செவ்வாய், பிப்ரவரி 14, 2017

காதல் வெண்பாக்கள் 56


போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது 
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில் 
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.

ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத 
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம். 

சிவகுமாரன் 

8 கருத்துகள்:

 1. ஆதலினால் காதல் சுகம்
  அருமையான பாக்கள்

  பதிலளிநீக்கு
 2. ஆமாம்! ஆதலினால் காதல் சுகமே! வரிகளிலும் அந்தக் காதலின் சுகம்!!!

  பதிலளிநீக்கு
 3. சேதியைக் கண்டேன், சிற்சில நீர்க்குமிழி!
  தேதியைக் கண்டே தெரிந்துகொண்டேன் - பாதிக்குப்
  பாதியைத் தாண்டும் பயணத்தில் எல்லார்க்கும்
  ஆதியைத் தாண்டும் அகம்!

  பதிலளிநீக்கு
 4. மன்னிக்கவும், “சிற்சில” என்பதை “சிலச்சில” என்று திருத்தி, தளைப்பிழையிலிருந்து காக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு