திங்கள், செப்டம்பர் 24, 2012

சாட்டை



கவிதை எனது 
  கரங்களில் சாட்டை
புவியை புரட்டவந்த 
  போர்வாள் - செவியைக்
கிழிக்கும் கருத்துக் 
  கிடங்கு; பகையை
அழிக்கத் துடிக்கும்
  அணு.
-சிவகுமாரன் 
கனல் பறந்த கல்லூரிப் பருவம்
 1990

16 கருத்துகள்:

இளமுருகன் சொன்னது…

2012-ல்?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சார்...

நன்றி...

சமுத்ரா சொன்னது…

அழிக்கத் துடிக்கும் அணு...நல்ல பிரயோகம்!

RVS சொன்னது…

கவிதையில் தெரிகிறது உங்கள் கனல் பறந்த கல்லூரிப் பருவம்.
அருமை! :-)

அப்பாதுரை சொன்னது…

பசுமை நிறைந்த நினைவு.

கீதமஞ்சரி சொன்னது…

கனல் பறந்த கல்லூரிப் பருவத்தில் அனல் பறக்கும் அணுக்கவிதை அருமை. பாராட்டுகள் சிவகுமாரன்.

ஸ்ரீராம். சொன்னது…

விளையும் பயிர்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

நன்றி…

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அன்பின் சிவகுமார்,

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா. சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..

http://blogintamil.blogspot.com/

இந்த பிள்ளையைப்பற்றி சொல்லனும்னா மனிதம் என்னும் எங்கோ
மிச்சமாகி இருக்கிறது என்பதற்கு இந்தப்பிள்ளையின் வரிகளை
படிக்கும்போது உணரலாம்.. அட நிஜமாதாம்பா...மனிதர்களையும்
தாண்டி பறவை, பூச்சி, மீன், மிருகம் என்று எல்லா உயிர்களிலும் அதன்
வலியை அதன் சந்தோஷத்தை அதன் உணர்வுகளை தானாய் இருந்து
எழுதிய வரிகளை படித்தால் புரியும்....இவரின் சில
பதிவுகளைப்பார்ப்போமா?


கவிலைகள்
பரிபாலனம்l
கவசகுண்டலம்
பிணைப்பு
முட்கள் முளைத்தடா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

//நண்பரே நான் 25 வருடங்களாக என்னுடைய 15 வது வயதிலிருந்து கவிதை எழுதி வருகிறேன்.(அதற்கு முன்னர் எழுதியதை என் அப்பா சொல்லிக் கிண்டல் பண்ணுவார்கள்). எங்கள் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள், நண்பர்களைத்தவிர என் கவிதைகள் பலருக்கு தெரியாது. அதன் வலி உங்களுக்கு தெரியாது. ஏதோ இணையம் இப்போது எங்களுக்கு ஒரு வடிகாலாக உள்ளது. எவ்வளவோ வெட்டியாகவும் ஆபாசமாகவும் பலர் எழுதும் பொது கவிதையை மட்டும் ஏன் வெறுப்போடு பர்ர்க்கிறீர்கள்? என் வலைப்பக்கம் வந்து சென்று பிறகு சொல்லுங்களேன். //

அப்பூடி என்ன தான் எழுதியிருக்கீங்கன்னு உங்கட பக்கம் பார்க்க வந்தனன் , அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனன். என்னா ஒரு சொல்லாக்கம் படைப்பூக்கம், பரிமளத்தில் பார்த்திப பரவல்.

ஒவ்வொரு கவிதையும் கருணைக்கிழங்குடன் லவங்கம் மகிழம்பூவை போட்டு அதுனுடன் கரும்பு (கருப்புகலர்) சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது போல அமிர்தமாக இருக்கிறது. திங்க திங்க இனிக்கிறதே ?



Unknown சொன்னது…

அருமை சகோ

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கனல் பறக்கும் கவிதை !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கனல் பறக்கும் கவிதை !

Aathira mullai சொன்னது…

தங்கள் கல்லூரிக் காலக் கவிதையில் கனல் பறந்தது..உண்மை.

இன்றும் அதே கனல் பறக்கின்றது சிவா.

Unknown சொன்னது…

அருமையான கவிதை அரசியல்ல அதுவெல்லாம் சகஜமப்ப