சனி, மே 05, 2012

ஹைக்கூ முத்தங்கள் 55சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
இயற்கையின் முத்தம்.

காதுகளை வருடும்
காற்றின் இதழ்கள்
இசையின் முத்தம்.
தெளிவின் கதவை
திறக்கும் சாவி
அறிவின் முத்தம்.


இருட்டு மாட்டை
விரட்டும் சாட்டை
ஒளியின் முத்தம்.

இருப்பின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவின் முத்தம்.


-சிவகுமாரன்

நன்றி:
ஈற்றடி கொடுத்து எழுதத் தூண்டிய அப்பாத்துரைக்கு

இன்னும் முத்தங்கள் பெற இங்கே செல்லவும்.

9 கருத்துகள்:

 1. எல்லாமே அழகான முத்தக்கவிதைகள்.. அருமை’
  நட்புடன்
  கவிதை காதலன்

  பதிலளிநீக்கு
 2. முத்தங்களின்
  துளிப்பாக்கள்
  அழகு சார்

  பதிலளிநீக்கு
 3. நான் முத்தங்களை வகைப்படுத்தியது வேறாய்.நீங்கள் வேறாய்...அழகுதான் எப்படியும் முத்தங்கள் !

  பதிலளிநீக்கு
 4. மிகவும் ரசித்தேன்.
  இருப்பின் கதவு - நன்று.

  பதிலளிநீக்கு
 5. முத்தக்கவிதைகள் நன்றாகயிருக்கிறது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. எல்லா முத்தங்களும் இனிக்கிறது கவிஞரே!

  பதிலளிநீக்கு
 7. முத்தமாய் இனிக்கும் கவிதைகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. மூன்றே வரிகளில்
  நச்சென்ற சிலிர்ப்பு
  உங்கள் கைக்கூ முத்தங்கள்.

  பதிலளிநீக்கு
 9. இத்தனை முத்தமிட்டு
  ஏக்கமதனை தீர்த்தவருக்குஹ
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு