வெள்ளி, மே 11, 2012

அகம்-புறம் விளம்பரம்

காந்திஜி நேருஜி
நேதாஜி ராஜாஜி
படிச்சாச்சு மறந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு
2G 3G.

காமாராஜர் ஈ.வெ.ரா,
கக்கன் ஜீவா
எல்லோரும் சும்மா
நேர்மைன்னா " ஹமாம்"

கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே
ஆசை அறுமின்
எழுமின் விழிமின்
அன்பே சிவம்
அச்சம் தவிர்
கேட்டது போதும்
கெட்டது போதும்
கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
சூரியன் FM 93.5

பஸ் கட்டணம் உயர்வு
பால்விலை ஏற்றம்
கல்விக் குளறுபடி
கரண்டுக்கு அடிதடி
எல்லாம் "கூல்"
ரேடியோ மிர்ச்சி
செம "ஹாட்" மச்சி.


தன்னம்பிக்கை உழைப்பு
நேர்மை திறமை
எல்லாம் தூக்கி
குப்பையில போடு
ஃபேர் & லவ்லி அள்ளிப் பூசு.
ஆறே வாரத்தில்
சிவப்பாகிக் காட்டு
அத்தனை பேரையும்
ஜெயித்துக் காட்டு.


குடல் கருகுது
குண்டி காயுது
உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்.
உரிமைப் போராட்டம்
உரக்க அழைக்குது
கல்யாண் ஜூவல்லர்ஸ்.


சத்யம் சிவம் சுந்தரம்.
சர்வம் -மீடியா -விளம்பரம்.

-சிவகுமாரன்

14 கருத்துகள்:

 1. பொருளில்லா விளம்பரம் பொருள் சேர்க்கப் போடுகின்றார்!

  யார் கேட்பது? யாரைக் கேட்பது?

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. மிகவும் ரசித்தேன்.
  நேர்மைன்னா " ஹமாம்" ?

  பதிலளிநீக்கு
 3. நேர்மைன்னா ஹமாம் .- என்பது ஒரு குளியல் சோப்பின் விளம்பர வாசகம் அப்பாஜி.

  பதிலளிநீக்கு
 4. முதலும் முடிவும் அபாரம் சிவா(ஜி)! ரசித்தேன். :-)

  பதிலளிநீக்கு
 5. பற்பொடி விளம்பரத்திற்கு பல்லில்லாத தாத்தா படம் சூப்பர்ங்க கவிஞரே!

  பதிலளிநீக்கு
 6. குழந்தைகளின் மனதில் நஞ்சினை விதைக்கும் விளம்பரங்கள், உண்மையைப் பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி திரித்துவிடப்படும் செய்திகள், குடும்பநேரங்களை விழுங்கி ஏப்பம்விடும் மெகாதொடர்கள், மொத்தமாய் மன அமைதியைக் குலைக்கும் ஊடகவர்த்தகயுத்திகள்! அத்தனைக்குமான ஊசிக்கவிதைகள். உள்ளங்கவர் கவிதைகள். பாராட்டுகள் சிவகுமாரன்.

  பதிலளிநீக்கு
 7. இப்போதெல்லாம் களைக்குள் இருப்பது நாத்து
  என்கிற நிலைதானே எல்லா விஷயத்திலும்..
  மனம் கவர்ந்த அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. சிவகுமரன்..

  இன்றைய தேசத்தின் அவலத்தை எத்தனை எளிமையாயும் ஆழமாய் பதியவேண்டும் உத்தியுடனும் எத்தனை நகைச்சுவையுடனும் மனதில் பதிய வைத்துவிட்டீர்கள். மனசுறுத்துகிறது. என்ன சொல்லி என்ன செய்ய.. நல்ல விதைக்குக்கூட விளம்பரம்தான் தேவைப்படுகிறது அதன் பெயரை விதையென்று சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 9. த‌மிழ‌க‌ இருட்டும், அம்மாவின் ஓராண்டுகால‌ அர‌சின் சாதணையாய் 2ப‌க்க‌ நாளித‌ழ் விள‌ம்ப‌ர‌ங்க‌ளாய் (நாட்டுக்கு ந‌ட்ட‌ம்: 25 கோடி. விள‌ம்ப‌ர‌ம் என்ப‌து குர‌ங்கை, பிள்ளையார் என்ப‌து. (பிடிக்க‌ நின‌த்த‌தென்ன‌வோ பிள்ளையார்தான்)
  நிற‌ விள‌ம்ப‌ர‌ம் ஒரு சாட்டை அடிதான்.சூப்ப‌ர் அன்பு சிவ‌குமார்.

  பதிலளிநீக்கு
 10. விளம்பரத்தை கண்டு
  வீழ்ந்து விடாமல்
  விவராமாய் கூறியதற்கு

  நன்றி

  பதிலளிநீக்கு
 11. "ஹமாம்" என்றால் இந்தியில் "குளியலறை "என்று பொருள்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 12. பதிவுகளில்
  பத்திய வைக்கிறது
  எதார்த்தத்தின்
  எச்சங்கள் ...............ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 13. ரசிக்கவும் வைத்து சிந்திக்கவும் தூண்டுகிறது தங்கள் எழுத்து!

  பதிலளிநீக்கு