திங்கள், ஆகஸ்ட் 29, 2016

கபீரும் நானும்


.

चाह मिटी, चिंता मिटी, मनवा बेपरवाह
जिसको कुछ नही चाहिए, वो शाहेंशाह

Chaah miti, chinta miti, manwa beparwaah
Jisko kuch nahi chahiye, woh Shahenshah

“if your wishes ends, than your anxiety and trouble will also end, and your mind will be fearless. One who doesn,t need anything, he is a real king”

ஆசை ஒழிந்தால் அல்லல் ஒழியும்
   அகத்தில் ஏதடா துன்பம்?
ராசா அவனே, எதுவும் வேண்டான்!
எல்லாம் அவனுக் கின்பம்.
-------------------------------------------------------------------------------------------------------------------1.

गुरु गोविंद दोनो खड़े, काके लागू पाए
बलिहारी गुरु आपनो, गोविंद डियो बताए

Guru govind dono khade, kaake lagu paaye
Balihari guru aapno, govind diyo bataye

“Teacher and Lord are both there, whom to be adore. but teacher you are great, who told us that god is greater ”

குருவும் கடவுளும் கண்முன் நின்றால்
   கும்பிடு வதுநான் யாரை?
குருவே உமையே தொழுவேன்! கடவுளைக்
   கும்பிடச் சொன்னது நீரே.
-------------------------------------------------------------------------------------------------------------------2.

 माटी कहे कुम्हार से, तू क्यूँ रोँधे मोए….
इक दिन ऐसा आएगा, मैं रोंधूंगी तोए

Maati kahe kumhaar se, Tu kyun rondhe moye….
Ik din aisa aayega, Main rondhungi toyeee…
.
“Soil says to potter, why do you crush me. One day will come, when i will crush you ”

 என்னை இப்படிப் பிசைவது ஏனோ
  என்றே கேட்டது மண்ணும்.
உன்னைக் குயவா என்னில் பிசையும்
  ஒருநாள் வருமே இன்னும்.
-------------------------------------------------------------------------------------------------------------------3.

सुख मेी सुमरन ना किया, दुख मेी करते याद,
कह कबीर ता दस की, कौन सुने फरियाद

Sukh mei sumran na kiya, dukh mei karte yaad,
Keh kabir ta das ki, kaun sune fariyad

“You have not thanked god in your good times, but in bad time you are remembering him, Kabir says, who will then listen to your cry ”

நன்றாய் வாழ்ந்த நாளில் மறந்தாய்
  நன்றி உரைக்கும் தொழுகை.
இன்றோ துயரில் எப்படி கேட்கும்
  இறைவன் காதில் அழுகை?
-------------------------------------------------------------------------------------------------------------------4.

साई इतना दीजिए, जामे कुटुम्ब समाए,
मैं भी भूखा ना रहू, साधु भूखा ना जाए

Sai itna dijiye, ja mei kutumb samaye,
Main bhi bhukha na rahu, sadhu bhukha na jaye

“God, don’t give me too much, but enough to take care of my family, and the ones coming to me, should not go empty stomach.

இறைவா எனக்கு இத்தனை போதும்
  எந்தன் குடி பசி யாற!
இரப்போர் தமக்கு இல்லை யெனாமல்
   ஈந்திட வே வயிராற!
-------------------------------------------------------------------------------------------------------------------5.

बड़ा हुआ तो क्या हुआ जैसे पेड़ खजूर,
पंथी को छाया नही, फल लागे अति दूर

Bada hua toh kya hua jaise ped khajur,
Panthi ko chaya nahi, phal lage ati door

“What happened if you achieve heights, but you don’t have sweetness and love like Khajur tree (date), which do not yield any value either by giving shelter from sunrays and also its fruits are also far away, ”

உயர்ந்து வளர்ந்து என்ன பயன்
   உதவா ஈச்சை நிழலாய்?
இயலார்க் குதவா செல்வம், யாரும்
   எட்டா தூரப் பழமாய்!
-------------------------------------------------------------------------------------------------------------------6

रात गवाई सोए के, दिवस गवाया खाय,
हीरा जनम अनमोल था कोड़ी बदले जाए.

Raat gawai soye ke, diwas gawaya khaay,
Hira janam anmol tha kodi badle jaye.

“Whole of your life you spoilt and wasted your time by sleeping and eating only, but remember god has given you this birth to achieve heights.

உண்டு கழித்தாய் பகலை, வீணில்
   உறங்கிக் கழித்தாய் இரவை.
கண்டுணர்ந் தாயோ உன்னைப் புவியில்
   கடவுள் கொணர்ந்த வரவை.
------------------------------------------------------------------------------------------------------------------.7.
सोना  सज्जन  साधू  जन , टूट  जुड़े  सौ  बार  |
दुर्जन  कुम्भ  कुम्हार  के , एइके  ढाका  दरार  ||

Sona sajjan sadhu jan, toot Juday sow bhaar
Dhurjan kumbha kumhaar ke, aekay taakaa dharaar


Good people won’t take time to be good again even after something is done to distance them away. Gold is malleable and not brittle. Bad people won’t return and stay away forever if something happens with them. Earthen pot made by a pitcher is brittle and once broken it is broken forever.

பொன்நகை  போன்றோர் மேலோர் - தீயில் 
    பொசுக்கியும் மாறிட மாட்டார்..
மண்குடம் போன்றோர் கீழோர் - தடு 
     மாறினால் தாங்கிட மாட்டார். .
------------------------------------------------------------------------------------------------------------------8.
कबीरा  धीरज के धरे   हाथी  मन  भर  खाये 
तुक  तुक  बेकार  में  स्वान  घरे  घर  जाए 

Kabira Dheeraj Ke Dhare Haathi Man Bhar Khaaye
Tuk Tuk Bekar Me Svan Ghare Ghar Jaaye,

“As the elephat has patience it eats till its mind is satisfied.
But the impatient dog runs here and there in the hope of food. 

ஓரிடம் நின்றுண்ணும் யானை-அதன்
     உளம்போல் அமைதியாய் இருப்பீர்..
நாறிடும் இடமெலாம் ஓடும் - தெரு
      நாயின் குணமதை வெறுப்பீர்
.
-------------------------------------------------------------------------------------------------------------------9.

चली जो पुतली लौन की, थाह सिंधु का लेन |
आपहू गली पानी भई, उलटी काहे को बैन ||

Chali jo putli laun ki, thah sindhu ka len
Aaphu gali paani bhai, ulti kahe ko bain

A piece of salt entered the ocean to find its depth
It dissolved and turned into salty water, who will return to tell the depth

ஆழியில் வீழ்ந்ததாம் உப்பு, அதன் 
   ஆழம் அறிந்திட வேண்டி.
ஊழியின் முதல்வனை அறிய, நீயும்
  உனையே கரைப்பாய் வேண்டி.
-----------------------------------------------------------------------------------------------------------------10

.....தொடர்வோம் .....

சிவகுமாரன் .
சமர்ப்பணம்:
பண்டிட் கிருஷ்ணமாச்சாரி அவர்களுக்கு.


34 கருத்துகள்:

 1. கபீர்தாஸரின் தோஹே எனப்படும் கவிதைகள் இந்தியில் பிரசித்தி பெற்றவை. நம்மூர் சித்தர் பாடல்களைப் போன்றவை. ஆனால் இரண்டே வரிகளில் அரிய கருத்துக்களை அனாயசமாக சொல்லிச் செல்பவை. அவற்றை தமிழ்ப்படுத்துவது கொஞ்சம் கடினமான காரியம் தான். கபீர்தாசர் சொன்னதை , அதன் பொருளை அப்படியே சொல்வதற்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர் சொன்ன கருத்துக்களை என் மொழியில் சொல்ல முற்பட்டிருக்கிறேன். இதில் இருக்கும் ஆங்கில மொழியாக்கம் கூகுளில் இருந்து எடுத்தது. சரியான மொழிபெயர்ப்பு தானா என்றும் சொல்வதற்கில்லை. கபீர்தாசரை அறியாதவர்கள் என் கவிதைகளை ரசிக்கலாம். அறிந்தவர்கள் , கபீரை மறந்துவிடுங்கள் அல்லது என்னை மன்னித்து விடுங்கள்.

