வியாழன், அக்டோபர் 24, 2013

வளி வலி
பலூனுக்குள் நுழையும் காற்றாய் 
தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
பருக்கும் சுகத்தை நுகரவும் 
வெடிக்கும் தருணத்தை உணரவும் 
முடியாமல்.

உணர்ச்சியற்று 
ஊதும் உதடுகளுக்கும் 
கைகுலுக்க காத்திருக்கும் 
காற்று வெளிக்கும் 
தெரிவதேயில்லை 
நுரையீரல் காற்றின் 
நுண்ணிய வலிகள்

சிவகுமாரன் 

12 கருத்துகள்:

 1. /// நுரையீரல் காற்றின் நுண்ணிய வலிகள்... ///

  அருமை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. எத்தனை நுட்பமான கற்பனை!

  அற்புதம் சகோதரரே!

  மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. படித்தால் வலிக்கும்.

  பதிலளிநீக்கு
 5. அன்பு சிவகுமரன்

  வணக்கம்.

  மறுபடியும் மறுபடியும் உங்களின் நுண்ணிய உணர்வுகளைப் பதிவிடும்போது நான் என்னுள் கசிகிறேன். வலியைக்கூட மென்மையாக அணுகும் இக்கவிதையின் வலி இதமானது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 6. வணக்கம்!

  காற்றின் வலியைக் கவிதையில் கண்டுணா்ந்தேன்!
  போற்றிப் படைத்தேன் புகழ்

  கவிஞா் கி. பாரதிதாசன்

  பதிலளிநீக்கு
 7. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

 8. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  பதிலளிநீக்கு

 9. வணக்கம்!

  திருவள்ளுவா் ஆண்டு 2045
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழாய்ச் சமைத்து!

  பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
  கங்குல் நிலையைக் கழித்து!

  பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
  எங்கும் பொதுமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
  தொங்கும் உலகைத் துடைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 10. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  அன்பு வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

  பதிலளிநீக்கு