வெள்ளி, ஜூன் 12, 2015

காதல் வெண்பாக்கள் 50



நினைத்துக் கிடப்பதால் நீளும், விழிநீர்
நனைத்தத் தலையணையின் நாட்கள்-அனைத்தும்
அடங்கும் இரவில் அசையாமல் தூங்கி
முடங்கும் கடிகார முள்.



முள்ளாகக் குத்தும் முகம்தவிர்க்கும் உன்கோபம்!
உள்ளூரச் சிக்கி உணர்வழிக்கும் - சுள்ளென்று
சுட்டெரிக்கும் சொல்லும் சுகமாகும்! நீயென்னை
விட்டு விலகாமல் வீழ்த்து.



வீழ்ந்து  கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
ஒடித்தால் உடையாதென்(று) ஓது.


சிவகுமாரன்


18 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    வெண்பாக்கள் எல்லாம் மிக அருமையா க உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1
    ஷ-நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வீழ்ந்து கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
    தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
    முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
    ஒடித்தால் உடையாதென்(று) ஓது.

    அனைத்தும் அருமை அருமை! உண்மையும் கூட !

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அண்ணா.

    உங்கள் கவிதைகளைக் காணக் காத்திருப்பதை விடக் காதலை உளம் கொண்டு முடிவறியக் காத்திருத்தல் கடினமாய் இல்லை. அனுபவத்தில் சொல்கிறேன்.

    “ஓதும் மனக்குகைகள் ஓயா தெதிரொலித்து
    மோதும் அவள்நினைவு மந்திரங்கள்- காதலுக்கு
    வேதம் எனவாகும் வெண்பாக்கள் செந்தமிழின்
    கீதம்‘எனை ஆக்கும் கிறுக்கு!

    தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.

    த ம கூடுதல் 1

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. // யாருக்கும் தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா... // அப்படிச் சொல்லுங்க...!

    பதிலளிநீக்கு
  5. வெண்பா அந்தாதியில் காதல் பொங்கி வழிகிறது. அருமை

    பதிலளிநீக்கு
  6. கவிதை அருமை நண்பரே வாழ்த்துகள்
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  7. தங்களின் 50 வது இணைப்பாளர் ஆகி விட்டேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  8. ஏங்கிக் கிடப்பார்கே
    இனிக்கின்ற வெண்பாவை
    தேங்கும் நீர்தன்னின்
    தெளிவே போல்தந்தீரே
    ஓங்கும் வளர்மரமாய்
    உயர்தமிழின் விளைநிலமாய்
    தாங்கும் தூணாக
    தமிழுக்கே ஆனிராம்

    பதிலளிநீக்கு

  9. /வாழ்ந்து
    முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
    ஒடித்தால் உடையாதென்(று) ஓது/ நானெல்லாம் இன்னும்வாழ்ந்து முடிக்கவில்லையோ சிவகுமாரா...!

    பதிலளிநீக்கு
  10. சிவகுமாரன்!நலமா?
    வெண்பா அந்தாதி அருமை
    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  11. அருமை. குறிப்பாக இரண்டாவது கண்ணியும், மூன்றாவதும்.

    பதிலளிநீக்கு
  12. அருமை
    தங்களை வலையில் சந்தித்து நீண்டுநாட்கள் ஆகிவிட்டன நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள்
    காத்திருக்கிறோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  13. ஏக்கத்தை வார்த்தைகளில் கவிதைவழியாகக் கொண்டுவந்தமையறிந்து மகிழ்ச்சி.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்!

    விழிநீர் நனைத்த தலையணை வெண்பா
    மொழி..நீர் அளித்துநலம் மூட்டும்! - பொழிலாகப்
    பூக்கும் கருத்தெல்லாம் பொற்றமிழ் மேன்மையைக்
    காக்கும் அரணாய்க் கமழ்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  15. //.வீழ்ந்து கிடக்காதே வேலிக்குள்! யாருக்கும்
    தாழ்ந்து அடங்காமல் தாண்டிவா!-வாழ்ந்து
    முடித்தோர்கள் நம்மை முடக்குவார்! காதல்
    ஒடித்தால் உடையாதென்(று) ஓது.//

    உள்ளத்தில் கட்டுண்ட வார்த்தைகள் கட்டற்று வெள்ளமாய் களம் காணுகிறது உள்ளம் பூரிக்கிறது பாராட்டுகள் ....

    பதிலளிநீக்கு
  16. அனபுள்ள சிவகுமரன்

    வாழ்த்துக்கள். எப்படியிருக்கீங்க? நாளாயிற்று உங்கள் பதிவிற்கு வந்து என்றாலும் மனம் குளிர்கிறது வெண்பா மழையால்.

    பதிலளிநீக்கு
  17. செமை தோழர்
    தொடர்ந்து எழுதுங்க ...

    பதிலளிநீக்கு