விற்பனைக்கு
சாராயம் வித்தீங்க
சகிச்சுக்கிட்டோம்
இட்லி தோசை வித்தீங்க
ஏத்துக்கிட்டோம்
தண்ணியையும் வித்தீங்க
தாங்கிக்கிட்டோம்
இனிமே எதை விப்பீங்க?
காத்தை பிடிச்சு
காசாக்குங்க
பத்தலைனா
எங்களை வித்துருங்க
வாங்கிக்க இருக்காங்க
வசதியா சில பேரு
ஏலாம கெடக்குறோம்
எங்கள்ள பல பேரு.
9 கருத்துகள்:
நயமாகச் சொன்னீர்கள். கவிதை நன்று.
நடந்தாலும் நடக்கலாம் நண்பரே
சம்மட்டி அடி
படத்தில் மட்டுமல்ல
கவிதையிலும்...
ஆதங்கத்தை அழகாக வெளிப்படுதியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் ....!
சவுக்கடி வரிகள் இதுபோல் கவிதை
அடிக்கடி வரனும்!-வேண்டுகோள்!
கோபக் கவிதை. அருமை.
வணக்கம்!
சின்னக் குழந்தைகள் என்ன பெருங்கொடுமை?
என்று விடியல் இவர்க்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அந்தப் படம்.. அய்யோ..
உம்மை கேட்டு விப்பாகளா
உண்மை தெரியாம புலம்புலாமா
மோடிக்கு
அம்மா சொன்னா கேட்காது
அமெரிக்கா சொன்ன கேட்கும்
விலைபோனது தெரியுதா?
கருத்துரையிடுக