  என்னோடு இந்தி படித்த நண்பர்கள் எல்லாம் ப்ராத்மிக்-குடன் நின்று விட என்னை மட்டும் இழுத்துப் பிடித்து சொல்லிக் கொடுத்ததோடு, இன்று கபீர்தாசரை வம்பிக்கிழுக்கும் துணிச்சலை அளித்த பண்டிட் கிருஷ்ணமாச்சாரி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன் .

  பதிலளிநீக்கு
 2. https://www.youtube.com/watch?v=ixMvbjEUP-g
  Here is a beautiful rendition of Kabir's words.

  பதிலளிநீக்கு
 3. மிகச் சிறப்பாக உள்ளது
  தமிழில் கவிதை வடிவில் கபீர்தாஸின்
  கவிதைகள் இருக்கின்றனவா
  எனத் தெரியவில்லை

  இதை முழுமையாகச் செய்து முடித்தால்
  உண்மையில் அது மிகவும்
  போற்றத்தக்கதாகவே இருக்கும்

  என்னுடைய சிறு ஆலோசனையாக
  அனைத்து வரிகளும் இரு சீர் வார்த்தைக்
  (கூடுமானவரையில் மாச்சீர் மட்டும்)
  கொண்டதாகவும் இயைபுத் தொடை
  சிறப்பாக அமையுமாறும் இருக்கும்படிச்
  செய்தால் படிக்க எளிமையாகவும்
  அனைவரும் ரசிக்கும்படியும் இருக்கும்
  என நினைக்கிறேன்

  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இரமணி சார். நான் முதலில் குறள் வடிவில் தான் எழுதினேன். கபீர்தாசரின் தோகேக்களின் சுவையே இயைபுத் தொடையில் தான் இருக்கிறது..குறளில் அது சாத்தியமில்லை என்பாதால் இந்த வடிவத்தில் எழுதினேன். எதுகை மோனை இயைபுத் தொடை வருமாறு எழுதியிருக்கிறேன். தோகே மாதிரியே இருக்க முயற்சித்திருக்கிறேன். மாச்சீர் மட்டுமே வருமாறு எழுத முடியுமா தெரியவில்லை. ஒரு flowஇல் எழுதிவருகிறேன். யாப்பிலக்கணம் எல்லாம் கற்றதில்லை. சொல்லித்தர நண்பர் விஜூ இருந்தார். தற்போது ஒளிந்து கொண்டு இருக்கிறார்.
   நன்றி அய்யா.

   நீக்கு
 4. இந்தி வகுப்பில் எங்களது ஆசிரியர் சில பாடல்களை கற்றுத்தந்தார். நெடுநாளைக்குப் பின் உங்கள் பதிவு மூலமாக பொருளுடன் கண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 5. அன்பு சிவா !
  கபீரின் தொகேக்கள் ஆத்மார்த்தமானவை. முப்பது வருடங்களுக்கு முன், கல்கத்தாவில் ஒரு பஞ்சாபி பெரியவர் சனி,ஞாயிறுகளில் நாளைக்கு ஒன்றாக அற்புதமாய் உபன்யாசம்போல் சொல்வார். அதிலே வேதாந்த விளக்கங்கள் சரளமாய் வரும்.அந்த நினைவையெல்லாம் இதைப்மீ படித்து மீட்டெடுத்தேன். உன் தமிழாக்கம் தேனில் ஊறிய பலாச்சுளை. அத்தனையுமே கருத்துத் தெளிவாகவும்,இந்தி சாகித்தியத்துக்கு மிக நெருக்கமாகவும் இருக்கின்றன. வாழ்த்துக்கள் சிவா! தொடரட்டும் நற்பணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அண்ணா. எழுதும் போது தங்களை நினைத்துக் கொண்டேன்.

   நீக்கு
 6. ஆங்கிலத்தில் படித்துப் புரிந்ததைத் தமிழில் படிக்கும்போது அருமையாய் இருக்கிறது. குறிப்பாய் தொழுகையும் அழுகையும்.

  பதிலளிநீக்கு

 7. ஆஹா!கபீரின் கவிதையை தமிழில் அறியத்தந்து அசத்திவிட்டீர்கள்.தொடரட்டும் பிற கவிதை செல்வங்கள் தேடித் தரும் பணி

  பதிலளிநீக்கு
 8. கபீரின் எழுத்துகளைப் படித்ததில்லை. உங்களிந்தப் பதிவில் ஹிந்தி,ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லிடெரேஷன் ட்ராஸ்லேஷன் மற்றும் உங்கள் தமிழ் மொழியாக்கம் என்று சுவைபட எழுதி இருப்பது பாராட்டத்தக்கது

  பதிலளிநீக்கு
 9. கபீரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள். அருமை நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பிள்ளைக் குறள், காதல் வெண்பாவை அடுத்து நூல்வடிவம் பெறவேண்டியது கபீரும் நானும் (இதே மும்மொழி வடிவிலேயே)
  குறித்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, தனிக்கோப்பாகத் தொகுத்தும் வாருங்கள். தமிழ்நாடுவரும்போது உறவினரைப் பார்ப்பதுபோல் பதிப்பகத்தையும் பார்க்க வேண்டும். மறந்து விட வேண்டாம். மரபுக்கவிதையின் சிகரங்கள் வெண்பாவில் மட்டுமல்ல தாழிசைக் கண்ணியும் உங்களுக்குத் தண்ணிபட்டபாடுதான் என்பதை உணர்த்தும் உணர்ச்சிக்குவியல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது தங்கள் பின்னூட்டம். இன்னும் தொடர வேண்டும் என்னும் ஆர்வத்துக்கு வித்திட்டிருக்கிறீர்கள். என்னுடைய தயக்கமெல்லாம் நான் எந்த மொழியிலும் முழுமையாய் தேர்ச்சி பெற்றவனில்லை. தங்களைப் போன்றோரின் பேராதரவு தான் ஊக்கமளிக்கிறது. உதாரணமாய் இந்தப் பா வகைக்கு தாழிசைக் கண்ணி என்று பெயர் என்பது கூட தாங்கள் சொல்லித்தான் தெரியும்.
   தங்களின் பேராதரவிற்கு மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 11. திரு சுப்புத் தாத்தா ( Surysiva ) அவர்கள் இந்தப் பதிவிற்கான பின்னூட்டத்தை காதல் வெண்பாக்களில் இட்டுச் சென்றிருக்கிறார். என்ன செய்வது கபீரை காண வந்தவரை காதல் இழுத்துக் கொண்டு விட்டது.
  அவரது பின்னூட்டம் இதோ
  \\\\\\\\மிகவும் நுட்பமான கருத்துக்களை எளிய முறையிலே பாமர மக்களிடம் எடுத்துச் சென்றவர் கபீர்.

  கபீர் கிரந்தங்களை 1957 முதல் படிக்கத்துவங்கியது முதல் இன்று வரை படித்து, அதை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சொல்லியும் கொடுத்தும் கபீரின் மேல் எனக்குள்ள பற்று அதிகரித்துக்கொண்டே சென்றது.

  சில ஆண்டுகட்கு முன்பு கபீரன்பன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பெங்களூரு சேர்ந்த ஒரு வலைப்பதிவாளர் கபீரின் தத்துவங்களை பற்றி தொடர்ந்து எழுதி வந்தா ர் ஒரு ஐந்து வருடங்களுக்கு. அவரது பதிவுகளிலும் கபீரின் பெருமை, புலமை, பற்றி பெரிதும் எழுத, பின்னூட்டங்களின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.

  சிவகுமாரன் அவர்கள் தமது எழுத்திலே கபீரின் எண்ணங்களுக்கு ஒரு புத்துயிர் தந்து இருக்கிறார்.
  கிட்டத்தட்ட 15000 செய்யுட்களுக்கு மேலே கபீர் கிரந்தம் இருக்கிறது.
  அவற்றை பிழிந்து ரசம் தந்திட வேண்டுகிறேன்.
  தமிழ் இலக்கிய உலகிற்கு நீங்கள் செய்யும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com //////

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. http://kabeeran.blogspot.in/
   படிக்க படிக்க தெளிவு.
   புரியப் புரிய நிறைவு.

