புதன், டிசம்பர் 14, 2011

ஹைக்கூ கவிதைகள் 50



பச்சை வயலின்  
பரிணாம வளர்ச்சி
மச்சு  வீடுகள்






விரட்டப்பட்டனர் பிச்சைக்காரர்கள்.
வெகு விமரிசையாய்
அன்னதானம்.




என் வீட்டில் திருட
எனக்கே லஞ்சம்.
ஓட்டுக்குப் பணம்.





முதுகில்  தொற்றியது  குழந்தை.
இறங்கிக் கொண்டது
அலுவல் அழுத்தம்.







காலை  கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது.




- சிவகுமாரன்


36 கருத்துகள்:

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஏதாவது ஒருஹைக்கூவை பாராட்டலாம்னு பார்த்தா எல்லாமே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

படங்களுக்கான கவிதையா
கவிதைக்கான படங்களா ?
படங்களும் ஹைகூ கவிதைகளும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

//முதுகில் தொற்றியது குழந்தை.
இறங்கிக் கொண்டது
அலுவல் அழுத்தம்.//

எல்லாவற்றிலும் இது அழகு.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

அனைத்துமே அர்த்தம் பொதிந்த வரிகளின் அழகான அணிவகுப்பு!

ராஜி சொன்னது…

என் வீட்டில் திருட
எனக்கே லஞ்சம்.
ஓட்டுக்குப் பணம்.
>>
செம தூள். ஓட்டு போட பணம் வாங்குனவங்களை செருப்பால அடித்த மாதிரி இருந்தது(நாங்க இரண்டு தேர்தலுக்கும் பணம் வாங்குவதில்லை. இனியும் என் குடும்பத்தார் வங்குவதில்லன்னு சபதம் எடுத்துள்ளோம்,)

ரிஷபன் சொன்னது…

முதுகில் தொற்றியது குழந்தை

super..

மாலதி சொன்னது…

மிகவும் சிறந்த ஆக்கம் ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கருத்தை உங்களின் சிறந்த வரிகள் சில வரிகள் சொல்லிவிடுகிறது பாராட்டுகள் நச்சென தாக்கும் வரிகள் இதயத்தை கவரும் அறிகளுடன் சிறப்பு தொடருங்கள் ....

kashyapan சொன்னது…

சிவகுமரன் அவர்களே! அந்த அம்மாவுக்கு மறை முகமாக சொல்றீரோ! பாவம் ! செருப்பு வாங்கி கொடுததுடும் ---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

அருமை சிவகுமாரன். மச்சு வீடு மறக்க நாளாகும்.
படத்துக்கான பாட்டு என்றே தோன்றுகிறது ரமணி :)

Admin சொன்னது…

என் முதல் வருகை.

'காலை கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது'

வாசித்து விட்டு சின்னதாய் சிரித்தேன்..நன்று..வருகையை எதிர்பார்க்கிறேன்..

G.M Balasubramaniam சொன்னது…

அன்பின் சிவகுமாரா, எதை நாட, எதை விட.?எல்லாமே அருமை. வாழ்க வளமுடன்.

test சொன்னது…

எல்லாமே அருமை பாஸ்!
மூன்றாவதும், ஐந்தாவதும் மிகப் பிடிச்சிருக்கு!
உங்கள் கவிதைகளுக்கு என்றும் ரசிகன் நான்!

கீதமஞ்சரி சொன்னது…

\\பச்சை வயலின்
பரிணாம வளர்ச்சி
மச்சு வீடுகள்\\

அடிவயிற்றில் பகீர்.

\\விரட்டப்பட்டனர் பிச்சைக்காரர்கள்.
வெகு விமரிசையாய்
அன்னதானம்\\

பகட்டுக்கு ஒரு பளார்.

\\என் வீட்டில் திருட
எனக்கே லஞ்சம்.
ஓட்டுக்குப் பணம்\\

அட, ஆமாம், உஷார்.

\\முதுகில் தொற்றியது குழந்தை.
இறங்கிக் கொண்டது
அலுவல் அழுத்தம்\\

ஆனைச்சவாரி ஜோர்.

\\காலை கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது.\\

எப்படியும் கடிபடுவார். (ஐயோ பாவம்!)

அனைத்தும் அருமை. பாராட்டுகள் சிவகுமாரன்.

ஸ்ரீராம். சொன்னது…

மச்சு வீடும் ஓட்டுக்குப் பணமும் பிரமாதம்.

thendralsaravanan சொன்னது…

”மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது”என்பார்கள்!உங்கள் கவிதை ஒவ்வொன்றும் கீர்த்தி பெறுபவையாக உள்ளது!சிந்திக்க வைக்கிறது!

