வியாழன், மே 01, 2014

விற்பனைக்கு


சாராயம் வித்தீங்க
சகிச்சுக்கிட்டோம்
இட்லி தோசை வித்தீங்க
ஏத்துக்கிட்டோம்
தண்ணியையும் வித்தீங்க
தாங்கிக்கிட்டோம்

இனிமே எதை விப்பீங்க?
காத்தை பிடிச்சு
காசாக்குங்க

பத்தலைனா
எங்களை வித்துருங்க
வாங்கிக்க இருக்காங்க
வசதியா சில பேரு
ஏலாம கெடக்குறோம்
எங்கள்ள பல பேரு.

9 கருத்துகள்:

 1. சம்மட்டி அடி
  படத்தில் மட்டுமல்ல
  கவிதையிலும்...

  பதிலளிநீக்கு
 2. ஆதங்கத்தை அழகாக வெளிப்படுதியுள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு

 3. சவுக்கடி வரிகள் இதுபோல் கவிதை
  அடிக்கடி வரனும்!-வேண்டுகோள்!

  பதிலளிநீக்கு

 4. வணக்கம்!

  சின்னக் குழந்தைகள் என்ன பெருங்கொடுமை?
  என்று விடியல் இவர்க்கு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


  பதிலளிநீக்கு
 5. உம்மை கேட்டு விப்பாகளா
  உண்மை தெரியாம புலம்புலாமா

  மோடிக்கு
  அம்மா சொன்னா கேட்காது
  அமெரிக்கா சொன்ன கேட்கும்

  விலைபோனது தெரியுதா?

  பதிலளிநீக்கு