திங்கள், ஜனவரி 17, 2011

அழுதுண்டு வாழ்வாரே......


கடவுள் என்பவன் கால வயலில் 
நடவு செய்ய நினைத்து ஒருநாள்
இந்த நிலத்தில் எறிந்த விதைகளில்
நந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.
மேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.
ரோட்டோ ரத்தில்  வளர்ந்தவை பற்பல.
காற்றின் கைகளில் சிக்கித் தவித்து
சேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்
விழுந்தன அவையே உலகம் யாவையும்
எழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.
நந்த வனமும்  மேட்டுப் புறமும்
எந்த சூழலில் இருந்த போதும்
சோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்
சேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.
உழவர் நாங்கள் தின்ற மிச்சமே
உலகம் உண்ட காலமும் உண்டு.
புவியை ஏரால் புரட்டிப் போட்டு
கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.
ஏர்முனைப்  பேனா எடுத்த நாங்கள்
கூர்மணற் காகிதம் குத்திக்  கிழித்து
எழுதிய கவிதைக்  கீடாய் எவரும்
எழுதிய தில்லை இல்லவே இல்லை.
இன்றோ..
சுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்
கழன்று கொண்டார் காலப் போக்கில்.
எழுதிக்  கிழிக்க ஏர்முனை  இல்லை
உழுது விளைக்க காகிதம் இல்லை.
பச்சை வயல்கள் பட்டா வாகி
மச்சு வீடாய் மாறிப் போயின.
உழுது விளைத்த உழவு மாடுகள்
அழுது போயின அறுபட கேரளம்
பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்

பிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை
உழைக்க வேண்டிய அவசியம்  இல்லை.
தலையில் அடித்து தலைவர் சொன்னார்
ஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில் 
இலவசம் தொடரும் இலவசம் தொடரும்
செலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.
ரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி
வாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.
அடுத்த வருடம் இன்னும் வசதி 
அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்
கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
தைத் திருநாளே ஆண்டின் முதலென 
வைத்தார் தலைவர் வாழ்க வாழ்க 
நாடு செழிக்க நல்லோர் வாழ 
வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் 
பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.   






46 கருத்துகள்:

  1. அம்பைத் தமிழனும், ஆம்பூர் தமிழனும்
    சிங்கப்பூருக்கு சிரைக்கப் போகிறான்! - அவன்
    விட்டுஎரியும் வெள்ளிக்காசில்
    வீடுகட்டியே மகிழ்வோம் நாமும்.!
    இதற்குப் பொறுப்பு சிவகுமரன் அவர்கள் தான்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  2. குறும்பும் குமுறலும் கவிதைக்கழகு
    குமாரன் கவிதைக்கழகு.

    பதிலளிநீக்கு
  3. சமூகத்தின் மேல் அக்கறை கொள்ளாத ஒரு கலைஞனின் எந்தப் படைப்பும் முழுமையடைவதில்லை.

    சாடுவதற்குத் தேர்ந்த மொழியும் அதிக பட்சக் கூர்மையும் தேவை.உங்களிடம் அது நிரம்ப இருக்கிறது சிவா.

    நம் பயணத்துக்கு இந்தக் கோபத்தின் மிகுதியைச் சேமித்துவைப்போம். ஆக்கப்பூர்வமான சக்திக்கு அது கைகொடுக்கும்.

    வாழ்த்துக்கள் சிவா.

    பதிலளிநீக்கு
  4. //அடுத்த வருடம் இன்னும் வசதி
    அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
    பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
    தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்
    கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
    எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.//

    இது போதும்..பொங்கல் சாப்ட மாதிரி இருந்தது....:))

    பதிலளிநீக்கு
  5. அனல் கக்கும் கவிதை... சிவா.. அற்புதம்.. ;-)

    பதிலளிநீக்கு
  6. என்ன சொல்றது பாஸ்! அருமை!!! :-)

    பதிலளிநீக்கு
  7. ஏர்முனைப்பேனா எடுத்த நாங்கள்
    கூர்மணற்காகிதம் குத்திக் கிழித்து
    எழுதிய கவிதை இல்லாதிருப்பினும்
    சீர்முனைப்பேனா கொண்டு
    தார்மீகக்கோபம் தாங்கி
    சிந்தனையை கிளரச்செய்யும்
    சிறப்புச் செல்வா சிவகுமாரா
    நீ வாழ்க வாழ்கவே.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கவிதையில் இருந்த உண்மை சுடுகிறது. உணர்வுபூர்வமான கவிதைங்க.

    பதிலளிநீக்கு
  9. போகப் போக சூடு கூடி இலவசங்களில் தொடங்கி முடியும் வரை கனலாய்க் கவிதை. அருமை.

    பதிலளிநீக்கு
  10. save the anger, sir.... intha kovam thaninthu vidaamal paarththukkollungal... don't let it saturate. makkal- indaikku 50% saturate aakivittanar. avargalinkovam- thaninthu pogaavittaalum, amaithi kandu vittathu. avanambikkaiyinaal vantha amaithi, athu. antha nilayum vendaam... we can't afford it!

    samuthaaya akkarai irukkum oru sila nabarkalin kovaththirkkum antha nilamai vara vendaam.
    save the anger, sir...

    பதிலளிநீக்கு
  11. படித்து விட்டுப் பிரமித்துப்போய் அமர்ந்திருக்கிறேன்.அருமை!

    பதிலளிநீக்கு
  12. இந்த கவிதை படித்து பார்த்து புகழ மட்டும் இல்லை . உண்மையை உணர வேண்டும். உணர்வார்களா?

    பதிலளிநீக்கு
  13. "பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
    ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்"


    ஒவ்வொரு வார்த்தையிலும் சமூகத்தின் அவலம் வேதனை.இனித் திரும்புமா என்பதும் சந்தேகம்தான் !

    பதிலளிநீக்கு
  14. அழுதுகொண்டே வாழ்வரே

    பதிலளிநீக்கு
  15. //உழுது விளைத்த உழவு மாடுகள்
    அழுது போயின அறுபட கேரளம்
    பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
    ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள் //

    தொழுது கேட்போம் ..விழுதுகளுக்காவது மண்ணை கொஞ்சம் விட்டுவைக்கச் சொல்லி...

    பழுது யார் மேல் என்றெண்ணிடாமல் பொழுது விடிய காத்திருப்போம்..

    ( சிவா...உங்கள் கவிக்கோபம் அருமை )

    பதிலளிநீக்கு
  16. //பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
    ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//

    உண்மைதான் குமரா!!..:(

    பதிலளிநீக்கு
  17. வராது போயிருந்தால் வாழ்க்கை கவிதையை வாசிக்காமல் இருந்திருப்பேன்..ங்க

    பதிலளிநீக்கு
  18. அனல் பறக்கும் கவிதை வரிகள்

    பதிலளிநீக்கு
  19. இதுபோன்ற சமூக நோக்குடன் கூடிய கவிதைகள் வாசிக்கக் கிடைப்பது
    இப்போதெல்லாம் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது
    வாழ்த்துக்கள்.தொடர்ந்து சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  20. வாழ்வியலையும் யதார்த்தத்தின் நிதர்சனத்தையும் உங்கள் கவிதை அருமையாக சொல்கிறது

    பதிலளிநீக்கு
  21. //பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
    ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//


    //எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்
    பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.//

    நான் மிகவும் ரஸித்த முத்திரை வரிகள்.

    பொங்கியெழுந்த பொங்கல் கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  22. தங்களின் “எட்டி உதை” கவிதையை படித்தேன்.
    எப்படி சார் இவ்வளவு அழகாக எழுதினீர்கள்?
    பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணின் உணர்ச்சிப் பிரவாகமாக உள்ளது.
    ஒவ்வொரு வரியின் ஆழ்ந்த கருத்துக்களும் அபாரம்.
    தங்களை என்ன சொல்லி எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை.
    அந்த [எட்டி உதைப்பது போன்ற] பாதச்சுவடு தெரியும் படத்தை எப்படித்தான் பொருத்தமாகப் பிடித்தீர்களோ ! மனமார்ந்த பாராட்டுக்கள்

    (தங்களின் varatharajsiva@gmail.com என்ற ஈ.மெயிலுக்கு தனியாக ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால் அது எனக்கே திரும்பி வந்து விட்டது. சரிபாக்கவும்]

    பதிலளிநீக்கு
  23. "..அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
    பாக்கெட்டுக்குள் பொங்கல் அடைத்து
    தூக்கிக் கொடுப்பார் தமிழின .."

    மிக அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    எம்மவர் நிலை நினைக்க கோபம் வருகிறது. சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  24. //பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
    ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்//

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  25. கவிதை அழகா இருக்கு. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  26. //புவியை ஏரால் புரட்டிப் போட்டு
    கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்//

    //பாக்கெட்டுக்குள் பொங்கல் அடைத்து//

    //எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்//

    அடிச்சு உதறுங்க சிவா...

    புத்தாண்டு வாழ்த்தை இன்றுதான் பெற்றேன்... கணினிக் கோளாறால். மகிழ்வும், நன்றியும்!!

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லாஜனவரி 20, 2011 3:00 PM

    உங்கள் கவிதையில் இருந்த உண்மை சுடுகிறது.

    பதிலளிநீக்கு
  28. காஷ்யபன் அய்யா சொன்னது

    \\\அம்பைத் தமிழனும், ஆம்பூர் தமிழனும்
    சிங்கப்பூருக்கு சிரைக்கப் போகிறான்! - அவன்
    விட்டுஎரியும் வெள்ளிக்காசில்
    வீடுகட்டியே மகிழ்வோம் நாமும்.!
    இதற்குப் பொறுப்பு சிவகுமரன் அவர்கள் தான்.-////

    சொல்லுங்கள் அய்யா என்ன கோபம் என்மேல் ?

