ஞாயிறு, ஜனவரி 30, 2011

அய்யோ


காத்திருக்கும் கழுகுக்கும்
படமாக்கிய கலைஞனுக்கும் 
கவிதையாக்கிய கல் நெஞ்சனுக்கும் 
யார் சொல்வது 
அது 
அவர்களுக்கான் 
இரை அல்ல என்று. 



34 கருத்துகள்:

  1. பயமாயிருக்கிறது எனக்கு.கவிதை அருமை என்று யாரும் கமென்ட் இட்டு விடுவார்களோ என்று.படத்தைப் பார்த்ததும் பகீர் என்றது. ஏதும் எழுத முடியவில்லை. எழுதாமலும் முடியவில்லை. . இந்தப் பதிவை இடுகை இடுவதும் பின்னர் நீக்குவதுமாய் இரண்டு நாட்களாய் உறக்கமில்லை எனக்கு. இந்தப் படம் விருது பெற்றதாய் யாரோ சொன்னார்கள். படமெடுத்தவன் பரிசு பெற்றான் சரி. பருக்கையிட்டானா தெரியவில்லை. சத்தியமாய்
    பாராட்டுப் பெறுவதற்காய் அல்ல பாதித்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. .
    இது கவிதையல்ல... கண்ணீர்த் துளி.

    பதிலளிநீக்கு
  2. என்ன சொல்வது நண்பரே. இந்தப் படம் எந்தச் சூழலில் எடுத்தது ? ஒருவேளை செட்டப்பாக இருக்கலாம் அல்லவா ? அப்படியே இருந்தாலும் அந்தக் குழந்தை ?(?.... குழந்தை தானா ?). மனதை உறையச் செய்கிறது படமும் கவிதையும்.( கவிதையல்ல ??//)

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் சொல்வது உண்மையா அப்பாத்துரை ?....
    வாடகைக்கு எடுத்ததா? ராதேஷ் சொன்ன மாதிரி செட்டப்பா ? எனக்குள் மிகப் பெரிய மனப் போராட்டம் இரண்டு நாட்களாய். அந்த புகைப்படக் கலைஞனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் --- பரிதாபத்தை தேடும் மனம் நானும் தானோ ? இல்லையே நான் எதையும் வாடகைக்கு எடுக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பின்னூட்டங்கள் மனதை இன்னும் பிசைகிறது அப்பாத்துரை. இப்போது என் கண்ணில் உருளும் கண்ணீரால் என்ன பயன் அந்த உயிருக்கு ?

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. வேண்டாம் அப்பாத்துரை நான் உண்மையில் இப்போது அழுதுகொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. யாருக்காக அழுத போதும் தலைவனாகலாம், சிவா.

    பதிலளிநீக்கு
  12. யாரும் யாருக்காகவும் அழக் கூடாத நிலை வாராதா ?

    பதிலளிநீக்கு
  13. என்னவாயிற்று அப்பாத்துரை? ஏன் கருத்துரைகளை எல்லாம் நீக்கி விட்டீர்கள்? மறு இடுகையிடுங்கள் ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  14. எனக்கும் புகைப்படத்தை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது...

    நீங்கள் போட்ட முதல் பின்னூட்டத்தை பதிவிலேயே எழுதியிருக்கலாம்... நல்ல வேலையாக பின்னூட்டத்திலாவது அந்த எண்ணத்தை வெளிப்படுத்தினீர்கள்... இல்லையெனில் நீங்களும் குற்றவாளி ஆகியிருப்பீர்கள்...

    பதிலளிநீக்கு
  15. சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் இப்படத்தை பார்த்தபோது மனம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளானது
    மனிதம் உலர்ந்து போனதன் அடையாளம்

    பதிலளிநீக்கு
  16. ((மவுனம் ))

    நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
    கா.வீரா
    www.kavithaipoonka.blogspot.com

    பதிலளிநீக்கு
  17. இது கவிதையல்ல... கண்ணீர்த் துளி.

    பதிலளிநீக்கு
  18. இந்த பதிவை பார்க்கும் அனைவரின் மன நிலையும்
    தங்களின் மன நிலையை ஒத்தே இருக்கும் என்பதை தவிர
    வேறென்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  19. அக் குழந்தையை நம் தேசமாக உருவகித்துக் கொள்ளலாமா சிவா...? சில மாதங்களுக்கு முன் (நவம்பர் 7 , 2010 ) உள்ளக் கமலம் வலைப்பூவில் ஒரு பதிவின் படம் கண்டு மிகப் பதறிற்று மனது. அதே பதற்றம் தங்கள் படம் மற்றும் வரிகளால். பேரழிவுகளையும் பேரழகையும் புகைப்படக்காரர் தொழில் நிமித்தம் படமெடுக்க வேண்டியிருக்கிறதே... நமக்குத் தொழில் கவிதை .

