திங்கள், நவம்பர் 22, 2010

வளர்சிதை மாற்றங்கள்

வருடக் கடைசியில்
காலண்டரை
கழற்றும் போதுதான்
தெரிகிறது,
"இவ்வளவு
வெள்ளையாகவா இருந்தது
என் வீட்டுச் சுவர்?"


ஒவ்வொரு நாளும் நான்
உருமாறிக் கொண்டுதான்
இருக்கிறேன்.
அடிக்கடி
கண்ணாடி பார்ப்பதால்
என் தேகமாற்றம்
எனக்குத் தெரியாமலே
போய்விடுகிறது.

கண்கள் ஒன்று போலத்தான்,
பார்வைகள்தான் பலவிதம்.
எடை குறைக்க
நடைபயிலச் சொன்னார்
மருத்துவர்.
எத்தனை கிலோ ஏறினாலும்
இளைத்துப் போயிருப்பதாகத் தான்
சொல்வாள் அம்மா.

கிளைகளை பலரும்
கிள்ளி விடுவதால்
என்னில்
வேர்கள் மட்டுமே
வளர்ந்து கொண்டிருக்கின்றன.

வளர்ச்சி என்பது
இங்கு
கிளைகளைக் கொண்டே
கணக்கிடப் படுவதால்
நான் இன்னும்
அரைகுறையாகவே
காட்சி தருகிறேன்.

பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...?
                         
                           - சிவகுமாரன்



21 கருத்துகள்:

Unknown சொன்னது…

// வளர்ச்சி என்பது
இங்கு
கிளைகளைக் கொண்டே
கணக்கிடப் படுவதால்
நான் இன்னும்
அரைகுறையாகவே
காட்சி தருகிறேன் //

மிக ஆழமான வரிகள். என் மனதுக்குள்
ஓலித்துக்கொண்டே இருக்கிறது.

பத்மநாபன் சொன்னது…

நமக்கே தெரியாமல் நம்மில் காணும் மாற்றங்கள்....வளர்வினால் சிதைவது தெரியாமல்....
அருமையான கவிகள்..

அப்பாதுரை சொன்னது…

வெள்ளைச்சுவர் சுவாரசியம்.

Chitra சொன்னது…

பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...?


.....ஆழமான கருத்துக்கள் கொண்ட கவிதை. அருமை.

ஜீவி சொன்னது…

//பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...? //

அந்த காலண்டர் சைஸ் உள் வெள்ளையும் சரி, உள்ளே அழுந்திப் போன வேர்களின் வெக்கையும் சரி,
அருமையான வெளிப்பாடுகள்.
கதை சொல்லும் கவிதைகள்.

தினேஷ்குமார் சொன்னது…

கருத்தாழமிக்க கவிதை வரிகள்

Jana சொன்னது…

உணர்வோட்டமான வரிகள்.
//எடை குறைக்க
நடைபயிலச் சொன்னார்
மருத்துவர்.
எத்தனை கிலோ ஏறினாலும்
இளைத்துப் போயிருப்பதாகத் தான்
சொல்வாள் அம்மா//

என்றவரிகள் ஆம்..அதுதான் தாய்மை.

jeevagv சொன்னது…

வாழ்த்துக்கள்!
இயல்பாய் இருக்கும் கவிதைகள் - ஆதலால்

இயல்பாய் இனிமையும் இருக்கிறது!

test சொன்னது…

பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...?

சூப்பர் பாஸ்! :)
உங்களுக்காக மூக்குப் பேணியின் படம். நம்ம பக்கம் வாங்க!

மோகன்ஜி சொன்னது…

'ஜீ'யின் ரசனையும் மோகன்ஜியின் ரசனையும் ஒத்துபோகின்றன.
யதார்த்தமான வரிகள் சிவகுமாரன்!

Unknown சொன்னது…

உங்களுக்கு புதுக்கவிதையை காட்டிலும் மரபும், வெண்பாவும் மிகபிரமாதமாக வருகிறது. எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.. இனி தொடர்ந்து படிப்பேன்..

Unknown சொன்னது…

கிளைகளை கிள்ளிவிட கீழோர் பலர் இருக்க, ,விமோசனம் கிடைக்காதா வேர்களுக்கு?

சிவகுமாரன் சொன்னது…

வள்ளல் பெருமானாய்
வான்மழை வரும்வரையில்
பூமிக்குள் வேர்கள்
பொறுத்திருந்தால்
பட்டமரம் துளிர்க்கும்
படர்ந்து விரியும்
அசைக்க முடியா
ஆலமரமாய்.

பிரதீப் சொன்னது…

last one is good! i like it.

THOPPITHOPPI சொன்னது…

அருமையான வரிகள்

Rathesh சொன்னது…

மிகவும் அருமையான வரிகள். கலக்குறீங்க சிவா

சசிகுமார் சொன்னது…

நண்பரே தங்களின் பின்னூட்டத்தை தற்போது தான் பார்த்தேன். உங்களுடைய சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்ததா. இல்லை வேறு ஏதேனும் உதவி தேவைபடுகிறதா. தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்
www.vandheamadharam.blogspot.com

Katz சொன்னது…

arumai nanbare

நிலாமதி சொன்னது…

எத்தனை கிலோ ஏறினாலும்
இளைத்துப் போயிருப்பதாகத் தான்
சொல்வாள் அம்மா.

R. Gopi சொன்னது…

\\வருடக் கடைசியில்
காலண்டரை
கழற்றும் போதுதான்
தெரிகிறது,
"இவ்வளவு
வெள்ளையாகவா இருந்தது
என் வீட்டுச் சுவர்?"\\

சுவாரஸ்யம்

\\பட்டமரம் என்று
பலரும் தவிர்க்க
இருப்பைத் தெரிவிக்க
எட்டிப் பார்க்க
இயலுமோ
வேர்களால்...?\\

அற்புதமான கற்பனை

கோலா பூரி. சொன்னது…

கவிதைகளனைத்தும் அருமை. அதைப்பாராட்ட எதை விட என்று தெரியலை. பாராட்டுக்கள்.