    பதிலளிநீக்கு
  29. நன்றி அப்பாத்துரை.

    கோபத்தை சேமித்து வைப்பது நல்லதா சுந்தர்ஜி?

    உங்கள் வாழ்த்துக் கவிதைக்கு நன்றி GMB சார் .

    நன்றி மாதங்கி. கோபம் தணியாது மாதங்கி. எங்கே தணிய விடுகிறார்கள்?

    ஹேமா..நான் இங்குள்ள நிலைமையைச் சொன்ன வரிகள் உங்களுக்கு உங்கள் தாயகத்தை நினைவுப்படுதிவிட்டது. அது சொல்லொணாக் கொடுமை.

    உங்கள் பின்னூட்டக் கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரசிகமணி அண்ணா.

    நான் உங்களை சொல்லவில்லை தக்குடு. நீங்கள் ஒட்டகம் மேய்க்கவில்லை .எலி பிடித்துக் கொண்டுள்ளீர்கள். ( Mouse ) சரியா ?

    நன்றி வை.கோ. சார். உங்கள் மெயில் கிடைக்கவில்லையே?

    நன்றி நிலாமகள் உங்கள் மறு வருகைக்கு.

    உங்கள் புதிய வருகைக்கு நன்றி இளம் தூயவன்.

    நன்றி

    ஆனந்தி
    RVS
    ஜீ
    சித்ரா
    ஸ்ரீராம்
    வெங்கட்
    நாகா
    சென்னைப்பித்தன்
    சிவமணி அண்ணா
    சமுத்ரா
    கனா
    தொப்பிதொப்பி
    பிரஷா
    தாராபுரத்தான்
    ஆமினா
    ரமணி
    கவிதைக்காதலன்
    Dr .M .K .M
    வானதி
    எல்.கே.
    எஸ்.கே.
    பெயரில்லா

    நன்றி நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  30. நான் ரசித்த வரிகள்..:

    //புவியை ஏரால் புரட்டிப் போட்டு
    கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.

    பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
    தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்
    கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
    எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
    //

    உணர்வுகளின் வெளிப்பாடு வார்த்தைகளாய்.. !

    நன்றி சிவகுமாரன் அவர்களே..!

    பதிலளிநீக்கு
  31. நான் ரசித்த வரிகள்..:

    //புவியை ஏரால் புரட்டிப் போட்டு
    கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.

    பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
    தூக்கிக் கொடுப்பார் தமிழின தலைவர்
    கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
    எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
    //

    உணர்வுகளின் வெளிப்பாடு வார்த்தைகளாய்.. !

    நன்றி சிவகுமாரன் அவர்களே..!

    பதிலளிநீக்கு
  32. இறைவ‌ன் இல்லை இல்ல‌வே இல்லை
    என்ற‌வ‌ரிட‌ம் வில‌கி வ‌ந்த‌வ‌ர் சென்னார்,
    ஏழையின் சிரிப்பில் இற‌வ‌னை க‌ண்டேனென்று,
    அவரின் ‌பின் வ‌ந்தவ‌ரின் ஆசை என்றும் வேண்டும் ஏழை.

    பதிலளிநீக்கு
  33. நன்றி தங்கம் பழனி.
    நன்றி வாசன்.
    ஏழ்மையை ஒழித்து விட்டால் , பிறகெப்படி அவர்கள் அரசியல் நடத்துவதாம்?

    பதிலளிநீக்கு
  34. தாமதமாக வந்ததற்கு வருத்தப்படுகிறேன் நண்பரே....
    உணர்ச்சிகள் கொப்பளிக்க கோபம் கொந்தளிக்க சாட்டை வீசும் வரிகள் வெறும் வார்த்தைகள் அல்ல கடை எல்லையில் நிற்கிறோம் என்பதை உறுதிபடுத்துகிறது ஒவ்வொரு வரிகளும் மீள்வோமா... மீட்போமா...

    பதிலளிநீக்கு
  35. வரிகள் ஒவ்வொன்றிலும் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  36. நன்றி ஆயிஷா, தினேஷ்குமார் & மாணவன்

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் தோழர் :
    எனக்கு பிடித்த ஏர்முனை வரிகள் :

    எழுதிக் கிழிக்க ஏர்முனை இல்லை
    உழுது விளைக்க காகிதம் இல்லை.
    பச்சை வயல்கள் பட்டா வாகி
    மச்சு வீடாய் மாறிப் போயின.

    எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில்
    பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.
    ராச.கணேசன்

    பதிலளிநீக்கு
  38. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி ராசா கணேசன் .

    வந்தோம் படித்தோம் என்றில்லாமல் முன்னர் இடுகையிட்ட கவிதையையும் படித்து பின்னூட்டமிட்ட தங்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறேன் நண்பா

    பதிலளிநீக்கு