    பதிலளிநீக்கு
  20. படம் தான் உண்மை பல நாடுகளில்!படமாக்கிய கலைஞன்... நிச்சயம் பரிசுக்காக அலைந்திருக்க மாட்டான்!
    உண்மை நிலை உணர்த்தவே இருக்கும்!
    எப்படி நீங்கள் உறக்கமின்றி தவித்தீர்களோ அதே உணர்வு புகைப்பட கலைஞருக்கும் இருந்திருக்க வேண்டும்!
    எது எப்படியோ இது மாதிரியான அவலங்கள் இந்த அகிலத்தில் உருவாகாமல் இருக்க வேண்டும்!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  21. சில வருடங்களுக்கு முன் இணையத்தில் இந்தப்படத்தைப் பார்த்தபோது எனக்குப் பதறியது! புகழுக்காக கல்நெஞ்சத்துடன் சில படப்பிடிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன் இதையும் இன்னொரு அதிர்ச்சியான ஒரு படத்தையும் பார்த்தபோது!
    இப்படியும் யோசிக்கலாம்.....
    அந்தக்கழுகு - இலங்கை ராணுவம்
    குழந்தை - ......
    ....... - ......

    பதிலளிநீக்கு
  22. கவிஞனுக்கு நிச்சயம் கல் நெஞ்சமில்லை. கண்ணீர் விடும் நெஞ்சம்தான்.மற்றவரையும் தன் கண்ணீரைப் பகிர்ந்துகொள்ள வைப்பதில் தவறேதும் இல்லை என எண்ணுகிறேன்.ஆனால் ஒரு பரபரப்புக்காக இது போல் ஒரு காட்சியை எவராவது செட்அப் செய்திருந்தால் அவர்கள்தான் இதயமே இல்லாதவர்கள். கண்ணீருடன்..

    பதிலளிநீக்கு
  23. கழுகுக்கு சுதர்மம் இரை கிடைத்தால் உண்பது.. புகைப்பட கலைஞனுக்கு சுதர்மம் நேர்த்தியாய் படமெடுப்பது..கவிஞனுக்கு சுதர்மம் பார்ப்பதை கவியாய் வடிப்பது....

    பாவப்பட்டவனின் சுதர்மம் பட்டினிகிடப்பதா... அதனால் தான் பாரதி ஜகத்தினை அழிக்கச்சொன்னானோ...

    பதிலளிநீக்கு
  24. இந்த மாதிரி புகைப்படங்கள் கண்டு, நானும் ஒரு கவிதை எழுதியிருந்தேன் சிவகுமாரா.என் கோபத்தை விரக்தியாக எழுதியிருந்தேன் .”மறதி போற்றுவோம்” என்ற தலைப்பில் என் வலையில் உள்ளது. படம் அசலா செட்டப்பா என்று யோசிப்பதை விட, நம்பமுடியாத நிகழ்வுகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  25. உலகமே அக்குழந்தை.பிணி பிடித்து மனம் நொந்து மரணத்தை எதிர்நோக்கிய யாவரும் இந்தப் படத்துக்குச் சொந்தக்காரர்கள்.
    எல்லோரும் பொறுப்பாளிகள்.

    பதிலளிநீக்கு
  26. இது ஒரு பிரபலாமான புகைப்படம். ஒரு பருந்து இரைக்காக காத்திருக்க , அதனிடம் இருந்து குழந்தையை காப்பாற்றாமல் படம் பிடித்த அந்த கலைஞனை உலகம் வெகுவாக கண்டித்து விமர்சித்தது. பின்னொரு நாளில் அவன் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டான்.

    பதிலளிநீக்கு
  27. ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்ட விமானி தற்கொலை செய்து கொண்டான்.அணுகுண்டை உருவாக்கிய விஞஞானி கிருக்குப்பிடித்து செத்தான். சின்னஞ்சிறு குயுபா, அமெரிக்கக் கழுகு பர்த்துக்கொண்டுத்னே இருக்கிறோம்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  28. ’இரை அல்ல’
    சிலிர்க்க வைக்கும் ’நச்’ சென்ற வார்த்தைகள், கல்நெஞ்சையும்
    கரையச் செய்ய

    பதிலளிநீக்கு
  29. சிவா !பதைபதைக்க வைக்கும் இந்த புகைப் படத்தை எனக்கொருமுறை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்கள். இதைவிடக் கொடுமையான காட்சிகளை,ஈழத்து கொடூரங்களை நாம் பார்க்க வில்லையா? நமக்கெல்லாம் மனசு மரத்து போய்க கொண்டே இருக்கிறதோ..
    சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.வெறும் சோற்றுக்கோ இங்கே வந்ததிந்தப் பஞ்சம்!

    பதிலளிநீக்கு
  30. அன்று ஒரு பருந்து
    மனிதனிடம் சதை கேட்டது
    காரணம் தஞ்சம்

    இன்றும் ஒரு பருந்து
    மனிதனிடம் சதை கேட்கிறது
    காரணம்
    பஞ்சம்!

    பதிலளிநீக்கு
  31. இப்படி ஆயிரம் கழுகு வடிவ இயந்திர மிருகங்கள் தமிழ் குழந்தைகளை சிதைத்தன உயிர் குடித் து போயின .
    வகை வகை தொகையின்றி வன்னியில் ஈழத்தில் ...மனம் மரத்து விட்டது . என் தாயக் நினைவு களுடன்......

    பதிலளிநீக்கு
  32. அட..இப்படிக் கூட நடக்குமா? அந்த ஃபோட்டோ கலைஞன் மனிதனா? மிருகமா? ஆண்டவா என்ன கொடுமை இது?

    பதிலளிநீக்கு
  33. சொல்ல வார்த்தை இல்லை..

    மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.

    (படம் கண்கொண்டு பார்க்க முடியல....)

    பதிலளிநீக்கு