சனி, அக்டோபர் 27, 2012

தேன் வந்து பாயுது


மாநகராட்சிப் பள்ளியில்
மந்திரியின் பேரன்.

தமிழ்வழிக் கல்வியில்
தானைத்தலைவரின்
தங்க வாரிசுகள்.

அமைச்சருக்கு மாரடைப்பு
அவசர சிகிச்சை
அரசு மருத்துவமனையில் .

பதினான்கு மணி நேர மின்வெட்டு.
" வெக்கை தாங்க முடியல"
வேதனைப்படுகிறார்
மாண்புமிகு முதல்வர்.

ரேசன்கடையில் நெரிசல்.
வரிசையில்  நின்றதால்
மீட்டிங்கு லேட்டு.
அலுத்துக் கொள்கிறார்
ஆளுங்கட்சி  எம்.எல்.ஏ.


கூடங்குளத்தில்வீடுகட்டி
குடியேறினர்
அணு உலை திறக்கச் சொல்லும்
அறிவியல்வாதிகள் .

எல்லோரும் ஓர்நிறை
எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.


15 கருத்துகள்:

  1. திரிபுராவில் நடப்பதாகக் கேள்விப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு லேசா நெஞ்சு வலிக்கறா மாதிரி இருக்கு! எனவே கற்பனையை கட் பண்ணிக்கறேன்!!

    பதிலளிநீக்கு
  3. இன்னும் எவ்வளவு எவ்வளவு துயரங்கள்...

    முடியலே... அழுதுடுவேன்...

    பதிலளிநீக்கு
  4. அவிங்கல்லாம் திருந்திட்டாங்களா....
    நல்ல கற்பனை. ஆனால் என்றுமே நடக்காத கற்பனை. கவிதை அருமை சிவா

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் அப்பாஜி
    திரிபுரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் மாணிக் சர்க்காரின் மொத்த சொத்து ரூ. 13,900 மட்டுமே.
    கடந்த 1998ம் ஆண்டு மே மாதம் முதல் அடு்த்தடுத்த தேர்தலில் வென்று வரும் இவருக்கு சொந்த நிலமோ, வீடோ, காரோ இல்லை.
    59 வயதான சர்க்காருக்கு முதல்வர் என்ற முறையில் மாத ஊதியம் ரூ. 9,200ம், அலவன்சாக ரூ. 1,200 கிடைக்கிறது. அதை அப்படியே கட்சிக்கு தந்துவிடுகிறார்.
    இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார். இவரது வருமானத்தில் தான் முதலமைச்சரின் குடும்பமே ஓடுகிறது.
    வேலைக்குச் செல்ல பஞ்சலி அரசு காரைக் கூட பயன்படுத்துவதில்லை. ரிக்ஷாவில் தான் போய் வருகிறார்.
    மாணிக் சர்க்கார் மட்டுமே அரசின் காரை பயன்படுத்துவாராம். குடும்பத்தினர் யாரும் அதன் பக்கமே வருவதில்லை. ஒரே நிகழ்ச்சிக்குப் போனாலும் மனைவியை தனது காரில் ஏற்ற மாட்டார். அவரை ஆட்டோவில் வரச் சொல்லிவிடுவாராம் அரசு சொத்தை மிஸ்யூஸ் செய்யக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் சர்க்கார்.

    இதில் வினோதமான (வேதனையான) விஷயம் --- திரிபுரா மாநிலத்தின் ( Human Devolopment Index)எனப்படும் HDI 23 ஆம் இடம் . ஊழல் நிறைந்த தமிழகம்,10 ஆம் இடத்திலும், குஜராத் 13 ஆம் இடத்திலும் உள்ளன.
    இந்தியாவில் கம்யூனிசம் ஒரு குழப்பம்.

    பதிலளிநீக்கு
  6. திரிபுராவை வளரவிடாமல் கட்டுப்படுத்துவதும் கம்யூனிசம் தானோ?
    திரிபுராவில் என்ன இருக்கிறது வளர்ச்சிக்கு உதவ?


    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை அவர்களே! திரிபுராவில்மட்டுமல்ல! மதுரை எம்.பி யக இருந்தவர் தோழர் மோகன்! என்ன செய்ய ?கமயூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)! மதுரை ராசாசி மருத்துவ மனையில்தான் சிகிச்சை பெற்றார்.நண்பர்களும்.தோழர்களும் காலில்விழுந்து கெஞ்சினார்கள்.அரசு மருத்துவ மனையில் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார். மறைந்தும் போனார்! திரிபுரா மலைகளை அழித்து மூங்கில் மரங்களை கூழாக்கி காகித ஆலைகள் கட்டி பணமாக்க முதலாளிகள் விரும்புகிறர்கள். அரசு ஏற்கவில்லை. வளர்ச்சி இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். பாவம்! "There is difference between Growth and Developement" என்பதை அறியாதவர்கள். சிவகுமரன் நன்றி.! கம்யுனிஸ்டுகள் நல்லவர்கள்! கம்யூனிசம் தான்------! குழப்பம் எனக்கு இல்லை சிவா!!!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமை நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள சிவகுமரன்...

    வணக்கம். எத்தனை நாள் கழித்து வந்தால என்ன? அருமையான பதிவு. மனதுக்கு இதம். இதெல்லாம் கனவில்தான் சாத்தியம் எனும்போது வேதனை மண்டுகிறது. இருப்பினும் வழக்கமான உங்களின் நேர்த்தி மகிழ்ச்சியை அள்ளித்தருகிறது. வருவேன் இடைவெளிகளில். பணி இறுக்கம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. there is no growth without development, காஸ்யபன் சார். உலக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கு அத்தனை பக்கங்களும் இதற்கு சாட்சி. கம்யூனிசம் என்றைக்குமே வளர்ச்சியில் நம்பிக்கை வைத்ததில்லை. again, உலக வரலாறு. எல்லாருமே நல்லவர்கள் தான். நல்லவர்களை விட வல்லவர்கள் தான் உலகுக்குத் தேவை.

    பதிலளிநீக்கு
  11. இயற்கை, மனிதம், மிருகம் என்று எதைப் பார்த்தாலும் development is part of growth, often aid each other. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. கம்யூனிசத்துக்கு வளர்ச்சியும் வேண்டும், ஆனால் எந்தவித விரிவோ விருத்தியோ ஆகாது. தானும் முயற்சி செய்யாது அடுத்தவர் முயற்சியையும் சந்தேக்கும் அல்லது தடுக்கும் போலித் தத்துவம் கம்யூனிசம் என்று அடிக்கடித் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. எனக்கிருக்கும் அதே சந்தேகமும் குழப்பமும் இது தான் அப்பாஜி.கம்யூனிசம் ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கிறது. இன்னும் சில நக்சல், மாவோயிஸ்ட் போன்ற கம்யூனிசத்தின் பிரிவுகள் பணக்காரர்களை ஏழையாக்க நினைக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. அப்பதுரை அவர்களே! தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்! எது growth? எது developement? ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  14. க‌ட‌ற்க‌ரையில் த்ண்ணிய‌டிச்சுட்டு பொழுதைக் "க‌ளி"த்துக் கொண்டிருந்த‌
    மீன‌வ‌னை, ஒரு‌ எம்பியே நிபுண‌ர், ஒரு ப‌ட‌கை,
    ப‌ல‌வாக்கி, மீன்க‌ள் பிடித்து ஏற்றும‌தியாள‌ராகி,பெரிய‌ செல்வ‌ந்த‌னாகிப்
    பின் இப்ப‌டி த‌ண்ணிய‌டிச்சுட்டு பொழுதைக் க‌ழிக்க‌ச் சொல்லும் க‌தை தான் "Growth and Developement"ன் வித்தியாச‌ம்.

    வ‌ளங்க‌ளை அழித்து வ‌ள‌ர்ச்சி என்ப‌து,
    க‌ண்க‌ளை விற்று சித்திர‌ம் வாங்குவ‌து தான்.
    செடிக‌ளைக் கொன்றுவிட்டு, வீட்டைச் செய‌ற்கை பூக்க‌ளால்
    அலங்க‌ரிக்கும் அல‌ங்கோல‌ம் அது.
    திரிபுரா முத‌ல்வ‌ர்,
    முத‌ல்வ‌ர்களில் முத‌ல்வ‌ர்.
    ந‌ம் நாடு சிறக்க‌ அவ‌ர் ஆக "வேண்டும்" பிர‌த‌ம‌ர்.

    பதிலளிநீக்கு
  15. http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_15.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு