திங்கள், மார்ச் 19, 2012

உன்னை எப்படி மன்னிப்போம் ?






அய்யா அரசியல் வாதிகளே -எமை
   ஆளும் காங்கிரஸ் கபோதிகளே
பொய்யாய் இராஜப் பிச்சையன்
  போடும் வேடம் பார்த்தீரா ?
அய்யோ ! எங்கள் இனந்தன்னை
   அழிக்கும் காணொளி பார்த்தீரா ?
மெய்யாய் உமக்கு கண்ணிலையா?-உன்
   மேனியில் சிறிதும் கொதிப்பிலையா ?


போய்ப் பார்த்தாயா இலங்கைக்கு -நடந்த
  போர் பார்த்தாயா இனவெறிக்கு ?
நாய்போல் தமிழர் சுடப்பட்டு
  நாறிக் கிடந்ததை அறியாயோ ?
வாய்பே சாமல் துயர்கண்டும்
   வாளா திருக்க நீயென்ன
தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயா - இல்லை
   தப்பிப் பிறந்த தெருநாயா ?


திட்டம் போட்டு நம்மினத்தை
   தீர்த்துக் கட்டிய தறியீரோ ?
கட்டிப் போட்டு சுடுகின்ற
  காட்சிகள் கண்டும் பதறீரோ ?
சட்டம் உங்கள் கையிருக்க
  சதியில் உமக்கும் பங்கிருக்க
வெட்டித் தனமாய் யாமிங்கே
   வெம்பிப் புலம்பி என் செய்ய ?

இனத்தை அழித்த இலங்கைக்கு
  எதிராய் சாட்சிகள் பலவிருக்க
பிணங்கள் தின்னும் "பக்க்ஷே"க்கு
  பேரா தரவு நீ தருகின்றாய் .
கனவிலும் நுழைந்து கருவறுத்த
  "கை"களில் இரத்தக் கறையோடு
மனதினில் எந்தத் துணிவோடு
  மறுபடி வாக்குக் கேட்பாய் நீ ?

நாட்டைப் பிடித்த சனியன் நீ -உனை
  நம்பிக் கேட்டது போதுமினி
ஓட்டுக் கேட்டு மறந்தும் நீ
  ஊருக்குள்ளே நுழையாதே
போட்டு மிதிப்போம் தறிகெட்டு -உனை
  புரட்டி எடுப்போம் வெறிகொண்டு
ஆட்டிக் கொண்டினி வாராதே - நாவை
   அறுத்து எறிவோம் மறவாதே .


ஓட்டுப் பொறுக்கி நீயென்பேன்- எங்கள்
  உதிரம் குடிக்கும் பேயென்பேன்
காட்டிக்  கொடுத்த குலமென்பேன்- நீ
   காட்டு நரியின் இனமென்பேன் .
ஊட்டி வளர்த்த தாய்தன்னை -எட்டி 
   உதைக்கும்  உதவாக் கரையென்பேன்  
கூட்டிக் கொடுத்த பிறப்பென்பேன்- அந்தக்
   குணமே உந்தன் சிறப்பென்பேன்.

கொள்ளை அடித்தாய் பொறுத்திருந்தோம் -எங்கோ
   கொண்டு குவித்தாய் பார்த்திருந்தோம்
வெள்ளம் வறட்சி நிதியெல்லாம்
   உருட்டித் தின்றாய் சகித்திருந்தோம்
பிள்ளைக் குட்டியின் உயிர்குடித்த
   பேயுடன் கைகள் குலுக்குகிறாய்.
உள்ளம் நெருப்பாய் கொதிக்கிறதே -இனி
   உன்னை எப்படி மன்னிப்போம் ?



-சிவகுமாரன் 

16 கருத்துகள்:

  1. வெடித்துச் சிதறிய
    வேளையில் பிறந்த
    தடித்த வார்த்தைகளை -என்
    தமிழ்த்தாய் பொறுத்தருள்க.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் உணர்வுக்குத் தலைவணங்கக் கடமைப்பட்டிருக்கிறோம் !

