செவ்வாய், ஜூலை 23, 2019

காற்றோடு


மாறிக் கொண்டே இருக்கிறது
முகவரி.
அழிந்து கொண்டிருக்கின்றன
அடையாளங்கள்.
கால அலைகளில்
கரைந்து செல்கிறது
காலடிச்சுவடு.
இறுதியாய்.....
விட்டுச்செல்லும்
சாம்பலோடு
கைகுலுக்க
காத்திருக்கின்றன
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
கவிதைகள்.

சிவகுமாரன்

9 கருத்துகள்:

 1. உண்மை நிலைப்பாட்டை அழகாக சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. நெடுநாட்களுக்குப் பிறகு பார்த்ததில் சந்தோஷம்.

  மனதிலிருந்து வெளிப்போந்து வெளியுலகம் பார்த்து விட்டதே?.. அப்புறம் என்ன ஆனால் தான் என்ன?..

  பதிலளிநீக்கு
 3. மீண்டும் எழுத்தில் பார்ப்பது மகிழ்ச்சி ஏனோ விரக்தி மாதிரி தோன்றியது நான் தவறாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. அழகிய கவிதையோடு வந்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை சிவகுமாரன்

  உங்களைக் கண்டு ரொம்ப நாளாகிவிட்டதே.

  அவ்வப்போது இப்படி அழகான கவிதைகளோடு வாருங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.

  நல்ல கவிதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. அவ்வப்போது உங்கள் பக்கம்வந்து பார்ப்பதுண்டு. ஆப்பிரிக்கக் காட்டுக்குள் போனவரை ஆளையே காணோமே என்று. இன்றும் நம்பிக்கையில்லாமல்தான் வந்தேன். ஆனால் ஆச்சரியம் கவிதை வடிவில் காத்திருந்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
 8. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டான கவிதையோடுதான் வந்திருக்கீங்க ... உண்மையிலேயே கவிதை சூப்பர் ... வாழ்த்துக்கள் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு