சனி, ஜூன் 01, 2013

காதல் வெண்பாக்கள் 38




கனிக்குள்  நுழையும் கருவண்டாய், பச்சைப்
பனிப்புல் நுகரும் பகலாய் - இனிக்கும்
அதரம் சுவைத்தேன்! அடடடா ! வேண்டாம்
இதர சுவைகள் இனி .




இனிக்கும் அவளின் இதழ்சுவைத்த பின்னே
எனக்கென்ன வேண்டும் இனிமேல் - மணக்கும்
அறுசுவை இன்பங்கள் ஆகுமோ அந்த
இறுகிய முத்தத்திற்கு ஈடு?


சிவகுமாரன் 


18 கருத்துகள்:

  1. அருமை... படங்களும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    முத்தக் கவிமலரில் மொய்கின்ற வண்டானேன்!
    சித்தம் குளிர்ந்து சிலிர்ப்புற்றேன்! - சத்தியம்
    உன்றன் சுவைவெண்பா உள்ளத்துள் தான்பதிந்து
    என்றும் இருக்கும் இனித்து!

    கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  3. ஈடில்லாக் காதலால் ஈங்கிவன் யாத்திட்ட
    கேடில்லாப் பாவால் கிறுகிறுப்பு கூடுதே
    ஆழ்ந்து களிக்கும் அருந்தமிழ்ச் சொல்லெய்ய
    வீழ்ந்திடுமே காதற் கனி.

    பதிலளிநீக்கு
  4. அருங்காதல் சுகமதை அழகாக சொல்லடுக்கி
    தரும்பாக்கள் அத்தனையும் தேனாக இருக்கிறதே
    பெருங்கவிகள் கூட்டமாக பேருவகை சொல்கையிலே
    குறும்பாவால் வாழ்த்துகிறேன் குற்றமதை மன்னியுங்கள்.

    சகோதரரே உங்கள் பாக்கள் அற்புதம். ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ஆர்வத்தால் நானும் கிறுக்கியதை மன்னியுங்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  5. முத்தம் எப்போதுமே சுவை தானே!!!

    அழகு, ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. அட சொல்லிச்செல்கிறீர்கள்,படமும் சேர்ந்து கொண்டது.காதலும் இன்பமும் அதரங்களில் மட்டும்தான் என்பதைத் தவிர்த்து மற்ற மற்றதான் வைகளிலும் உளளது என்பதே நிஜமாகிப்போகிறது.

    பதிலளிநீக்கு
  7. வனவாசத்தில் மழை. சகதி. நெரிசல். கொசு. இரண்டு நாள் அடைபட்டதில் அதிசயமாக இணையம் வேலைசெய்ததில் இந்தக் கவிதைகள் மட்டுமே என் ஒரே வாசிப்பு - குளிரைக் கொஞ்சம் இதமான சூடாக்கிய மாயக் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  8. அறுசுவை இன்பங்கள் மணக்கும் உணர்வு பெற்ற கவிதை கனக்கிறது பல இன்பச் சுவை தந்து .

    பதிலளிநீக்கு
  9. கவிதை என்று வந்தால் 'காணலியே'?

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    அப்பாஜி..என் சித்தப்பாவின் கவிதை ஒன்றை வெளியிட எண்ணினேன். அதை என் சித்தப்பாவே பாடிய ஒலிப்பேழையை தேடி இணைக்க முயன்று கொண்டிருக்கிறேன். அதற்குள் தவறுதலாக publish பட்டனை click செய்து விட்டேன். மீண்டும் cancel செய்ததால், ப்ளாக் இல் வெளிவரவில்லை. ஆனால் தங்கள் dashboard இல் தெரியும். தவறுதலுக்கு மன்னிக்கவும்.. விரைவில் வெளியிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஹிஹி.. நம்ம கேசா..
    இதுக்கு எதுக்குங்க மன்னிப்பெல்லாம்..

    பதிலளிநீக்கு
  12. அதரம் சுவைத்தபடி அமர்ந்திருக்கும் கவிஞரே
    இதர விடயங்கள் வேண்டாமோ - உதரம்
    பசியென்று சொல்லும் பொழுதாங்கே (அ)தரத்தை
    புசியென்று சொல்விரோ நீர்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள சிவகுமரன்.

    ரசித்தேன்.

    விரைவில் காதல் வெண்பா தொகுதியாக வெளிவர வாழ்த்துக்கள்.

    என்ன ஆயிற்று?

    காணோம்?

    பதிலளிநீக்கு

  14. வணக்கம்!

    முப்பதெட்[டு] இன்பாக்கள்! மோக மணப்பூக்கள்!
    சப்போட்ட தேன்கலந்த சாறென்பேன்! - அப்பப்பா!
    ஈற்றடிகள் என்னிதயம் ஈா்த்தனவே! ஒன்றுக்கும்
    மாற்றடிகள் இல்லை மனத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தங்கள் வாழ்த்தில் மனம் மகிழ்ந்தேன். நன்றி.

      நீக்கு