    பதிலளிநீக்கு
  3. கடைசிப்படம்
    http://thenmazhaii.blogspot.in/2012/03/blog-post_17.html#more
    என்ற வலைத்தளத்திலிருந்து தரவிறக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. /தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயா - இல்லை
    தப்பிப் பிறந்த தெருநாயா ?
    //

    செருப்பால அடிச்சா போல கேள்வி இருக்கு

    பதிலளிநீக்கு
  5. காங்கிரெஸ் என்று ஒழியுதோ அன்றுதான் இந்தியா வளரும்

    பதிலளிநீக்கு
  6. நற்றமிழ் தாயை சினமாக,
    நம்மவர் பலரும் காட்டினும்,

    கொற்றவை நீட்டும் நாவினைப்போல்,
    சிவந்தனள் விழியினில் நும்சினத்தால்!

    பற்றெனக் கென்ன என்றிருக்க
    நம்விழிமுன் னினமும் மாண்டதுவே!

    குற்றம் கொலையென கதறி,யங்கே
    மாண்டவர் மீள்வரோ தெளிவுரைப்பீர்!!

    மூடிய விழியினி திறந்திடனும்!
    மூர்க்கர்கள் முகத்திரை கிழிந்திடனும்!

    ஆடிய அரக்கக் காங்கிரசை
    அடுப்பினில் விறகோ டெரித்திடனும்!

    தேடிடும் நம்மினம் அன்பினுக்கே,
    யோசனை யின்றாங் கோடிடனும்!

    கூடிடும் நம்கரங் தோற்றிடுமோ!
    நந்தலைவன் நினைவகன் றோடிடுமோ!

    வீரமேற்றிடும் பாவாய்-நும்எழுசீர்
    ஏற்றுது பாரம் தோழாய்!!

    சூரக்காட்டுப் புலிகள்நாம்-என்றும்
    சோரம் போவது மில்லைகாண்!

    தீரவுரைக்குதுன் பாட்டு-சேரட்டும்
    வாழ்த்துகள் பலஅப் பாக்கு!

    தேன்மழையின் வாழ்த்துகள் தோழர்!!!!

    பதிலளிநீக்கு
  7. கவிக்குமுறல்களுக்கு உயிர்வந்து கொடுமைக்காரர்களை அடக்கிவிடாதா என்று ஏக்கமாக இருக்கிறது.
    நம்மினம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதன் வெட்கம் அதிகமானது உங்கள் வரிகளைப் படித்து.

    பதிலளிநீக்கு
  8. sivakumaran...

    iranthu poneen unkal kavithai kandu. unkalin atthanai sorkalukkum naan utanpadukireen. ennudaiya pathivil ezthuveen. enna seyya pookiroom. eppadi kaapparrap pookirom. verum mannaiya yaarumarru. manam thudithu nirkiren. Some technical problems. sorry for the inconvenience. By Harani.

    பதிலளிநீக்கு
  9. அப்பாத்துரை சொல்வது போல் கவிக்குமுறல்களுக்கு கால் முளைத்ததோ , கல் நெஞ்சர்களின் காதுகளுக்கெட்டியதோ தெரியவில்லை . இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு, ஆதரவாய் வாக்களித்திருக்கிறது இந்தியா. லேசாய் மூச்சு விடுகிறோம். ( நிம்மதி பெருமூச்சு என்று சொல்ல முடியவில்லை) அமேரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ற ஒரே காரணத்துக்காகவே ரஷ்யா, க்யுபா போன்ற நாடுகளும், இங்கிருக்கும் சில கைக்கூலி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வேதனையாய் இருக்கிறது.

    தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து விட்டதற்காக பாராட்டவோ இந்தக் கவிதையை எழுதியதற்காக வெட்கப்படவோ என்னால் முடியாது. அவர்களின் கைகளில் படிந்த இரத்தக் கறையை ஆசிட் ஊற்றி கழுவினாலும் நீக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  10. சிவகுமரன் அவர்களே! தீர்மானம் ஒரு ploy.! ஒரு trap.! இந்தியா , நீங்கள் , உங்களைப்போன்றவர்கள் மாட்டிக்கொண்டு விட்டீர்களே!ஐயா! தயவு செய்து என் இடுகையைப்பாருங்கள்.அன்புடன்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  11. அய்யா, உங்கள் ரஷ்யக் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு இந்தப் பிரச்சினையைப் பாருங்கள். நாங்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்கள் இனம் அழிவதைப் பொறுக்க முடியாமல் புலம்புகிறோம். தெரியும் ..இது வெற்றுப் புலம்பல் தான்.
    ஆதாயம் இல்லாமல் அமேரிக்கா ஏதும் செய்யாது. இருக்கட்டுமே. இலங்கையின் அட்டூழியம் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறதே. அதைத் தான் வரவேற்கிறோம். கருணாநிதி,ஜெயலலிதா ,சோனியா,கிருஸ்ணா எல்லோரும் தான் எங்கள் இனம் அழியக் காரணம்.
    அவர்களும் கவலைப் பட மாட்டார்கள். காசு கொடுத்தால் ஓட்டுப் போட மக்கள் தயாராய் இருக்கும் போது யாருக்கு என்ன கவலை? என்னைப் போன்றவர்கள் புலம்பிவிட்டுப் போகிறோம் ... விட்டு விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. சிவகுமரன் அவர்களே! Lesson learnt and reconciliation commission (L.L.R.C) அறிக்கை என்பது இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தீர்மானம் கேட்கிறது. உள்நாட்டு யுத்தம்நடந்ததால் அமெரிக்கா நேரடி ஆயுத விற்பனையை தடை செய்திருந்தது.நேற்று தடை நீக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்துவிட்டார்கள். நீங்கள் உணர்ச்சி மிக்க கவிஞர்.கவிஞர் மட்டுமே!ஐ.ந தீர்மானத்திற்காக வெற்றி விழா லாவணி நடக்கும். மனமோகன் ராஜ பச்செவுக்கு கடிதம் எழுதியுள்ளார் ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் அய்யா. நான் கவிஞன் மட்டுமே. எனக்குக் கட்சி கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் மாற்றிக் கொள்ளும் கொள்கை கிடையாது. கூப்பிடு தூரத்தில் என் இனம் அழிக்கப்படும் போது, எங்கோ ரஷ்யாவும் சீனாவும் என்ன சொல்கிறது என்று கேட்டு அதன்படி கருத்து சொல்லத் தெரியாது. எனக்கு நான் தான் தலைவன். என் மனம் தான் கட்சி.

    பதிலளிநீக்கு
  14. எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே
    பிரதிபலிக்கும் அருமையான பதிவு
    நிச்சயம் தங்கள் நியாயமான கோபம்
    இந்தக் கருங்காலிகளை நிச்சயம்
    அடியோடு கருவருக்கும்
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  15. கொள்ளை அடித்தாய் பொறுத்திருந்தோம் -எங்கோ
    கொண்டு குவித்தாய் பார்த்திருந்தோம்
    வெள்ளம் வறட்சி நிதியெல்லாம்
    உருட்டித் தின்றாய் சகித்திருந்தோம்
    பிள்ளைக் குட்டியின் உயிர்குடித்த
    பேயுடன் கைகள் குலுக்குகிறாய்.
    உள்ளம் நெருப்பாய் கொதிக்கிறதே -இனி
    உன்னை எப்படி மன்னிப்போம் ?பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. துர்வாசர் இன்று இருந்திருந்தால் அவர் நாவால் இக்கவிதையை ஒருமுறைப் பாடும்படி வேண்டியிருப்பேன். அழிந்துபோகட்டும் அகங்காரப் பிடாரிகள். கனத்த மௌனங்களுக்கிடையில், துணிவுடன் சாடும் இக்கடுங்கவிதையினைக் கரம்கூப்பி வரவேற்கிறேன். நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு