ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

கெட்டிக்காரன் புளுகு
திட்டமிடப்பட்டு
கட்டமைக்கப்பட்ட
பொய்கள்
அரியணை ஏறி
அதிகாரம் செய்கின்றன.

முச்சந்தியில் வைத்து
முகத்திரை கிழித்து
போட்டு உடைக்காத வரை
எட்டு நாளைக்கு அல்ல
இருபது வருடமானாலும்
இற்றுப் போவதில்லை
கெட்டிக்காரன் புளுகு.

         -சிவகுமாரன்

5 கருத்துகள்:

 1. கெட்டிக்காரன் புளுகு! நீண்ட நாள் புளுகு என்று தெரிந்தும் ஒன்றும் செய்யாது இருக்கும் மனிதர்களும்!

  நல்ல கவிதை! பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. உண்மை.அருமை.கருத்தும் சொல்லிய விதமும்.

  பதிலளிநீக்கு
 3. கெட்டிக்காரன் புளுகினால் யார் கண்டு கொள்கிறார்கள்? நல்ல கவிதை பாராட்டுகள் சிவகுமாரன்!

  கீதா

  பதிலளிநீக்கு