பெயரில்லா சொன்னது…

1,2,3,4 இவ்வளவும் எனக்குப் பிடித்தது. அருமை. மென்னகை வந்தது வாசிக்க. வாழ்த்துகள் பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

பெயரில்லா சொன்னது…

1,2,3,4 இவ்வளவும் எனக்குப் பிடித்தது. அருமை. மென்னகை வந்தது வாசிக்க. வாழ்த்துகள் பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

அப்பாதுரை சொன்னது…

புதிய படம், பழைய செருப்பு?

சிவகுமாரன் சொன்னது…

பழைய படம் உறுத்தலாக இருந்தது
(கோவைக்கவி இலங்காதிலகத்தின் பின்னூட்டத்தைக் கவனிக்கவும்)

சிவகுமாரன் சொன்னது…

நன்றி லக்ஷ்மி மேடம்
நன்றி ரமணி சார்
நன்றி சுந்தர்ஜி
நன்றி நெல்லி மூர்த்தி

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ராஜி.
தங்களைப் போன்று எல்லோரும் முடிவெடுத்து விட்டால் நல்லது.
படித்தவர்களே பணம் வாங்குகிறார்கள். நம்ம பணம் தானே என்கிறார்கள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி மாலதி
நன்றி ரிஷபன் சார்

சிவகுமாரன் சொன்னது…

காஷ்யபன் சார் --- இதில் இப்படி பொருளும் இருக்கிறதோ ? ரசனைக்கு நன்றி

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அப்பாஜி.
கவிதைக்குத் தான் படங்கள்.
நன்றி கூகுளுக்கு

சிவகுமாரன் சொன்னது…

தங்கள் முதல் வருகைக்கு நன்றி மதுமதி.
தொடர்ந்து வாருங்கள்

சிவகுமாரன் சொன்னது…

நன்றி GMB சார்.
நன்றி ஜீ. ரொம்ப நாளாச்சு பார்த்து (!?)

சிவகுமாரன் சொன்னது…

நன்றி முனியாண்டி.
தங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லையே. ஏன்?

சிவகுமாரன் சொன்னது…

நன்றி கவிதாயினி கீதா.
ஒவ்வொரு ஹைக்கூவையும் ரசித்து விமர்சித்ததற்கு.
மிக்க நன்றி

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ஸ்ரீராம்
நன்றி தென்றல்
நன்றி கோவைக்கவி

சென்னை பித்தன் சொன்னது…

இதுதான் ஹைக்கூ!class!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சென்னைப் பித்தன் சார்

பெயரில்லா சொன்னது…

ஈற்றடி குரல் ஒருபுறமிருக்க இந்த ஈர்சொல் விளையாட்டு-
ஹைக்கூ குயிலின் கூவல் மிக அருமை. நேரம் விரயமாகாமல்
நச்சென்று நெஞ்சள்ளி புகழை உங்களுக்குக் கிரையமாக்குகிறது .

சமுத்ரா சொன்னது…

உங்களுக்கு ஹைக்கூ வரவில்லை. விட்டுவிடுங்கள்.(எல்லாரையும் போல நானும் ஆஹா ஒஹோ என்று சொல்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்)

சிவகுமாரன் சொன்னது…

உண்மையை சொன்னதற்கு நன்றி சமுத்ரா.
அதற்காக நான் ஹைக்கூ எழுதுவதை நிறுத்த மாட்டேன். நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் வரை.
சுஜாதா அடிக்க வரப் போவதில்லை. அப்துல்ரகுமான் என் ப்ளாக் படிக்கப் போவதில்லை .
பிறகென்ன ?

சரி விடுங்கள் . இங்கிருக்கும் 50 ஹைக்கூக்களில் ஏதாவது ஒன்றாவது உங்கள் ஹைக்கூ இலக்கணப் படி இருக்கிறதா ... சொல்லுங்கள் PLEASE.

Thoduvanam சொன்னது…

Super..each one excel the other..

Parthas beats சொன்னது…

அனைத்தும் நன்றாக இருக்கிறது ,ஆனால் இந்த கடைசி ஹைக்கூ கவிதை மட்டும் நான் படித்தவுடன் சிந்திக்க ஆரம்பித்தது, ஒரு முறைக்கு நான்கு முறை படித்தேன் என்னமோ ஒன்று அதில் இருக்கிறது ஆனால் அது சிந்தனையகேவே இருக்கிறது

//காலை கடித்ததாம்
வேறு செருப்பு கேட்டாள்.
கையை கடித்தது.//
பதில் கூறுமையா!