து வேண்டுமானால்
  விலகிக் கொள்ளுங்கள்.அதன் மூலம் அதிக நேரம் கிடைக்கும்
  தங்கள் படைப்புகள் எல்லாம் எங்களுக்கு
  வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக இருப்பதால்
  தொடர்ந்து படைப்புகளை வழங்குமாறு அன்புடன்
  வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 25. வரிகள் இரண்டே-கருத்து
  வள்மது திரண்டே
  தருவன சிறப்பே-நல்
  கற்பனை பிறப்பே

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 26. பணிச்சுமை நம் எல்லோருக்கும் அவ்வப்போது அதிகரித்து விடும் நிலை இருக்கத்தான் செய்கிறது சிவகுமாரன்... சற்று நேரம் இருப்பின் அவ்வப்போது வாருங்கள்... காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 27. அருமை..

  தங்கள் வலைப்பக்கத்ததை தமிழ்க்காற்று சேமித்துள்ளது..

  பதிலளிநீக்கு
 28. ஆச்சர்யமாய் இருக்கிறது. என் கவிதைகளுக்காகவும் காத்திருக்க ஆளிருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து அழைத்த அப்பாஜி , மறுநாளே அழைத்துப் பேசிய காஷ்யபன் அய்யா, மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த போதும் அழைத்துப் பேசிய மோகன் அண்ணா, மெயிலில் தொடர்பு கொண்டு விசாரித்த சாய், எனக்காகப் பிரார்த்திக்கும் அன்பின் சகோதரி மஞ்சுபாசினி, வழி மேல் விழிகள் பதிந்து பார்த்துக் காத்திருக்கும் ஜீவி, என் வலைப்பக்கம் வரமாட்டாரா என நான் ஏங்கிய சகோதரி மிருணா, மறுபரிசீலனை செய்யச் சொன்ன ரமணி சார் , தன்னால் எந்த வகையிலாவது உதவ முடியுமா எனக் கேட்டு கவலைப்பட்டு கடிதம் எழுதிய என் சகோதரன் - இவர்கள் அன்பில் திக்குமுக்காடிப் போகிறேன்.
  மேலும் பிலாசபி பிரபாகரன், நிருபன், ராஜபாட்டை ராஜா, கலாநேசன், கீதா சந்தானம் மேடம், ரசிகமணி , தென்றல் சரவணன், ஆமினா, சென்னைப்பித்தன், வாசு, வெங்கட் நாகராஜ், திருமதி ஸ்ரீதர், மாலதி, மீனாட்சி மேடம், நிலாமகள்,கீதா, R.V. சரவணன் , திகழ், புலவர் ராமானுசம், சமுத்ரா, தமிழ்க்காற்று எல்லோருக்கும் இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  \\எழுதாமல் இருப்பதன் வலியைக் கதறும் குழந்தைக்குப் பால் புகட்டமுடியாது தவிக்கும் ஒரு தாய் உணரக்கூடும்// --- சுந்தர்ஜி ஒரு முறை சொன்னதை இங்கு நினைவு கூர்கிறேன்.
  இந்த நிலை தான் எனக்கும்.
  நன்றி சொல்லவே எனக்கு இத்தனை நாளாயிற்று.
  புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இந்தப் பின்னூட்டத்தையும் வெளியே browsing centre வந்து தான் எழுதுகிறேன்.
  இணையத் தொடர்பு தற்போது எனக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது.
  வேறு காரணம் ஏதுமில்லை.
  நிலைமை சரியாகி மீண்டும் வருவேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வந்து எதுனா எழுதிட்டுப் போங்க்கண்ணோய்..

  பதிலளிநீக்கு