ஞாயிறு, டிசம்பர் 23, 2012

சொல்லக் கொதிக்குதடாபள்ளிக்குச் செல்லவே பாதுகாப்பு இல்லையே
உள்ளம் கொதிக்குதடா உண்மையில் - கள்ளமிலா
பிஞ்சை சிதைத்த பெரும்பாவிக் காமுகனின்
குஞ்சை நறுக்கியேக் கொல்.

சிவகுமாரன் 

7 கருத்துகள்:

 1. அன்புள்ள சிவகுமரன்...


  நெருப்பான வார்த்தைகள். சொற் பிரயோகம். ஆனாலும் இன்னும் ஆறவில்லை அடங்கவில்லை சுட்ட வலி குறையவில்லை...சிறுசோறும் தொண்டையடைக்க தவித்தேன் செய்தி வாசித்த அன்று.

  பதிலளிநீக்கு
 2. மனித வடிவில் இருக்கும் இதுபோன்ற மிருகங்களைத் தூக்கில் தொடங்கவிட வேண்டும். ஊரின் நடுவில் அனைவரும் பார்க்கும் வகையில் தொங்க விடவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. நறுக்கியதோடு நிறுத்தி வாழ வைக்க வேண்டும் அப் பேடிகளை.

  கொல்வதால் பயனில்லை என்பது எண்ணம்

  பதிலளிநீக்கு

 4. வணக்கம்!

  நறுக்கி நடுத்தெருவில் நட்டால்தான், நாட்டைக்
  குறுக்கிக் குலைப்பார் குறைவார்! - பொறுக்கியா்
  கூட்டத்தைப் போற்றிக் குதிக்கும் அரசியலார்
  ஆட்டத்தை யார்தடுப்பார் ஆா்த்து!

  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013

  பதிலளிநீக்கு

 5. வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  பதிலளிநீக்கு
 6. அறம் பாடிய கவிஞரின் கரங்களுக்கு பெண் சமுதாய்த்தின் சார்பில் கண்ணீர் நன்றிகள்.

  வாழ்க்கையில் பண்பு இல்லாதவர்களை வைவதில் வார்த்தைகள்கூட போட்டி போட்டு முந்துகின்றன.

  பதிலளிநீக்கு
 7. காமுகனின்
  கு(ந‌)ஞ்சை நறுக்கியேக் கொல்.

  பதிலளிநீக்கு