செவ்வாய், செப்டம்பர் 27, 2016

கபீரும் நானும் 20



संत ना छाडै संतई, जो कोटिक मिले असंत
चन्दन भुवंगा बैठिया,  तऊ सीतलता न तजंत  

Sant na chode santai, jo kotic meley asant 
Chandan bhuvanga baitheya, tau shetalata na tajant 

A gentle man does not leave his gentleness, even if he is surrounded by thousands of wicked persons. It is similar to a Chandan tree, who does not leave his coolness, even if thousands of snakes are around its' trunk. 

அற்பர்கள் கூட்டந் தனிலும் சான்றோர்
   அறிவினில் தோன்றுமோ நீசம்?
சர்ப்பங்கள் ஆயிரம் சூழ்ந்தும் காட்டுச்
    சந்தனம் மாறுமோ வாசம்?
-----------------------------------------------------------------------------------------------------------------16.

तन को जोगी सब करें, मन को बिरला कोई.
सब सिद्धि सहजे पाइए, जे मन जोगी होइ.

Tan ko jogi sab karey, man ko birla koi 
Sab sidhi sahje payea, je man jogi hoi 

Every body can become saint from his body, but an exceptional person becomes saint from heart. But he you become saint from your heart, all the spiritual power will automatically come to you.

தோற்றம் மாற்றிப் பெறலாம் முற்றும்
     துறந்த ஞானியர் வேடம்.
மாற்றம் கொள்வார் மனதுள் - அவர்க்கே
    மாபெரும் சித்திகள் கூடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------17.


आग जो लगी समंद में, धुआँ न परगट होए 
सो जाने जो जरमुय, जकी लगी होए 


Aag jo lagi samudra mai, dhuva na pargat hoi 
So jane jo jarmuye, jaki lagi hoi 

If fire broke out inside the ocean, no smoke is visible.
 Only those people know it, who were there and got burned. 

கடலின் நடுவே எரியும் தீயின்
   கரும்புகை யாருக்குத் தெரியும் .
கடமைகள் செய்தே கடப்பார் அவர்தம்
    கவலைகள் மனமே அறியும் .

---------------------------------------------------------------------------------------------------------------18.

दुनिया के धोखे मुआ, चल कुटुंब की कानि
तब कुल की क्या लाज है, जब ले धरा पसानि  

Duniya ke dhokey mua, chal kuthumb ke kani
Tab kul ke kya laz hai, jab le dhara pasani 

Due to trickery of the world, we are busy in supporting our family. What will happen to your family, when you will be lying on the ground (i.e. dead) ? 

இல்லறம் இல்லறம் என்று அலைந்தே 
   ஏனைய அறங்கள் மறந்தாய்.
இல்லறம் காக்க எவரும் உளரோ 
    இன்றுநீ திடுமென இறந்தால் ?
----------------------------------------------------------------------------------------------------------------19.

हाड़ जलै ज्यूं लाकड़ी, केस जलै ज्यूं घास 
सब तन जलता देखि करि, भया कबीर उदास  

Haad jaley jyu lakadi, kesh jaley jyu ghas
Sab tan jalta dhekh kari, bhaya Kabir udas. 

After death, the body burn like wood and hairs like grass. 
Seeing the whole body burning like this, Kabir gets upset.

வேகுது வேகுது விறகாய் தேகம்.
   உருகுது புல்லாய் மயிர்கள்.
போகுது போகுது வீணாய் - இந்த
   புவியில் பிறந்த உயிர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------20.


.....தொடர்வோம்.

சிவகுமாரன் 

11 கருத்துகள்:

  1. தமிழ், இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியிலும் முழுதாய் தேர்ச்சி பெற்றவனில்லை நான். ஆனாலும் ஆர்வக்கோளாறில் மகான் கபீர்தாசரை மொழியாக்கம் செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் இது கபீர்தாசரின் தோகேக்களின் நேரடி மொழிபெயர்ப்பல்ல.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அண்ணா!

    முதலாவதாய் வந்துவிட்டேன்.

    உங்கள் ஆக்கம் பார்க்க எனக்குக் கபீரின் சிந்தனைகளோடு பொருந்தும் நம் பழம்பாடல்கள் நினைவிற்கு வந்தன. கூடவே இதை மொழியாக்கம் செய்ய தேவைப்படும் முயற்சியும் சொற்களஞ்சியப்பெருக்கும் மனதின் உள்ளோடித் துடிக்கும் கருத்திற்கு நல்லோசையால் வரம்பு செய்ய வேண்டிய உழைப்பும் ......

    வாழ்த்துகள் அண்ணா!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அற்புதம்
    மிக எளிதாக ஆழமான விஷயத்தைப்
    புரிந்து கொள்ளும்படியாகவும்
    மிகச் சரியாக உணர்ந்து மகிழும்படியாகவும்
    மொழிமாற்றம் செய்த விதம்
    மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறந்த முயற்சி. அவ்வப்போது தங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன். மொழிபெயர்ப்பு நேரடியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கருத்து அந்தந்த மொழியில் சென்றடைந்தால் அதுவே மொழிபெயர்ப்பாளரின் வெற்றி. தங்களின் முயற்சி வெல்க.

    பதிலளிநீக்கு
  6. தமிழ், இந்தி, ஆங்கிலம் என எந்த மொழியிலும் முழுதாய் தேர்ச்சி பெற்றவனில்லை நான். ஆனாலும் ஆர்வக்கோளாறில் மகான் கபீர்தாசரை மொழியாக்கம் செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். //

    ஹிந்தி தெரியுமா என்று கேட்க நினைத்து வந்தால் நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள்! ஆனால் உங்கள் தன்னடக்கத்தை மெச்சுகின்றோம். உங்கள் தமிழறிவிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் சிவகுமாரன். தமிழில் புலமை இல்லை என்று சொல்லிக் கொண்டே தமிழ் அன்னையுடன் விளையாடுகின்றீர்கள். உங்கள் மொழிபெயர்ப்பை வாசித்து வியந்து பிரமித்து வாயடைத்துப் போனோம். புத்தகமாக்கலாமே!

    அருமையான மொழிபெயர்ப்பு! பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. மூலம் எப்படி இருக்கிறதெனத் தெரியாது.நீங்கள் எழுதியுள்ளவற்றை பார்க்கும்போது மூலக் கவிதையின் சிறப்பை சிதைக்காமல் அழகான தமிழில் சொலி இருப்பதாகவே தெரிகிறது.பாடலின் பொருளும் சந்தமும் கவர்ந்திழுக்கின்றன
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறந்த முயற்சி...
    அருமையான மொழிபெயர்ப்பு.

    பதிலளிநீக்கு
  9. சர்ப்பங்கள் ஆயிரம் சூழ்ந்தும் காட்டுச்
    சந்தனம் மாறுமோ வாசம்? எனன அழகான மொழியாக்கம்! பாராட்டுக்கள் சிவக்குமார்! சிறப்பான முயற்சி தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு