திங்கள், ஆகஸ்ட் 12, 2013

கடவுளே


கவிதை எழுத முயன்று
கண்ணீர் தான் வந்தது.
வற்றிய மார்பில்
வாய் வைத்த
குழந்தை போல்.


9 கருத்துகள்:

 1. இக்கொடுமை மிகு உலகில்தான் நாமும் வாழ்கிறோம்

  பதிலளிநீக்கு
 2. கண்ணீரும் காய்ந்து விடுகிறது சமயங்களில்.

  பதிலளிநீக்கு
 3. இரு வரிகள் ஆயினும்
  இதயம் துளைக்கும் வரிகள்
  படமும் பதிவும் எம்முள்ளும்
  கண்ணீர் பெருக்கச் செய்து போனது
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நெஞ்சறுக்கும் காட்சியினால்
  "சுறக்காதா பாலுக்கும்
  விளையாத வார்த்தைக்கும்"
  நெக்குருகி ஒப்புமையாய்
  கசிந்திட்ட கட்சிக்கான வரிகள் அடாடா
  அடே...டே, முடிவில் ஒரு தொடக்கம் போல்
  மரபில் அலையும் அந்த குழுந்தையாய்
  தாயுண்டு உயிரில்லை
  தனமுண்டு அமிழ்தில்லை.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே!

  உணர்வும் உறைய ஒழுகுதே கண்ணீர்!
  பிணமாக வாழ்வதோ பேசு!

  ஈழம் லேபிளில் உங்கள் உணர்வுகளின் பதிவுகளைப் பார்த்தேன்.
  உளம் உருகிக் கரைகின்றது... உங்களைப் போன்றோரின்
  ஆதரவுக் கர நீட்டலினாற்தான் எங்கள் நம்பிக்கை மரம்
  பசுமையோடு இன்னும் இருக்கின்றது.
  துளிர்விடும் விரைவில். கிளைகள் பரப்பும்...

  தொடர்ந்து நல்குங்கள் தங்கள் ஆதரவினை!. மிக நன்றி சகோதரரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் நன்றி உறுத்துகிறது சகோதரி. ஏதும் இயலாதவராய் இருந்தோம் , இருக்கிறோம். கவிதை வடிப்பதும் கண்ணீர் வடிப்பதுமாய் .

   நீக்கு
 6. “ இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
  சுவைதொறும் சுவைதொறும் பால்காணாமல்
  குழவி தாய் முகம் நோக்க............................“
  அருமை அண்ணா!
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புறநானுற்றுக் கவிதையில் காட்டும் சோகத்தைக் காட்டிலும் கொடுமையான செய்தி இந்தப் படத்தில் விஜூ . நன்றி

   நீக்கு