ஞாயிறு, டிசம்பர் 21, 2014

காதல் வெண்பாக்கள் 47


உன்பாதம் போகும் வழியெல்லாம் பின்தொடர்ந்து
என்பாடல் கேட்குமடி எந்நாளும் - வெண்பாவில்
பாடுகிறேன் உன்னழகை! பாடும் கவியினிலும்
தேடுகிறேன் உன்னைத் தினம்.

தினமுன்னைக் கண்டாலும் தீர்ந்திடாது உன்மேல்
மனங்கொண்ட காதல் மயக்கம் - சினங்கொண்டு
பார்த்தாலும் போதுமடி! பாலை நிலந்தன்னில்
நீர்த்துளிபோல் கொள்வேன் நினைத்து.

சிவகுமாரன் 

36 கருத்துகள்:

  1. வெண்பாவில்
    பாடுகிறேன் உன்னழகை!

    பாலை நிலந்தன்னில்
    நீர்த்துளி

    ஆஹா... அருமை... அருமையான வெண்பாக்கள்....
    வாழ்த்துக்கள் கவிஞரய்யா////

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குமார். அய்யா எனும் விகுதியெல்லாம் அதிகம் நண்பரே

      நீக்கு
  2. தினம்நினைத்து வாடும்வேர் தாகத்தில், என்றன்
    வனம்நனைத்துப் போதற்கு வாடி! - கனவுகளின்
    கட்டில் உறங்கும்‘என் கல்லறைகள், உன்கண்கள்
    தொட்டெழுப்ப நீங்கும் துயில்!.

    அருமையான வெண்பாக்கள் அண்ணா!
    அந்தாதியாய்க் கொண்டு போகிறீர்களோ...?!!!!
    அருமை அருமை!
    நன்றி!!!!

    பதிலளிநீக்கு

  3. வணக்கம்!

    காதல் சுவையூறும் கன்னல் கனிவெண்பா
    ஊதல் இசையாக உள்நுழையும்! - ஆதலினால்
    இன்னும் பலநுா[று] எழுதுகவே! எந்நாளும்
    மின்னும் தமிழை விளைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா தங்களின் வாழ்த்துக் கவிதைக்கும், தனியஞ்சலில் பிழையைச் சுட்டித் திருத்தியதற்கும்

      நீக்கு
  4. சினம் கொண்டு பார்த்தால்கூட போதும் என்ற வரிகள் அன்னியோன்யத்தை மிக அழகாக முன்வைக்கின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்தோறும் படித்தாலும்
      என்றென்றும் இனிக்கும்
      கவிதை தங்கள் கவிதை
      நன்றி நண்பரே

      நீக்கு
    2. நன்றி அய்யா. தங்களின் தொடர் வருகை எனக்குப் பெருமிதம் தருகிறது அய்யா.

      நீக்கு
  5. காதல் பொங்குகிறது வெண்பாக்களில். கவிநயமும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. // பாலை நிலந்தன்னில்
    நீர்த்துளிபோல் //

    அப்படிச் சொல்லுங்க...!

    பதிலளிநீக்கு
  7. பிள்ளைக் குறள்பாடும் அண்ணாஉம் இப்பாவோ
    கிள்ளையாய் கொஞ்சுதே பார்!:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி. மிகக் குறுகிய காலத்ிலேயே வெண்பா கற்று வெளுத்து வாங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்

      நீக்கு
  8. அருமை.

    வெண்பாவிலு(ம்) பாடுகிறேன்? 'ம்' வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம் சார்,அது "வெண்பாவிலும்" அல்ல,. "வெண்பாவில்" என்பதே சரி. திருத்தி விட்டேன்.

      நீக்கு
  9. அழகான காதல்வெண் பாவிலூறும் அன்பில்
    இளகாத நெஞ்சும் இழகுமதை கேட்டவுடன்
    பாடியே தேடிடும் காதலினி பாழ்படாது
    கூடிடுமெண் ணம்விரைவில் உனை !

    மிக மிக அருமை கவிஞரே !

    பதிலளிநீக்கு
  10. நண்பரே,

    ஊமைக்கனவுகளில் திளைத்த தருணத்தில் தங்கள் கவிதைச்சோலையின் நிழல் கண்டேன்...

    " பாலை நிலந்தன்னில்
    நீர்த்துளிபோல் கொள்வேன் நினைத்து. "

    இந்த பித்துதானே காதலை காலங்காலமாய் கொண்டாச் செய்கிறது ?!

    இனி தொடருவோம்...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. நலந்தானா? இன்னும் காதல் செய்து கொண்டிருக்கிறீரா?:)

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. பாலையில் நீர்த்துளி.... பொருந்தவில்லை கவிஞரே..

    பதிலளிநீக்கு
  14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா....

    பதிலளிநீக்கு
  15. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு சிவா! புத்தாண்டு வாழ்த்துக்கள்... பொங்கல் வாழ்த்துக்கள்.... முன்கவனமாய் காதலர் தின வாழ்த்துக்கள்....

    காதல் வெண்பா வென் காதல் பா!

    பதிலளிநீக்கு
  17. நேரமிருப்பின் பாண்டுவைப் பார்க்க வா சிவா

    பதிலளிநீக்கு
  18. நேரமிருப்பின் பாண்டுவைப் பார்க்க வா சிவா

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள சிவகுமரன்... வணக்கம்.. நீண்ட நாட்களாகிவிட்டன. விருப்பமான பதிவுகளில் ஒன்றான உங்கள் பதிவிற்கும் வரவும்....இயன்றவரை இனி வருவேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள சிவகுமரன்... வணக்கம்.. நீண்ட நாட்களாகிவிட்டன. விருப்பமான பதிவுகளில் ஒன்றான உங்கள் பதிவிற்கும் வரவும்....இயன்றவரை இனி வருவேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு