வெட்கிக் குனிதலுக்கும், வெற்றிக்கும் காரணமாம்
நட்பைக் கவனமாய் நாடு. 81.
நட்பைக் கவனமாய் நாடு. 81.
நாடிவரும் வெற்றியுனை, நம்பி முயற்சித்துக்
கோடி வளங்கள் குவி.
கோடி வளங்கள் குவி.
குவிப்பாய் மனதை குறிக்கோளை நோக்கி
தவிர்ப்பாய் விரயம் தனை.
தவிர்ப்பாய் விரயம் தனை.
தனையே வினவு! தவறெங்கே தேடு.
உனையேத் திருத்தி உயர்.
உனையேத் திருத்தி உயர்.
உயர்வதும் தாழ்வதும் உந்தன் உழைப்பில்
அயலார் எவர்பொறுப்பும் அன்று.
அயலார் எவர்பொறுப்பும் அன்று.
அன்றைய வேலையை அன்றைக்கே செய்துவிடில்
என்றைக்கும் இல்லை இடர்.
என்றைக்கும் இல்லை இடர்.
இடர்வரும் வேளை இரும்பெனத் தாங்கிக்
கடப்பதே வாழும் கலை.
கடப்பதே வாழும் கலை.
கலைகளில் ஒன்றினைக் கற்றதில் மூழ்கி
மலைபோல் துயரும் மற.
மலைபோல் துயரும் மற.
மறந்தும் தொடாதே மதுவகை! மீண்டும்
பிறந்தும் தொடரும் பிணி.
பிறந்தும் தொடரும் பிணி.
பிணியிலாத் தேகமும் பிள்ளை மனமும்
இனியதோர் வாழ்வின் எழில். 90.
இனியதோர் வாழ்வின் எழில். 90.
சிவகுமாரன்
10 கருத்துகள்:
அற்புதமான கருத்துடன்
மிக நேர்த்தியாய் ....
மீண்டும் முதலில் இருந்து படிக்கத் துவங்குகிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள். நன்று.
Excellent work.Best Wishes.
இதுவரை எத்தனைப் பிள்ளைக் குறள்கள் எழுதி இருப்பீர்கள் ?
பாராட்டுகள் ஐயா...
உன்குறட் பாவை உயர்த்தி புகழ்ந்திட
என்னிடம் இல்லை எழுத்து!
குறளந்தாதி குன்றிட்ட விளக்கு உபதேசத்
திரளென்றே கொள்வேன் சிரம்
குறளந்தாதி குன்றிட்ட விளக்கு உபதேசத்
திரளென்றே கொள்வேன் சிரம்
/தனையே வினவு! தவறெங்கே தேடு.
உனையேத் திருத்தி உயர்./
அருமை! சொன்ன முறையும் சொன்ன பொருளும்.நன்றும் தீதும் பிறர் தர வாராதன்றோ?
செட்டான வரிகளில் சத்தான உணவு உள்ளத்திற்கு.தொடர்ந்து தருக!
அருமை
கருத்துரையிடுக