ஞாயிறு, மார்ச் 13, 2016

மயிலைத் தேடிய மழை



நீயிருந்து பெய்தமழை 
   நேற்று வந்தது-இங்கு
   நீயில்லாமல் என்னைக்கண்டு 
   திகைத்து நின்றது.

வாயில்வரை வந்துபின்னே 
   வரமறுத்தது-என்
   வாசல்சன்னல் கதவுடைத்து 
   வேகங்கொண்டது

கோயிலுக்குள் சிலையைத் தேடி 
    கோபம் கொண்டது-தன்
    கோபம்காட்ட வீதியெங்கும் 
    கொட்டித் தீர்த்தது.

போயிருக்கும் மழைமீண்டும் 
    தேடிவந்திடில்- என்ன
    பொய்யுரைத்து நான்பிழைப்பேன் 
    பெண்மயிலே சொல்.
சிவகுமாரன்
13.03.16
                 

15 கருத்துகள்:

  1. நல்ல மழைதான்..
    நாளைக்கும் வரச்சொல்லுங்கள்
    என்ன பொய்சொல்லியும்..
    ஏனெனில்
    மழை நல்லது..
    உங்கள் கவிதை போலவே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா. மழை நல்லது தான்.வரச் சொல்லியிருக்கிறேன் புதுகைக்கு. இங்கு படுத்துகிறது.

      நீக்கு

  2. நன்றாகத் தொடுத்திருக்கிறீர்கள். ப்ரமாதம்.

    திரும்பி வந்து நின்றால் அந்த மழைக்கு என்னதான் பதிலாய்ச் சொல்வது? அடடா, எப்பேர்ப்பட்ட இருத்தலியல் சிக்கல்?

    பதிலளிநீக்கு
  3. நீயென்று கூறப்படுபவரா கோயிலுக்குள் சிலை?

    பதிலளிநீக்கு
  4. அது சரி அந்த மழைக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்??!! பொய்யுரைப்பதற்குப் பதில் பெண் மயில் வந்துவிட்டால்??!!!

    பதிலளிநீக்கு
  5. மெல்லிய கவிதைச் சாறல் போலவே மழை.

    பதிலளிநீக்கு
  6. உன் கவிதை காணும்தொறும் என் மனம் கலாபம் விரிக்கிறதே!

    பதிலளிநீக்கு
  7. படிப்பவர் நெஞ்சிற்குள் பெய்திருக்கும் மாமழை.....:)

    தொடர்கிறேன் அண்ணா!

    பதிலளிநீக்கு