புதன், செப்டம்பர் 29, 2010

ஹைகூ கவிதைகள் 20 (ஈழம்)

இந்தியாவின் கீழே
இரத்தத் துளி
இலங்கை.


நிலவை முத்தமிட 
நீளும் தென்னை.
ஈழக் கனவு.

அமைதிக்குழுவின்  ஆராய்ச்சிமுடிவு.
முத்திரைச் சான்றோடு
முள்வேலிகள்.

இனவாதம் தூண்டும்
இலங்கைத் துறவிகள்.
இரத்தம் மரணம் அச்சோ...மி .

ஆட்டுக்கிடைக்குள்ளும் 
அவதரிக்காதோ ஓர்நாள்
புலிக்குட்டி.

                      -சிவகுமாரன்

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக் இருக்கின்றன.
ஈழக் கவிதைகளை படிக்கும்போது நம் இயலாமை உறுத்துகிறது.
காதல் கவிதைகளில் வர்ணனை கொஞ்சம் அதிகம்,
தமிழில் பட்டம் பெற்றிருக்கிறீர்களா?

வாழ்த்துக்களுடன்
பாலா.

Unknown சொன்னது…

last one is very very very good

சிவகுமாரன் சொன்னது…

நன்றி இளமுருகா & பாலா.
தமிழில் பட்டம் பெற்றிருக்கவில்லை பாலா.
கவிதை எழுத உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்த தெரிந்தால் போதும்.
இது கடவுளின் பரிசு.

kashyapan சொன்னது…

real judgement is yet to come---kashyapan

அருண் சொன்னது…

எல்லாமே அருமை,ரெண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.