   விளங்க விளங்க உண்மை.
   களங்கமிலாதோரு வெண்மை.


   சுப்பு தாத்தா.

   நீக்கு
 12. கபீர்தாஸ் பற்றி முன்பு நிறைய படித்திருக்கிறேன். கவிதைகளை இப்போது தான் சந்திக்கிறேன்! நாலடியாரையும் விவேக சிந்தாமணியையும் படிப்பது போல இருக்கிறது. மொழிபெயர்ப்பு அருமை! குறிப்பாக அந்த அழுகையும் தொழுகையும் மிக மிக அருமை! உங்களின் தமிழ்த்தொண்டு மேன்மேலும் தொடர இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மேடம்.
   எல்லாப் புகழும் கபீர்தாசருக்கே

   நீக்கு
 13. அருமையான, எளிமையான வரிகள். மலரட்டும் மேலும் கபீரின் கருத்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் கபீர்தாசரே வந்து வாழ்த்தியதாய் எண்ணி மகிழ்கிறேன்.அகங்குளிர வணங்கி வரவேற்கிறேன்.மிக்க நன்றி.

   நீக்கு
 14. கபீரின் தோஹா எனப்படும் தத்துவார்த்தமான ஈரடிக்கவிதைகளை உங்கள் கவிதைமொழியில் பார்ப்பது சுகமாயிருக்கிறது.நீங்கள் முறைப்படி ஹிந்தி படித்தவர் என்பது இனிப்பான செய்தி. உங்களது பணி எளிதாகும்.

  திரு. முத்துநிலவன் மேலே சொல்லியிருப்பதைப்போல, புத்தகமாக இதனைக் கொணர முயலுங்கள். அந்தப் புத்தகத்தில் ஆங்கில வரிகளும் இருக்கவேண்டுமெனில், மேலே குறிப்பிட்ட கூகிள் ஆங்கிலத்தில் சீர் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.

  மொத்தத்தில் தொடரட்டும் நற்பணி.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. மிக்க நன்றி ஏகாந்தன் சார். தாங்கள் சொல்வது போல் கூகிள் ஆங்கில மொழிபெயர்ப்பு சரியில்லை. கபீரின் தோகேக்களின் நேரடிப் பொருளைத் தரும்படியாய் அது இருத்தல் அவசியம். ஏனெனில் எனது கவிதைகள் கபீரின் நேரடி மொழிபெயர்ப்பல்ல. நூலாக்கும் தருணத்தில் தங்களைப் போன்றோரின் ஆலோசனைகளை நாடுவேன். தாங்கள் உதவ வேண்டும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ஞானியரில் கபீர் ஒரு unorthodox player ! என்றும் என்னைக் காந்தமாகக் கவர்பவர். உங்களது படைப்பின் புத்தகமயமாக்கலில் எனது ஆலோசனை தேவைப்படின், அவசியம் வழங்குவேன்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் அண்ணா!

  செயற்கரிய செய்வர் பெரியர்.

  கபீர் பற்றி அறிந்ததில்லை. தோஹா என்ற சொல் எனக்குப் புதிது.
  ஹிந்தியுடன் புழங்க வேண்டிய அவசியம் இருந்தும் ஹிந்தி கற்றவனில்லை.
  நீங்கள் அளித்திருக்கும் ஆங்கில வரிகளோடு மட்டுமே தமிழாக்கத்தை ஒப்பு நோக்கிச் செல்ல முடிகிறது.

  உண்மையில் எதுகையும் மோனையும் இயைபும் பொருந்த மூலக்கருத்தினோடு ஒத்திசைய இப்படி எழுதுதல் வரம்.

  ஆங்கிலத்தை விட தங்களின் மொழியாக்கத்தை ரசிப்பதற்கு, என் மொழி என்பது மட்டும் நிச்சயம் காரணமில்லை.

  தொடருங்கள் அண்ணா!

  நன்றி

  பதிலளிநீக்கு
 18. நன்றி விஜூ
  தவமாய்க் காத்திருந்தேன் தங்களுக்காக என்று கூட சொல்லலாம்.மிகையில்லை

  பதிலளிநீக்கு