வெள்ளி, நவம்பர் 25, 2016

கபீரும் நானும் 30


हाथों परबत फाड़ते, समुन्दर घूट भराय ।
ते मुनिवर धरती गले, का कोई गरब कराय ॥

Haathon parbat faadte, samundar ghoont bharaye,
Te munivar dharthi gale, ka koi garab karaaye. 

A big mountain was lifted by hands and an ocean was packed in a jar.
The giants who made those world records are not alive 

மலையைத் தூக்கினான் ராவணன் - குடுவையில்
   மாநதி அடைத்தான் மாமுனி.
உலகே வியக்கும் சாதனை - செய்தும்
    உயிருடன் விட்டதா மேதினி?

-----------------------------------------------------------------------------------------------------------------26.

जब मैं था तब हरि नही, अब हरि है मैं नही ।
सब अंधियारा मिटि गया, जब दीपक देख्या मांहि ॥

Jab main thaa thab hari nahi, ab hari hai main nahi 
sab anthiyara miti gaya , jab dheepak dheka maahi 

When I was alive, HE was not there.HE came when I died. 
When there was sunshine , the darkness was found nowhere. 

நானங் கிருந்தேன் அவனங் கில்லை .
    நானிறந்த பின்வந்து நின்றான்.
வானம் கிழித்து வெய்யோன் வந்தபின் 
     வாட்டும் இருளோன் சென்றான் .

                             (மாற்று)

நானங் கிருந்தேன் இறையங் கில்லை .
      நான்மறைய  வந்தது இறையும் .
வானம் கிழித்து வெய்யோன் வந்ததும் 
      வாட்டும் இருளும் மறையும்.  
----------------------------------------------------------------------------------------------------------------27.

कबीर सीप समुद्र की, रहे प्यास प्यास ।
और बूँद को ना गहे, स्वाती बूँद की आस ॥

Kabir seep samuthra ki, rahe pyaas pyaas 
Aur boonth ko naa gahe , swathi boonth ki aas 

The real thirst is that of pearl shell.
Surrounding it, there is plenty of sea water,
but longing for drop from sky .

சிப்பியின் தாகமே தாகம் - விண்ணின் 
   சிறுதுளிக் கெனவே ஏங்கும் .
தப்பியும் கடல்நீர் தன்னை - தாகம் 
    தீரவோ தன்னுள் வாங்கும் ?
--------------------------------------------------------------------------------------------------------------28.

बुरा जो देखण में चला, बुरा न मिलिया कोए ।
जो मन खोजा आपणा, तो मुझ्से बुरा न कोए ॥

Bura Jo Dekhan Main Chala, Bura Naa Milya Koye
Jo Munn Khoja Apnaa, To Mujhse Bura Naa Koye

I searched for the crooked man, met not a single one
Then searched myself, "I" found the crooked one

கெட்டவன் யாரெனத் தேடிப் பார்த்தேன்.
   கெட்டவன் யாரும் இல்லை.
எட்டிநான் ஒருகணம் என்னுள் பார்த்தேன்.
   எனைவிடக் கெட்டவன் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------29.

चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
कहैं कबीर दो न मिलै, इकले दूजी डाल ॥

Chivundi chaval le chali,beech mein  mil gayi dhaal 
kahe kabir dho na milay iklay dhuji daal.

An ant can carry a single rice.
If it likes the grain in its way, it will loose both

உடலின் வலுவால் ஒற்றை எறும்பு
    ஒரேயொரு அரிசியை இழுக்கும்.
இடையில் காணும் இன்னொரு பருப்பின்
       இச்சையால் இரண்டையும் இழக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------30.
....தொடர்வோம் 

சிவகுமாரன்

10 கருத்துகள்:

 1. DISCLAIMER:
  கபீர் தோகேக்களின் நேரடி மொழிபெயர்ப்பல்ல இக்கவிதைகள். Not TRANSLATION ....but INSPIRATION.

  பதிலளிநீக்கு
 2. சிறந்த எண்ணங்களின் வெளியீடு

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் என்ன எழுதினாலும் தமிழ் இனிக்கிறது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே அருமை..
  குறிப்பாக கடைசி இரண்டும் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகின்றன!!

  பதிலளிநீக்கு
 6. மிக மிக சிறப்பாக மொழிமாற்றம்
  செய்துள்ளீர்கள்
  இந்தப் பாணியிலேயே நூலாக
  வெளிவருமாயின் மிகச் சிறப்பாக இருக்கும்
  தொடர வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே மிகச் சிறப்பு!!! அருமையான மொழிபெயர்ப்பு!! பாராட்டுகள் சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு